வகுப்பு: 8.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: உரைநடை- தமிழர் மருத்துவம்
இலக்கணம் -எச்சம்
நாள் : பிப்ரவரி( நான்காம் வாரம்)
(21-02-2022 முதல் 26-02-2022 வரை)
1.அறிமுகம்:
அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ்மக்க ள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந் து விளங்கினர்; உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தா லும் தமக்கென மரபுசார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்தனர்.
நமது அன்றாடப் பேச்சு வழக்கில் சில வினைச்சொற்கள் முடிவு பெறாமல் வரும். அத்தகைய வினைச்சொற்களைக் கூறுங்கள்
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
2.படித்தல்:
உரைநடைப் பகுதி மற்றும் இலக்கண வரையறைகளை ஆசிரியர், சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே விரிவானம் மற்றும் இலக்கண வரையறைகளைப் படித்துக்காட்டுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
தமிழர் மருத்துவம்
இலக்கணம்- எச்சம்
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
தமிழர் மருத்துவம்
தமிழர் மருத்துவம் மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இது தமிழகத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்கள் வளர்த்த மருத்துவம் ஆகையால் இது சித்த மருத்துவம் என்றும் போற்றப்படுகிறது.
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளையும் ஒன்பது இயல்களையும் கொண்டது
சித்த மருத்துவம் தோன்றி வளர்ந்த காலம் முதலாகவே உணவே மருந்து என்ற கருத்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
உடற்பயிற்சியும், யோகமும் சித்த மருத்துவத்தின் இன்றியமையாத அங்கங்களாகும்.
இலக்கணம் -எச்சம்
பொருள் முடிவு பெறாமல் எஞ்சி இருக்கும் சொல் எச்சம் எனப்படும்.
எச்சம் பெயரெச்சம் ,வினையெச்சம் என இருவகைப்படும்.
பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்
ஒரு வினைமுற்று எச்ச பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு பொருள் முடிவை தருவது முற்றெச்சம் ஆகும்.
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
சித்தர்கள் மொத்தம் எத்தனை பேர்?
சித்தர்கள் வளர்த்த மருத்துவத்தின் பெயர் யாது?
மருந்தில்லா மருத்துவம் எது?
பொருள் முடிவு தராத சொற்களை எவ்வாறு அழைப்பர்?
தெரிநிலைப் பெயரெச்சத்திற்குச் சான்று தருக?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
9.தொடர்பணி:
உணவே மருந்து என்ற தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குதல்.
எச்சம் மற்றும் அதன் வகைகளுக்கான எடுத்துக்காட்டுகளை எழுதிவரச்செய்தல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை
ப்