10 TH STD -TAMIL -MODEL LESSON PLAN (FEBRUARY 1 ST WEEK)

10.ஆம் வகுப்பு -தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

வகுப்பு: 10.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: உரைநடை உலகம் - சங்க இலக்கியத்தில் அறம்

                         கவிதைப்பேழை -காலக்கணிதம்

நாள்: 01-02-2022  முதல் 05-02-22  வரை

பொது நோக்கம்:

@ அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப்பொருளறிதல் 

@ கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்படும் கருத்தை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்

சிறப்பு நோக்கம்:

# சங்க இலக்கியங்களில் அறமானது எந்தெந்த வடிவங்களில் எல்லாம் பாடப்பட்டது என்பதை அறிந்து கொள்ளுதல்

எவ்வெவையெல்லாம் அறங்களாகக் கருதப்பட்டன என்பதையும் உணர்ந்து கொள்ளுதல்

# கவிஞர் கண்ணதாசனைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

# கவிஞன் என்பவன் யார்? அவன் குணம் என்ன?அவன் பணி என்ன? என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்ளுதல்.

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  கடையேழு வள்ளல்கள் யார்? என்ற வினாவைக்கேட்டு, அவர்கள் கொடை எனும் அறத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தார்கள்  என்பதை விளக்கி,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

Ø  கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றினைப்பாடி  பாடத்தினை அறிமுகம் செய்தல் 

கற்பித்தல் துணைக்கருவிகள்:

      வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம்,பாடநூல்,சுண்ணக்கட்டி, கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.

பாடப்பொருள் சுருக்கம்:

    சங்க இலக்கியத்தில் அறம்:

@ அறத்தில் வணிகநோக்கம் கூடாது.

@ அரசியலிலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

@  அறங்கூறும் அவையங்கள் சங்க காலத்திலேயே இருந்துள்ளன

@  போர்,பிறருக்கு உதவுதல்,உண்மை பேசுதல் முதலியவை அனைத்திலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

   காலக்கணிதம்:

ü  கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா

ü சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார்.இவரது பெற்றோர் சாத்தப்பன்,விசாலாட்சி

ü கண்ணதாசனின் சேரமான் காதலி நூலுக்காக சாகித்ய அகாதமி பரிசு வழங்கப்பட்டது

ü   திரையுலகிலும் இலக்கிய உலகிலும் தனிச்சிறப்புடன் விளங்கியவர் கண்ணதாசன்.

ü  கவிஞர்கள் காலத்தை நன்றாகக் கணிக்கக் கூடியவர்கள்.

ü  எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் தனது மனதில் பட்டதை கவிதையாக வடிக்கக் கூடியவர்கள்.

ü  படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் இறைவனுக்கு அடுத்தபடியாகச் செய்யக்கூடியவர்கள்.

ü  காலத்தின் தொடக்கம், முடிவு அனைத்தும் கவிஞர்களே.


ஆசிரியர் செயல்பாடு:

§  நிகழ்காலச்சான்றுகள் தற்கால அறத்தின் நிலையைப் பற்றி விளக்க முற்படுதல்

§  பாடத்தில் இடம்பெற்ற அறங்களுக்கு உகந்த காணொளிகளைக் காண்பித்தல்

§  கவிஞர்களின் இயல்புகளை தகுந்த சான்றுகள் மூலம் விளக்குதல்.

§  இலக்கணக்குறிப்பு பிரித்தெழுதல் பகுபத உறுப்பிலக்கணம் ஆகியவற்றை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தல்

மாணவர் செயல்பாடு:

Ø  சங்ககாலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அரங்கில் தற்காலத்திலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்

Ø  தற்காலத்தில் அறத்தின்  நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுதல்

Ø கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்படும் கருத்தை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்  

கருத்துரு வரைபடம்:

சங்க இலக்கியத்தில் அறம்


வலுவூட்டல்:

      விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  சிறந்த அறங்கூறவையம் எங்கே இருந்தது?

Ø  அறத்தில் வணிக நோக்கம் கொள்ளக்கூடாது என்று கூறியவர் யார்?

Ø  காவிதின் மாக்கள் என்று அழைக்கப்படுபவர் யார்?

Ø  கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

Ø கண்ணதாசன் எங்கு பிறந்தார்?

Ø   கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?

தொடர்பணி:

#      சங்க இலக்கியத்தில் அறம் என்ற பாடப்பகுதியை கட்டுரையாக எழுதிவரச்செய்தல்.

#     காலக்கணிதம் மனப்பாடச்செய்யுளை மனப்பாடம் செய்து வரச்செய்தல். 

 









1 கருத்துகள்

நன்றி

புதியது பழையவை