அலகுத்தேர்வு
வினாத்தாள்- இயல் 5
பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்-50
(அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க)
அ) பலவுள் தெரிக:-
1)அருந்துணை என்பதைப் பிரித்தால்-
-------------என வரும்
அ)அரு+துணை ஆ)அருமை +துணை இ)அருமை+இணை ஈ)அரு+இணை
2)’இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’ இன்று வழிப்போக்கர்
கேட்பது----------வினா.
‘அதோ அங்கு நிற்கும்’ என்று மற்றொருவர்
கூறியது--------------விடை
அ)ஐய வினா,வினா எதிர் வினாதல் ஆ)அறியா வினா,மறை விடை
இ)அறியா வினா,சுட்டு விடை ஈ)கொளல் வினா,இனமொழி விடை
3) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெரு்ளை” -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது
அ)தமிழ் ஆ)அறிவியல் இ)கல்வி ஈ)இலக்கியம்
4)அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
- இவ்வடியில் பயின்று வரும் தொடை
அ)எதுகை ஆ)மோனை இ)இயைபு ஈ)முரண்
5) பெருமாள்
திருமொழியில்------- பாடல்கள் உள்ளன
அ) 105 ஆ) 104 இ) 205 ஈ) 106
6)சதம் என்ற சொல்லின்
பொருள்
அ)விளையாட்டு ஆ)கேடயம் இ)ஆயிரம் ஈ)நூறு
7) ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு
விடை அளிப்பது------
அ)தசாவதானம் ஆ)சதாவதானம் இ)பதின்மம் ஈ)பதின் கவனம்
8)செய்குத்தம்பி
பாவலர்----------என அழைக்கப்படுகிறார்
அ)நாஞ்சில் கவிஞர் ஆ)மக்கள் கவிஞர் இ)சதாவதானி ஈ)தசாவதானி
9)வினா---------- வகைப்படும். அ)ஆறு ஆ)ஏழு இ)எட்டு ஈ)ஒன்பது 10)விடை----------- வகைப்படும்
அ)ஆறு ஆ)ஏழு இ)எட்டு ஈ)ஒன்பது 11) தான் அறியாதஒன்றை அறிந்து கொள்வதற்காக
வினவுவது---------வினா
அ)அறியா வினா ஆ)ஐய வினா இ)ஏவல் வினா ஈ)அறிவினா
12)’பறந்தது வண்டா? பழமா? எனக் கேட்பது------------வினா
அ)அறிவினா ஆ)அறியா வினா இ) ஏவல் வினா ஈ) ஐய வினா
13)பிறருக்கு ஒருபொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது------வினா
அ) கொளல் வினா ஆ) கொடை வினா இ) ஏவல் வினா ஈ) அறியா வினா
ஆ) குறு வினா
14.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-
15. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக்
குறிப்பிட்டுக்
காரணம் எழுதுக.
16.இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம்
இருக்கிறது?
இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!
மின்சாரம்
இருக்கிறதா?இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
17.அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
இ) சிறு வினா
18. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி
வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை
எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
19. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.இதில் அமைந்துள்ள
பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
20.”அருளைப்பெருக்கி…” எனத்தொடங்கும் நீதிவெண்பாப் பாடலை அடிமாறாமல்
எழுதுக.
5 மதிப்பெண் வினாக்கள்:
21.காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக.
22)மொழி
பெயர்க்க:
அ.LUTE
MUSIC ஆ.CHAMBER இ.TO LOOK UP ஈ.GRAND DAUGHTER உ.ROTE
23)நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
பொதுக்கட்டுரை:
24)பள்ளி ஆண்டு
விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை
நூலுக்கு மதிப்புரை எழுதுக
குறிப்பு- நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும்
கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.
வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க