10.ஆம் வகுப்பு-தமிழ்
அரசு பொதுத்தேர்வு-மாதிரி வினாத்தாள்
தமிழாசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வணக்கங்கள்.
கொரோனா தோற்று குறையத் தொடங்கியதன் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொது தேர்வு நிச்சயமாக நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.அதன் காரணமாக, பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்புதல் தேர்வுகள் மற்றும் அரசுப் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
ஆகையால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் பாடத்தில் அரசு மாதிரி வினாத்தாள் எவ்வகையில் அமைந்திருக்கும்? அதில் என்னென்ன வினாக்கள் கேட்கப்படும்? எந்தந்த வினாக்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்படும்? நடக்க இருக்கின்ற முதல் திருப்புதல் தேர்வு அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாளின் அடிப்படையில் அமைந்திருக்குமா? உள்ளிட்ட பல கேள்விகள் குறித்த ஆலோசனைகள் இந்த இணைய வகுப்பில் அளிக்கப்படும்.
மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு போன்று வினாத்தாள் அமைப்பு இருக்கும் என்பதால் இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
ZOOM செயலி வழியே இந்த இணைய வகுப்பு நடைபெறும். முதலில் இணையும் 100 மாணவர்கள் மட்டுமே ZOOM வழியாக இணைய முடியும். வாரி இணைய முடியாதவர்களுக்காகத் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் அந்த இணைய வகுப்பானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இணைய வழிப் பயிற்சி
நாள் : 31-01-2022
நேரம் : மதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை
பாடம் : 10.ஆம் வகுப்பு-தமிழ்-
அரசு மாதிரி வினாத்தாள்
பயிற்சியில் இணைய........
ZOOM
ZOOM
USER ID : 82678423097
PASSCODE : 123456
ZOOM ல் இணைய முடியாத மாணவர்கள் நேரலையில் பாடத்தைக் கவனிக்கலாம்.
நேரலை 3.05 மணிக்குத் தொடங்கும்