8 TH STD TAMIL MODEL LESSON PLAN(FEBRUARY 3RD WEEK)

 

வகுப்பு: 8.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: வாழ்வியல் இலக்கியம் -திருக்குறள்

                    கவிதைப்பேழை- வருமுன் காப்போம்

நாள் :     பிப்ரவரி( மூன்றாம் வாரம்)

             (14-02-2022 முதல் 19-02-2022 வரை)

1.அறிமுகம்:

  • திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்; எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கரு த்துகளைக்கொ ண்ட நூல். திருக்குறளின் பெருமையை விளக்க , ‘திருவள்ளுவ மாலை’ என்னும் நூல் எழுதப்பட்டிருப்பதே அதற்குச் சான்றாகும்.

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை. நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை

      மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

                   விரிவானம் மற்றும் செய்யுள் பகுதிகளை ஆசிரியர், சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே விரிவானம் மற்றும் இலக்கண வரையறைகளைப் படித்துக்காட்டுதல். 

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:

திருக்குறள்



 வருமுன் காப்போம்

4.தொகுத்தலும்,வழங்குதலும்:

    திருக்குறள்

  • பெருநாவலர்,முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப் படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர். 

  • திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

  • அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளையும் ஒன்பது இயல்களையும் கொண்டது

  • திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் பாடும் நூல் திருவள்ளுவமாலை ஆகும்.

  • திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது

 வருமுன் காப்போம் 

  • கவிமணி எனப்போற்றப்படும் தேசிக விநாயகனார் குமரிமாவட்டம் தேரூரில் பிறந்தார்.

  • 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

  • இவர் ஆசிய ஜோதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்

  •  உமர்கய்யாம் பாடல்கள் எனும் மொழிபெயர்ப்பு நூலையும்இயற்றியுள்ளார்

  • பாடப்பகுதி அவரது மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  •  திருக்குறளை இயற்றியவர் யார்?

  •  திருக்குறளின் முப்பிரிவுகள் யாவை?

  • திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் பாடும் நூல் எது?

  •  கவிமணியின் இயற்பெயர் என்ன?

  •  நமது எந்த நூலிலிருந்து தரப்பட்டுள்ளது? 

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி பாடங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

  • மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.

9.தொடர்பணி:

  • திருக்குறளின் சிறப்புகளை இணையத்தின் உதவியால் தேடி தொகுத்து வரச்சொல்லுதல்.

  • உடல் நலம் பெறுவதற்கு மாணவர்கள் வீட்டில் செய்யும் செயல்களைத் தொகுத்து வழங்கச்செய்தல் 

 கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

கரும்பலகை  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை