10 TH STD TAMIL MODEL LESSON PLAN( MARCH 2 ND WEEK)

வகுப்பு: 10.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு:  கவிதைப்பேழை.- தேம்பாவணி

நாள்:  07-03-2022  முதல்  12-03-2022  வரை

பொது நோக்கம்:

     @ மனித மாண்புகளையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்.

சிறப்பு நோக்கம்:

    # துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள். சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் மனிதம் இருந்தால் மிகுந்த ஆறுதல் அளிக்கும். அவ்வகையில் தாயை இழந்த கருணையன் எவ்வாறு அழுது புலம்பினான் என்பதை இப்பாடத்தில் மாணவர்கள் அறிவார்கள்.

பாட அறிமுகம் (ஆர்வமூட்டல்)

    Ø  தாயைப் பிடிக்காதவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருக்க முடியுமா? என்ற வினாவை கேட்டு மாணவர்களை இடையூறு செய்து அவர்கள் கூறும் இடையில் இருந்து, சில விளக்கங்களை அளித்து  பாட அறிமுகம்  செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

    வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், , கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.

பாடப்பொருள் சுருக்கம்:

தேம்பாவணி

        @ கிறிஸ்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை அருளப்பன் என்றும் அழைப்பர். வீரமா முனிவர் இயற்றிய தேம்பாவணி என்னும் நூலில் இவரை கருணையங் என்று அழைக்கிறார். 

        @  கருணையன் தன் தாயான எலிசபெத் இறந்த பிறகு, காட்டில் தனியாக மனம் வருந்தி இயற்கையுடன் அழுது புலம்பினான் என்பதே இப்பாடத்தின் சுருக்கம் ஆகும்.

        @    தேம்பா+அணி=வாடாத மாலை ,

         @    தேன்+பா+அணி=இனிமையான பாடல் தொகுப்பு.

கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை சூசையப்பர். தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் இவராவார். வீரமாமுனிவர் கிபி பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.இவர் தூய துறவி என்று அழைக்கப்படுகிறார்

ஆசிரியர் செயல்பாடு:

    §  இலக்கியங்களில் சொல்லப்பட்ட தாயன்பிற்கும், நிஜவாழ்வில்  மாணவர்கள் கொண்ட தாயன்பிற்கும் உள்ள வேறுபாட்டை  ஆசிரியர் விளக்க முற்படுதல்.

    §  கரும்பலகையைப்  பயன்படுத்தி, பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பு உள்ளிட்டவற்றை,செய்யுள் பகுதி நடத்தும்போதே இடையிடையே விளக்க  முற்படுதல் 

மாணவர் செயல்பாடு:

    Ø  இலக்கியங்களில் புலவர்கள்  படைத்த கதாபாத்திரங்கள்  தங்கள் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்தின என்பதை உணர்ந்து கொள்ளுதல்.

    Ø  மேலை நாட்டார் ஒருவர் தமிழ் கற்று அதன் மீது பற்றுக்கொண்டு மாபெரும் இலக்கியத்தை எழுதியுள்ளார் என்பதை தெரிந்து கொள்ளுதல்


கருத்துரு வரைபடம்:

தேம்பாவணி

வலுவூட்டல்:

    விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

    மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

    Ø  தேம்பாவணி இயற்றியவர் யார்?

    Ø   வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

    Ø  கிறிஸ்துவின் வருகையை  உலகுக்கு அறிவித்தவர் யார்?

    Ø  இஸ்மத் சன்னியாசி என்ற சொல்லின் பொருள் என்ன?

தொடர்பணி:

        # நவமணி வடக்கயில் போல் என்ற மனப்பாடபாடலை வீட்டில் படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை