தனித்தமிழ்ச்சொற்கள் அறிவோம்
உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியில் எண்ணற்ற பிறமொழிச்சொற்கள் பல்வேறு காரணங்களால் கலந்திருந்தாலும், தமிழ் அதன் தனித்தன்மையை என்றுமே இழந்ததில்லை. ”பிறமொழிச்சொற்கள் அனைத்தையும் தமிழ் மொழியிலிருந்து நீக்கி விட்டாலும் தமிழ் தனக்கே உரிய தனிச்சிறப்புடன் இயங்க வல்லது” என்கிறார் பரிதிமாற்கலைஞர் எனும் பேரறிஞர். இங்கு தமிழில் கலந்த பிறமொழிச்சொற்களையும், அவற்றை நாம் அறிந்து கொண்டதை உறுதிப்படுத்த வினாடி வினா தேர்வும் இப்பதிவில் உள்ளன.
சொற்கள் அனைத்தையும் நன்கு படித்த பின்னர்,இறுதியில் வினாடி வினாவுக்கான இணைப்பு இருக்கும். வினாடி வினாவில் பங்கேற்று 60% மதிப்பெண் பெறுவோருக்கு, அவரவர் மின்னஞ்சலுக்கு இலவச மின்சான்றிதழ் அனுப்பப்படும்.
தெலுங்கு- தமிழ்
ஆஸ்தி- செல்வம்
எக்கச்சக்கம்-
மிகுதி
கெட்டியாக- உறுதியாக
சந்தடி- இரைச்சல்
சாகுபடி- பயிரிடுதல்
சொகுசு-நேர்த்தி
சொந்தம்- உரிமை
தாராளம்- மிகுதி
நிம்மதி- கவலையின்மை
பண்டிகை- பெருநாள்
அரபு- தமிழ்
அசல்- முதல்
கஜானா- கருவூலம்
இனாம்- நன்கொடை
சவால்- அறைகூவல்
சாமான் -பண்டம்
ஜாஸ்தி- மிகுதி
நகல்- போலி
பதில்- மறுமொழி
பாக்கி- நிலுவை
மாமூல்- வழக்கம்
பாரசீகம்-தமிழ்
அலாதி- தனி
கம்மி- குறைவு
சர்க்கார்- அரசு,அரசாங்கம்
சந்தா- கட்டணம்.
தயார்- ஆயத்தம்
கிஸ்தி-வரி, நிலவரி
குமாஸ்தா- எழுத்தர்
புகார்- குறை
ரஸ்தா- சாலை
வாபஸ்- திரும்பப்
பெறுதல்
பிரெஞ்சு- தமிழ்
பீரோ- அலுவலகம்
ஒப்பித்தால்-
மருத்துவமனை
எகோல்- பள்ளிக்கூடம்
கம்ராத்- தோழன்
கிஸ்தியோன் - கேள்வி
திரக்தர்- இயக்குநர்
கப்பிதோன் - தளபதி
சொல்தா- இராணுவ வீரர்
கொலேழ்- கல்லூரி
முசியே- அய்யா
ஆங்கிலம் - -தமிழ்
சினிமா - திரைப்படம்
பஸ் -பேருந்து
டிபன் -சிற்றுண்டி
டாக்டர்-மருத்துவர்
ஃபேன்- மின் விசிறி
ரேடியோ- வானொலி
வாட்ச் - கடிகாரம்
சோப்- வழலைக் கட்டி
லைட்- விளக்கு
டிக்கெட்- சீட்டு
வடசொல் -- தமிழ்ச்சொல்
அகம்பாவம்- தற்பெருமை.
அக்கிரமம்-முறைகேடு
அசுத்தம்-
துப்புரவின்மை
அதிகம்- மிகுதி
அனுக்கிரகம்- அருள்
அபிவிருத்தி- வளர்ச்சி
அவசரம்- விரைவு
ஆகாரம் -உணவு
ஆசை- விருப்பம்
ஆதாரம்- அடிப்படை
ஆரம்பம்- தொடக்கம்
இந்திரியங்கள்-ஐம்பொறிகள்
இரசிகன் - சுவைஞன்
இருதயம்- உள்ளம்
இலட்சியம்- குறிக்கோள்
உஷ்ணம்- வெப்பம்
உதாரணம்-
எடுத்துக்காட்டு
உபயோகம்- பயன்
ஏகாந்தம்- தனிமை
கருணை- இரக்கம்
கல்யாணம்- திருமணம்
கிரயம்- விலை
கும்பம்- குடம்
சகோதரன் - உடன் பிறந்தான்
சங்கீதம்-இசை
சமாதானம் - அமைதி
சர்வகலாசாலை- பல்கலைக்
கழகம்
சீக்கிரம்-விரைவு
சீலம்- ஒழுக்கம்
சுகந்தம்- நறுமணம்
சொப்பனம்- கனவு
ஞாபகம்- நினைவு
தருமம்- அறம்
தூரம்- தொலைவு
தேசம்--நாடு
நவீனம்.புதுமை/புதினம்
நாமம்- பெயர்
நிபந்தனை- கட்டுப்பாடு
பயம்- அச்சம்
பரம்பரை- தலைமுறை
பிரசுரம்- வெளியீடு
பிரபஞ்சம்- உலகம்
பிரயாணம்- பயணம்
பேதம்- வேற்றுமை
மகிமை- பெருமை
முத்தி/முக்தி-
வீடுபேறு
வயோதிகம்- முதுமை
வாலிபம்- இளமை
விவசாயம்- வேளாண்மை
வேதம்-மறை
சிறப்பு வினாடி வினாவில் பங்கேற்க