அலகுத்தேர்வு வினாத்தாள்- இயல் 4
பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்-50
(அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க)
அ) பலவுள் தெரிக:-
1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ)
இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
2. குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப்
பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில்
இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி ஆ)
இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி ஈ)
கால வழுவமைதி, இட வழுவமைதி
3)’வாளால் அறுத்துச்
சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன்
போல்-இவ்வடியில் மருத்துவர்,நோயாளன் முறையே
அ)குலசேகர ஆழ்வார்,இறைவன் ஆ)இறைவன்,குலசேகர ஆழ்வார்
இ) நப்பூதனார் ,இறைவன் ஈ) இறைவன், நப்பூதனார்
4)குலசேகர ஆழ்வார் உய்யவந்த பெருமாளை எவ்வாறு உருவகித்துப் பாடுகிறார்?
அ)அன்னையாக ஆ) மருத்துவனாக இ) தந்தையாக ஈ) நண்பனாக
5) பெருமாள்
திருமொழியில்------- பாடல்கள் உள்ளன
அ) 105 ஆ) 104 இ) 205 ஈ) 106
6) குலசேகர ஆழ்வாரின்
காலம்--------- நூற்றாண்டு.
அ)ஏழாம் ஆ)எட்டாம் இ)ஒன்பதாம் ஈ)ஆறாம்
7)அஃறிணைக்குரிய
பால்பகுப்புகள்-----------
அ)ஒன்றன்பால்,பலவின்பால் ஆ)ஆண்பால்,பலர்பால்
இ)பெண்பால், பலவின்பால் ஈ) பலர்பால், பெண்பால்
8)இடம்--------வகைப்படும்
அ)2 ஆ) 4 இ) 3 ஈ) 7
9)இலக்கண முறையுடன்
பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்--------- ஆகும் .
அ)வழு ஆ) வழாநிலை இ) வழுவமைதி ஈ) இயல்பு வழக்கு
10)இலக்கண முறை இன்றிப் பேசுவதும் எழுதுவதும் ------------ஆகும்.
அ) வழு ஆ) வழாநிலை இ) இயல்பு வழக்கு ஈ) தகுதி வழக்கு
ஆ) குறு வினா
11. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில்
காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு
எடுத்துக்காட்டாக அமைவது
எவ்வாறு?
12. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
13. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக்
கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப்
பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி
எழுதுக.
14.கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ.இயற்கை- செயற்கை ஆ.விதி-வீதி
15.தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-
1. நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின்
பயன்_______________________
2.விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத்
தேவை_____________________
16.குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:- குறிப்பு – எதிர்மறையான சொற்கள்
1.கொடுத்துச்சிவந்த 2.மறைத்துக்காட்டு
இ) சிறு வினா
17. மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும்
செய்தியை
விளக்குக.
18. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில்
குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி
கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச்
சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?”
என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,”
நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி
தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
19.பத்தியைப்
படித்துப் பதில் தருக:-
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன.புவி
உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது.
பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது.
அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும்
மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில்
மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய
உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில்
ஊழிக்காலம் கடந்தது.
1.உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
2. பெய்மழை,பெய்த மழை-இலக்கணக்குறிப்பு தருக.
3.இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
20.வாளால் எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
5 மதிப்பெண் வினாக்கள்:
21.காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக.
22)மொழி
பெயர்க்க:
Malar:
Devi, switch off the lights when you leave the room.
Devi:
Yeah. We have to save electricity.
Malar:
Our nation spends a lot of electricity for lighting up our streets in the
night.
Devi:
Who knows? In future our country may launch artificial moons to light our night
time sky!
Malar:
I have read some other countries are going to launch these types of
illumination satellites near future.
Devi:Superb
news!If we launch artificial moons,they can assist in disaster relief bybeaming
lighton areas that lost power
பொதுக்கட்டுரை:
23.விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும் என்ற தலைப்பில் கட்டுரை வரைக.
வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க