6 TH STD TAMIL-GENERAL ESSAYS AND LETTER WRITTING(கட்டுரை மற்றும் கடிதங்கள்)

 

6.ஆம் வகுப்பு-தமிழ்-கட்டுரை மற்றும் கடிதங்கள்

மூன்றாம் பருவம்

இயல்-1 தேசிய ஒருமைப்பாடு

முன்னுரை

      மக்கள் அனைவரிடமும் அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம், மத, இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை

      இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள், பல சாதிகள் என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும் இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி,

       “முப்பது கோடி முகமுடை யாள்உயிர் 

மொய்ம்புற ஒன்றுடையாள்”  - என்று பாடினார்.

நாட்டுப் பாதுகாப்பில் தேசிய ஒருமைப்பாடு

    “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்

    ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே”

என்பது பாரதி வாக்கு. சீனா படையெடுத்து வந்தபோதும், பாக்கிஸ்தான் படையெடுத்து வந்தபோதும் நாம் ஒன்றுபட்டு வெற்றிபெற்று பாரதியின் வாக்கையும் நம் தேசிய ஒருமைப்பாட்டையும் உலகிற்கு உணர்த்தி உள்ளோம்.

பாரதிதாசன் கூறும் உலக ஒருமைப்பாடு

     வீடும், நாடும், உலகமும்  நலம் பெற்றுவாழ ஒருமைப்பாட்டுணர்வு வேண்டும். இதனையே பாரதிதாசன்,

உலகம் உண்ண உண்பாய்

       உலகம் உடுத்த உடுப்பாய்”  

என்று கூறுகிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்” 

என்ற புறநானூற்று அடியும் உலக ஒருமைப்பாட்டையே வலியுறுத்துகிறது.

முடிவுரை 

   நாம் ஒவ்வொருவரும் தேசிய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்பொழுதுதான் 

  “எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

   எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும்.

ஒருமைப்பாட்டை வளர்ப்போம்!

உலக அரங்கில் உயர்வோம்!

 

இயல்-2 அறம் செய விரும்பு

முன்னுரை

         மனித வாழ்வில் அறம் செய்வது பெரும் பாக்கியமாகும். அறம் செய்ய விரும்புதல் எனும் கருத்தியல் அடுத்தவர்க்கு கொடுத்தல் மற்றும் நல்ல விடயங்களில் ஈடுபடுதல் என்பது பொருள் ஆகும்.நாம் இப்பிறவியில் ஆற்றும் அறச்செயல்கள் எமக்கு மறுமையில் துணைநிற்கும் என்பது இறை நம்பிக்கை. இதனை திருவள்ளுவர் அறத்துப்பாலில் “ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்” என்று பாடுகிறார்.

அறம் எனப்படுவது

        அறம் எனப்படுவது யாதெனில் “அறு” என்ற வினா அடியில் இருந்து தோன்றியதே அறம் ஆகும். மனிதனொருவன் தனக்கென வரையறுத்து கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனப்படுகிறது. பிறவியில் மனிதனை தொற்றி கொண்ட தீவினைகளை அறுத்தெறிவதே அறம் எனவும் கூறலாம். அறம் என்பதற்குத் திருவள்ளுவர் “அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கிறார்.

நற்பண்பு

     மனிதன் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ வேண்டும். பிறருடையப் பொருளுக்கு ஆசைப்படாமலும், தன்னால் மற்றவர்களுக்குத்

விளைவிக்காமலும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதுதான் அவனுடைய நற்பண்பு வெளிப்படுகிறது. தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவரிடம் நற்பண்பு சிறந்தோங்கும். அதன் மூலம் அறம் வெளிப்படும்.

முடிவுரை

      மேற்கண்ட கருத்துக்களின் மூலம் தென்கச்சியார் சிறந்த அறச்சிந்தனை உள்ளவர் என்பதும், மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் அறியப்படுகின்றன. மேலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள பற்றாலும், மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அறவுரைகளைக் கூறியுள்ளதாலும் இவர் பரந்துப்பட்ட சமுதாய நோக்குடையவர் என்பது புலப்படுகின்றது.

 

 

 

இயல்-3 பதிப்பகத்தாருக்குக் கடிதம்

நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக

அனுப்புநர்                                                                                                          

         க. இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        6.ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

        அரசினர் மேனிலைப்பள்ளி,

        தணிகைப்போளூர்,

        இரானிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

        வணக்கம்.உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல் மொழியாகவும் , முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழியே. கல்தோன்றி  மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                                                                           தங்கள் உண்மையுள்ள,

                                                                                                              க.இளவேந்தன்,

                                                                                                            (மாணவச் செயலர்)

இடம்:தணிகைப்போளூர்

நாள்:13-03-2022

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001


PDF வடிவில் பதிவிறக்க👇👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை