9 TH STD TAMIL MODEL LESSON PLAN(FEBRUARY 3 RD WEEK)

வகுப்பு: 9.ஆம் வகுப்பு

பாடம்:   தமிழ்

தலைப்பு: உரைநடை உலகம்-பெரியாரின் சிந்தனைகள்                                              

                      கற்கண்டு - அலகிடுதல்

நாள்:  14-02-2022  TO 19-02-22வரை (பிப்ரவரி இரண்டாம் வாரம்)

பொது நோக்கம்:

  •  பெரியாரின் சிந்தனைகள் சமுதாய மாற்றத்திற்கு வழி வகுத்ததை உணர்ந்து கொள்ளுதல்

  •   செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம் வழி அறிந்து, அலகிடல்

சிறப்பு நோக்கம்:

  • சமுதாய மாற்றத்தில் முக்கியப் புள்ளி தந்தை பெரியார் என்பதை அறிந்து கொள்ளுதல் 

  •  தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்

  • யாப்பின் உறுப்புகளை அறிந்து அலகிட்டு வாய்பாடு எழுத கற்றுக் கொள்ளுதல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø பாகுபாட்டு இருளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருந்த தமிழக மக்களைத் தம் பகு த்தறிவு ஒளியால் வெளிக்கொணரப் பாடுபட்டோருள் முதன்மையானவர்; இருபதாம் நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிப் பகுத்தறிவு, தன்மதிப்பு (சுயமரியாதை) ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர். யார் அவர்? என்ற வினாவை கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

Ø  சில எளிய அசைகளை மாணவர்களைக் கூறச் செய்து, அசைகள் எவ்வாறு உருவாகின்றன? என்பதைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்:

      வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை முதலியன.

பாடப்பொருள் சுருக்கம்:

    பெரியாரின் சிந்தனைகள்:

  • ‘பெரியார்‘ என்றவுடன் நம்முடை ய நினைவுக்கு வருவது, அவரின் பகுத்தறிவுக் கொள்கை. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப் பி , அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.

  • மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் , இன்று மதத்தின் நிலமை என்ன ? நன்கு சிந்தித்துப்பாருங்கள்; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா ? பிரித்து வைப்பதற்காகவா?’ எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்

அலகிடுதல்:

  •        கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம். இது பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. உ று ப் பியலி ல் ய ாப் பி ன் ஆ று உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.

ஆசிரியர் செயல்பாடு:

§  பெரியாரின் உயரிய சிந்தனைகளைத்தகுந்த சான்றுகள் மூலமும் காணொளிகள் மூலம் ஆசிரியர் விளக்க முற்படுதல்.

§  பெண்கள் முன்னேற்றம் மற்றும் நலத்திற்காக தந்தை பெரியார் முன்னெடுத்த செயல்களையும், அதற்காக செய்த சில போராட்டங்களையும் ஆசிரியர் விளக்க முற்படுதல்

§  செய்யுள் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று இவ்வகையில் தொடர்புடையவை என்பவற்றை ஆசிரியர் கரும்பலகை பயன்படுத்தி படிப்படியாக விளக்குதல்.

§  அலகிட்டு வாய்ப்பாடு எழுதும் முறையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாகக் கற்றுத்தருதல்

மாணவர் செயல்பாடு

சமுதாய மறுமலர்ச்சிக்குப் பெரியாரின் பங்களிப்பு எத்தகையது? என்பதை ஆசிரியர் தரும் விளக்கங்கள் மூலம் அறிந்து கொள்ளுதல்.

அலகிட்டு வாய்பாடு எழுதுவதற்குத் தேவையான அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுதல்


கருத்துரு வரைபடம்

பெரியாரின் சிந்தனைகள்

அலகிடுதல்

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப்செயல்பாடுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Ø   தந்தை பெரியாரின் இயற்பெயர் என்ன?

Ø  பெரியார் எவற்றையெல்லாம் எதிர்த்தார்?

Ø  பெரியார் எவ்வாறெல்லாம் புகழப் பெற்றார்?

Ø  அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Øஓரசைச் சீர்கள் மொத்தம்எத்தனை? 

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை