எட்டாம் வகுப்பு -தமிழ்
குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான வினா விடைகள்
இயல்-1 தமிழ்மொழி வாழ்த்து
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்- வைப்பு
2.என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- என்றும்+என்றும்
3.வானமளந்தது சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -வானம்+அளந்தது.
4.அறிந்தது+ அனைத்தும் என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- அறிந்ததனைத்தும்.
5.வானம் +அறிந்த என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- வானமறிந்த.
தமிழ்மொழி வாழ்த்து பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
வாழ்க-வானமளந்த
வாழிய-வாழ்க
எங்கள்- என்றென்றும்
வண்மொழி- வளர்மொழி
குறுவினா
1.தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?
விடை: தமிழ் நிலப் பகுதி முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது.
2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
விடை:தமிழ் வானம் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்து வளர்கிறது.
சிறுவினா:
தமிழ் மொழியை வாழ்த்தி பாரதியார் கூறும் கருத்துக்களை எழுதுக.
விடை:
எல்லாக் காலத்திலும் நிலையாக வாழும் தமிழே வாழ்க!
அனைத்தையும் அறிந்து சொல்லும் உலகப் புகழ் கொண்ட தமிழே வாழ்க!
உலகத்தின் அறியாமை இருளை அகற்ற வந்த தமிழே வாழ்க!
பொருந்தாத பழமைகளை அகற்றி புதுமைகளை ஏற்று தமிழே வாழ்க!
வானம் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் தன்மையை அறிந்து வளரும் தமிழே வாழ்க!
சிந்தனை வினா:
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி.
உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி.
மற்ற எவற்றுடனும் ஒப்பிட முடியாத இலக்கண இலக்கியங்களைக் கொண்ட மொழி.
பழமை முதல் புதுமை வரை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கக் கூடிய சிறந்த மொழி.
எனவே பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.
இயல்-1 தமிழ் வரிவடிவ வளர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1.தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற —-- காரணமாக அமைந்தது -அச்சுக்கலை
2.வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து—----- என அழைக்கப்படுகிறது- வட்டெழுத்து.
3.தமிழ் எழுத்துச் சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர்- தந்தை பெரியார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக
1.கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் —----- என அழைக்கப்பட்டன - கண்ணெழுத்துகள்.
2.எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைத் களைந்தவர் - வீரமாமுனிவர்.
குறுவினா:
1.ஓவிய எழுத்து என்றால் என்ன?
விடை: பொருட்களின் ஓவிய வடிவமாகவே எழுதப்பட்ட எழுத்துகளே ஓவிய எழுத்துகள்.
2.ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
விடை: ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என்று உருவான நிலையே ஒலி எழுத்து நிலையாகும்.
3. ஓலைச் சுவடிகளில் நேர் கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
விடை: நேர் கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதும்போது ஓலைச்சுவடிகள்கிழிவதற்கு வாய்ப்புகள் உண்டு.
4. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்து சீர்திருத்தம் எவையேனும் இரண்டினை எழுதுக.
விடை:
எ,ஒ ஆகிய எழுத்துக்களில் புள்ளிகள் இட்டு எழுதப் படுவதால் ஏற்படும் குழப்பங்களை களைந்தார்.
எ,ஒ ஆகிய எழுத்துக்களின் நெடில் எழுத்துகளை புள்ளிகள் இட்டு எழுதாமல், தற்போது இருக்கும் எழுத்து வடிவத்தை உருவாக்கினார்.
தற்போது இருக்கும் எழுத்து வடிவத்தை உருவாக்கினார்
சிறுவினா:
1.எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
நேர் கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதும்போது ஓலைச்சுவடிகள்கிழிவதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஓலைச்சுவடிகளில் பத்தி பிரித்தல், நிறுத்தற்குறிகள் ஆகியவை கிடையாது.
ஓலைச்சுவடிகளில் புள்ளிகள் இடம்பெறும் போது அவை சரியாகத் தெரியவில்லை எனில், அங்கு உயிர்மெய், குறில், நெடில் ஆகியவற்றை வேறுபடுத்தி அறிவது சிரமமாகிறது.
2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுத்தப்படுகிறது.
ஐகாரத்தைக் குறிக்க இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இணைக்கொம்பு பயன்படுத்தப்படுகிறது.
குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் மாறிவிட்டது
நெடுவினா:
எழுத்துக்களின் தோற்றம் குறித்து எழுதுக.
பழங்கால மனிதன் தனக்குப் பின்னால் வரும் தலைமுறையினருக்கு தனது கருத்துக்களை தெரிவிக்க விரும்பினான்.
பாறைகளிலும் குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையாகும்.
பொருட்களின் ஓவிய வடிவமாகவே எழுதப்பட்ட எழுத்துகளே ஓவிய எழுத்துகள்.முதலில் ஓவிய எழுத்துகள் தோன்றின.
பின்னர் ஒலி எழுத்து நிலை தோன்றியது.
இவ்வாறு படிப்படியாக எழுத்துக்கள் தோற்றம் பெற்றுமொழியின் வளர்ச்சிக்கு உதவின.
சிந்தனை வினா:
1.தற்காலத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும்.
பெயர்ப்பலகைகள் கட்டாயம் தமிழிலேயே இடம்பெறவேண்டும்.
அரசின் அனைத்து அலுவலகங்களிலும் தமிழே பயன்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
2. தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து கலந்துரையாடவும்.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழருக்கு தனி எழுத்து இல்லை என்ற நிலை உருவாகிவிடு.
தற்காலத்தில் இணையத்தில் அதிகம் தேடப்படும் மொழிகளில் தமிழும் ஒன்று.
தமிழுக்கு என்று ஏகப்பட்ட எழுத்துருக்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. தட்டச்சு செய்வோரும் இணையத்தில் தேடுவோரும் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்துவதன் மூலம் தமிழுக்கு ஏற்படும் தீமைகளை நாம் தவிர்க்கலாம்.
இயல்-1 எழுத்துகளின் பிறப்பு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் உயிர்கள் - உ,ஊ
2.ஆய்த எழுத்து பிறக்கும் இடம் - தலை
3.வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்- மார்பு
4.நாவின் நுனி அன்னத்தின் நுனியைப் பொருத்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் - ட்,ண்
5.கீழ் இதழும் முதல் வாய்ப்பிலும் இணைவதால் பிறக்கும் எழுத்து- வ்
பொருத்துக:
1.க்,ங் -நாவின் முதல் ,அண்ணத்தின் அடி
2.ச்,ஞ் - நாவின் இடை அண்ணத்தின் இடை
3.ட்,ண் - நாவின் நுனி, அன்னத்தின் நுனி.
4.த்,ந் - நாவின் நுனி, மேல்வாய்ப் பல்லின் அடி
சிறுவினா:
1.எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
விடை: உயிரின் முயற்சியால் உடலில் உள்ளிருந்து எழும் காற்று, மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களில் ஒன்றில் பொருந்தி இதழ்,நாக்கு,பல்,மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலியாகப் பிறக்கும் இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
2. மெய்யெழுத்துக்கள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
விடை: வல்லின மெய்கள்- மார்பு , மெல்லின மெய்கள்- மூக்கு, இடையின மெய்கள் -கழுத்து.
3. ழகர லகர ளகர மெய்களின் முயற்சி பிறப்பு பற்றி எழுதுக.
விடை:
ழகர மெய் மேல் வாயை நாக்கின் நுனி வருவதால் பிறக்கிறது.
லகர மெய் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
ளகர மெய் மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுவதால் பிறக்கிறது.