7 TH STD-TAMIL-MODEL LESSON PLAN(MARCH 3 RD WEEK)

 

நாள்                 :           21-03-2022 முதல்  26-03-2022       

மாதம்               :           மார்ச்               

வாரம்               :           மார்ச் – நான்காம்  வாரம்                      

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

பாடம்                :          தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :   கண்ணிய மிகு தலைவர்

கருபொருள்                            :

Ø  இணக்கமான உறவைப் பேணுதல், உறவை கையாளுதல்,தன்னம்பிகையுடன் சூழல்களை எதிர்க்கொள்ளுதல் போன்ற வாழ்க்கைத் திறன்களைப் பெறுதல்

உட்பொருள்                           :

Ø  எளிமை, நேர்மை, உழைப்பு, பொறுமை, நாட்டுப்பற்று முதலிய பண்புகளை ஒருங்கே கொண்டு சிறந்து விளங்கிய தலைவர் ஒருவர் காயிதே மில்லத் பற்றி அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காட்சிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  இணக்கமான உறவைப் பேணுதல், உறவை கையாளுதல்,தன்னம்பிகையுடன் சூழல்களை எதிர்க்கொள்ளுதல் போன்ற வாழ்க்கைத் திறன்களைப் பெறுதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  எளிமையான பண்புகளைக் கொண்டு வாழ்ந்த காயிதே மில்லத் அவர்களின் சிறு வயது நிகழ்வினைக் கூறி ஆர்வமூட்டல்

படித்தல்                                  :

Ø  நிறுத்தற் குறி அறிந்து படித்தல்

Ø  உணர்வுகளோடு படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருளை அகராதிக் கொண்டு படித்தல்.

நினைவு வரைபடம்                 :

                                                            கண்ணிய மிகு தலைவர்


 

தொகுத்து வழங்குதல்             :

 

கண்ணிய மிகு தலைவர்

Ø  கண்ணிய மிகு தலைவர்

o   இயற்பெயர் : முகமது இசுமாயில்

o   சிறப்பு பெயர் : காயிதே மில்லத்

o   காயிதே மில்லத் பொருள் : சமுதாய வழிகாட்டி

o   அரசியல் பொறுப்புகள் : 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்

o   கல்விப்பணி : திருச்சி ஜமால் முகமது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி தொடங்க காரணமாக இருந்தவர்

பண்புகள் :

1.       எளிமை

தலைவரான பின் தனி மகிழ்வுந்தில் செல்லாது. பொது போக்குவரத்தினைப் பயன்படுத்தினார்.

2.      ஆடம்பரமற்ற திருமணம்

தனது மகனின் திருமணத்தை ஆடம்பரமின்றி மணக்கொடை பெறாமல் நடத்தினார்.

3.      நேர்மை :

தனது சொந்த அலுவல்களுக்கு இயக்கப் பணத்தை எடுக்காமல் தனது சொந்த பணத்தையே பயன்படுத்தினார்.

4.      மொழிக் கொள்கை

தமிழ் தான் மிகப் பழமையான மொழி. எனவே தான் அதனை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறினார்.

5.      நாட்டுப்பற்று

1962 இல் இந்தியா சீனா போருக்கு தனது ஒரே மகனை அனுப்பத் துணிந்தவர்.

வலுவூட்டல்                             :

Ø  பாடப் பொருளை சில உதாரணங்களைக் கொண்டு  மீண்டும் விளக்கி கூறி வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  காயிதே மில்லத்  என்பது _____________ சொல்

Ø  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடைபெற்ற ஆண்டு __________

Ø  காயிதே மில்லத் பற்றி அறிஞர் அண்ணாவின கூற்று யாது?

Ø  காயிதே மில்லத் அவர்கள் எவ்வாறு நேர்மையுடன் செயல்பட்டார்?

 

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

         பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

தொடர் பணி                          :

Ø  எளிய பண்புகளைக் கொண்டு வாழ்ந்த தலைவர்களில் எவரேனும் ஒருவர் பற்றி எழுதி வருக.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை