7 TH STD TAMIL-THIRD TERM QUESTION AND ANSWERS

 


7.ஆம் வகுப்பு-தமிழ்-மூன்றாம் பருவம்

வினா விடைகள்

இயல்-1 விருந்தோம்பல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.மரம் வளர்த்தால்-----பெறலாம்

அ.மாறி     ஆ.மாரி     இ.காரி    ஈ.பாரி

2.நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ.நீரு+உலையில்    ஆ.நீர்+உலையில்   இ.நீர்+இலையில்   ஈ.நீரு+இலையில்

3.மாரி+ஒன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ.மாரியொன்று    ஆ.மாரியின்றி    இ.மாரியன்று     ஈ.மாரியென்று

குறுவினா

1.பாரி மகளிரின் பெயர்களை எழுதுக

   அங்கவை,சங்கவை

2. பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை-எவ்வாறு?

    பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

சிந்தனை வினா:

தமிழரின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

 ஈகை

வீரம்

 இரக்கம்

 அன்பு

 

இயல்-1 அணி இலக்கணம்

குறுவினா

1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.

     மயில் போல ஆடினாள். மீன் போன்ற கண்.

          த்தொடர்களைப்படியுங்கள் . இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும் ,கண்ணுடன் மீனையு ம் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகளாகும்.

2.உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

 ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படை யாக வந்தா ல் அது உவமை அணி எனப்படும்

 உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

     பனை மரமே பனை மரமே

     ஏன் வளந்தே இத் தூரம்?

     குடிக்கப் பதனியானேன்!

     கொண்டு விற்க நுங்கானேன்!

     தூரத்து மக்களுக்குத் தூதோலை நானானேன்!

     அழுகிற பிள்ளைகட்குக் கிலுகிலுப்பை நானானேன்!

     கைதிரிக்கும் கயிறுமானேன்!

     கன்றுகட்டத் தும்புமானேன்!

நாட்டுப்புறப்பாடல் வினாக்கள்

1. பனை மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை?

    நுங்கு,பதனீர்

2. பனை மரம் யாருக்குக் கிலுகிலுப்பையைத்தரும்?

     பிள்ளைகளுக்கு

3. 'தூதோலை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

     தூது+ஓலை

4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.

     நுங்கு,பதனீர்,கிலுகிலுப்பை,தூதோலை,கயிறு,தும்பு

5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.

    பனைமரம்

தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

1. என் தாயார் என்னை ______ காத்து வளர்த்தார்.

 (கண்ணை இமை காப்ப து போல / தாயைக் கண்ட சேயைப் போல )

2. நானும் என் தோ ழியும் ______இணைந்து இருப்போம்.

(இஞ்சி தின்ற குரங்கு போல / நகமும் சதை யும் போல )

3. திருவள்ளுவரின் புகழை _____உலகமே அறிந்துள்ளது.

(எலியும் பூனையும் போல / உள்ளங்கை நெல்லிக்கனி போல)

4. அப்துல்கலாமின் புகழ் _____உலகெங்கும் பரவியது.

(குன்றின்மேலிட்ட விளக்கு போல/குடத்துள் இட்ட விளக்கு போல)

5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் ______________ என் மனத்தில் பதிந்தன.

(கிணற்றுத்தவளை போல / பசுமரத்தாணி போல)

கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.

1. நாகப்பட்டினம் -    நா, நாகம், நாடி,கடி, பட்டி,நாம்

2. கன்னியாகுமரி -  கன்னி,குமரி , மரி ,கனி , கரி, மகன்

3. செங்கல்பட்டு -    செங்கல்,கல் ,கட்டு, பல்,செல்

4. உதகமண்டலம் -  கதம்,மண் , கலம், தலம், கண்

5. பட்டுக்கோட்டை – படை,கோட்டை,பட்டை,பட்டு

(மற்ற இயல்கள் விரைவில்)

கட்டுரை மற்றும் கடிதங்கள்👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை