வகுப்பு:6.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: விரிவானம் -வேலுநாச்சியார்
நாள் : பிப்ரவரி மூன்றாம் வாரம்
(14-02-2022 முதல் 19-02-2022 வரை)
1.அறிமுகம்:
”விடுதலைப் போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்களில் ஒருவரைப் பற்றி அறிவோம் வாருங்கள்” என்று கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்
2.படித்தல்:
துணைப்பாடப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். வேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர்.
முத்து வடுகநாதர் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு வேலு நாச்சியார் அரசு பொறுப்பை ஏற்றார்.
தாண்டவராயன் மற்றும் மருது சகோதரர்கள் வேலு நாச்சியாருக்கு தளபதிகளாகச் செயல்பட்டனர்.
மைசூர் மன்னர் ஹைதர் அலி வேலு நாச்சியாருக்கு படைகளை அனுப்பி உதவினார்.
குயிலி என்ற பெண் வேலு நாச்சியாரின் படைக்குத் தலைமை தாங்கினார். உடையாள் எனும் பெண் வேலுநாச்சியாருக்காக உயிரையே துறந்தாள்.
5.வலுவூட்டுதல்:
வேலு நாச்சியார் அரசு பொறுப்பை ஏற்பதற்குக் காரணம் என்ன என்ற வினாவைக் கேட்டு பாடத்தை மீள்பார்வை செய்து கற்றலுக்கு வலுவூட்டுதல்
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
வேலுநாச்சியாரின் தந்தை பெயர் என்ன?
வேலு நாச்சியாரின் கணவர் யார்?
வேலு நாச்சியாரின் பெண்கள் படைக்குத் தலைமை தாங்கியவர் யார்?
நடுகல் யாருக்காக நடப்பட்டது?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
வேலு நாச்சியார் என்ற புகைப்பட பகுதியை மாணவர்கள் புரிந்து கொண்ட வண்ணம் கட்டுரை வடிவில் எழுதி வரச் சொல்லுதல்
9.தொடர்பணி:
வேலுநாச்சியார் துணை பாடத்தை கதை வடிவில் வகுப்பறையில் நடித்துக் காட்டச் சொல்லுதல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை