வகுப்பு: 7.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கற்கண்டு (அணி இலக்கணம்)
நாள் : பிப்ரவரி மூன்றாம் வாரம்
(14-02-2022 முதல் 19-02-2022 வரை)
1.அறிமுகம்:
அணிகலன்கள் அணிவது யாருக்கெல்லாம் பிடிக்கும்? என்று மாணவர்களிடம் வினா எழுப்பி பிறகு அணி என்ற சொல்லுக்கு விளக்கம் தந்து அணி இலக்கணத்தை அறிமுகம் செய்தல்
2.படித்தல்:
இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே விரிவானப் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளை சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.
உவமை, உவமேயம், உருபு ஆகிய மூன்றும் வெளிப்பட்டு வருவது உவமையணி ஆகும்.
மேற்கூறிய மூன்றனுள் உவம உருபு மட்டும் மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.
உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்
5.வலுவூட்டுதல்:
அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தக்கூடிய உவமைகள் என்னென்ன? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் விடை கூறச் செய்து அதன் மூலம் கற்றலுக்கு வலுவூட்டுதல்.
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
அணி என்ற சொல்லின் பொருள் என்ன?
அணியிலக்கணம் என்பது யாது?
உவமேயம் என்பது எதைக் குறிக்கும்?
உவமை உருபு மறைந்து வருவது எவ்வகை அணி?
இல்பொருள் உவமையணி என்றால் என்ன?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
பாடப்பகுதியின் முடிவில் தரப்பட்டுள்ள மதிப்பீடு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் சொல்லுதல்.
9.தொடர்பணி:
அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் உவமைகள் சிலவற்றைத் தொகுத்து எழுதி வரச் சொல்லுதல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை