எட்டாம் வகுப்பு -தமிழ்
குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான வினா விடைகள்
இயல்-2 ஓடை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.பள்ளிக்குச் சென்று கல்வி —----- சிறப்பு - பயிலுதல்
2.செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கு ஏற்ப உழவை மீட்டுவது - ஓடை
3.நன்செய் எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - நன்+செய்
4.நீளுழைப்பு எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -நீளுழைப்பு.
5.சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் - சீருக்கு+ஏற்ப.
6.ஓடை+ஆட என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் - ஓடையாட
குறுவினா:
1.ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
விடை: ஓடை, கற்களில் உருண்டும் தவழ்ந்தும் சலசல என்று உறுதி செய்யும் ஓடுகிறது என்று வாணிதாசன் கூறுகிறார்.
2.கோடை விடுமுறைக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்?
விடை: வழிபாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவைவை ஒலியை உவமையாகக் கூறுகிறார்.
சிறுவினா:
1.ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
நீர் வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
இரக்கமில்லாதவர் நாணும் வகையில் இடையறாது ஓடி தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
சிந்தனை வினா:
1.வள்ளைப்பாட்டு என்பது நெல் குத்தும்போது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்த சூழலில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
ஏற்றப்பாடல்- நீர் இறைக்கும்போது பாடப்படுவது.
ஏர்ப்பாடல்- வயலில் ஏழ் உழும்போது பாடப்படுவது
தாலாட்டு -குழந்தையைத் தொட்டிலில் இட்டு பாடுவது.
அறுவடைப் பாடல் - பயிரை அறுவடை செய்யும்போது பாடுவது.
இயல்-2 வினைமுற்று
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1.மாடு வயலில் புல்லை மேய்ந்தது -இத்தொடரில் உள்ள வினைமுற்று - மேய்ந்தது.
2.பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று - படித்தார்.
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் - செல்க.
சிறுவினா:
1.வினைமுற்று என்றால் என்ன?
விடை: பொருள் முடிவு பெற்ற வினைச்சொல் வினைமுற்று எனப்படும்.
2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
விடை: தெரிநிலை வினைமுற்று செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றைக் காட்டும்.
(எ-டு) கட்டுரை எழுதினாள்
செய்பவள் - உயர்திணை(பெண்)
கருவி - எழுதுகோல்
நிலம் - பள்ளி
செயல் - எழுதுதல்
காலம் - இறந்த காலம்
செய்பொருள் - கட்டுரை.
3.வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
விடை: க,இய,இயர்
4.ஏவல் வினைமுற்றுக்கும்,வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
இயல்-2 திருக்குறள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.புகழாலும்,பழியாலும் அறியப்படுவது - நடுவுநிலைமை
2.பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்கள் - கல்லாதவர்
3.வல்லுருவம் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - வன்மை +உருவம்
4.நெடுமை+தேர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -நெடுந்தேர்.
5.வருமுன்னர் எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை+அணி.
குறுவினா:
1.சான்றோர்க்கு அழகாவது எது?
விடை: துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.
2.பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
விடை: தனது குற்றத்தை நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்பவ ன் பழியின்றி வாழ்வான் என்று திருக்குறள் கூறுகிறது.
3.” புலித்தோல் போர்த்திய பசு” என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?
விடை: மன அடக்கம் இல்லாதவர் மேற்கொண்ட தவமானது, புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்தது போன்றது.
திருக்குறளைச் சீர் பிரித்து எழுதுக:
1.தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
2.தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
1.வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
2.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
சீர்களை முறைப்படுத்தி எழுதுக:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.
படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக:
1.வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
2.கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.