6.ஆம்
வகுப்பு-தமிழ்-மூன்றாம் பருவம்
வினா
விடைகள்
இயல்-1 பாரதம் அன்றைய நாற்றாங்கால்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தேசம் உடுத்திய
நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம் ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள்
எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை ஆ)
வைகைக்கரை இ) கங்கைக்கரை ஈ) யமுனைக்கரை
3. கலைக்கூடமாகக்
காட்சி தருவது
அ) சிற்பக்கூடம் ஆ)
ஓவியக்கூடம் இ) பள்ளிக்கூடம் ஈ) சிறைக்கூடம்
4. நூலாடை என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை ஆ)
நூலா+டை இ) நூல்+ லாடை ஈ) நூலா+ஆடை
5. எதிர்+ஒலிக்க என்பதைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதிரலிக்க ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க ஈ) எதிர்ரொலிக்க
நயம் அறிக
1.பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்னும்
பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
மெய்களை,மெய்யுணர்வு
அன்னை,அன்னிய,அண்ணல்
2.பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்னும்
பாடலில் அமைந்துள்ள மோனைச்சொற்களை எடுத்து
எழுதுக.
புதுமைகள்,பூமியின்
தெய்வ ,தேசம்
காளி
,காவிரி,கம்பன்,கங்கை
3.பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச்சொற்களை எடுத்து எழுதுக.
தேசமிது , வாசலிது
குறுவினா
1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள
கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
வள்ளுவர்,காளிதாசர்,கம்பர்
2. இந்தியாவின் வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக்
கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக
குமரிமுனையாகிய கன்னியின் கூந்தலுக்காகக் கன்னியின்
காசுமீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப் படுகின்றன.மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு
எல்லை வரை பாய்த்து நன்மை தருகின்றன.
சிந்தனை வினா
நம் நாட்டின்
முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
v
கல்வியில்
சிறந்து விளங்க வேண்டும்.
v
நாட்டுப்பற்று
மிக்கவர்களாகவும்,பொதுநலத்தில் அக்கறை மிக்கவராகவும் திகழ வேண்டும்.
v
கல்வி
கற்று முன்னேறி வெளிநாடுகளுக்குச் செல்லாமல் ,நாட்டிற்காக உழைக்க வேண்டும்.
இயல்-1 தமிழ்நாட்டில் காந்தி
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _______
அ) கோவை ஆ)
மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்
2. காந்தியடிகள் __அடி நிழலில் இருந்து தமிழ் கற்க
வேண்டும் என்று விரும்பினார்.
அ) நாமக்கல் கவிஞர் ஆ) பாரதிதாசன்
இ) உ.வே.சாமிநாதர் ஈ) பாரதியார்
பொருத்துக
1. இலக்கிய
மாநாடு – சென்னை
2. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்
3. குற்றாலம் -
அருவி
4. தமிழ்க்
கையேடு - ஜி.யு.போப்
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. ஆலோசனை - மாணவர் செயலர் மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்
2. பாதுகாக்க - தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பாதுகாப்பது தமிழர்
கடமை
3. மாற்றம் - உழைத்தால் வாழ்வில் சிறந்த மாற்றம் வரும்
4. ஆடம்பரம் - ஆடம்பரம்
தேவையற்ற செலவிற்கு வழிவகுக்கும்.
குறுவினா
1. காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?
“அந்தக் கோவிலுக்குள் செல்ல
எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?” என்று காந்தியடிகள்
கேட்டார் . அங்கு இருந்தவர்கள் “இல்லை” என்றனர். “அப்படியானால் அங்கே வரமாட்டேன்”
என்று கூறிவிட்டார்.
2. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை
ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக
உ.வே.சாமிநாதரின் உரையைக்
கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். ”இந்தப் பெரியவரின் அடி
நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார்
காந்தியடிகள்.
சிறுவினா
1. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.
1921
ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள்
தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில்
பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து
இருப்பதைக் கண்டார்.
அப்போது
காந்தியடிகள் நீளமான வேட்டி , மேல்சட்டை, பெரிய
தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா?
என்று சிந்தி த்தார். அன்றுமுதல்
வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்
2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
காந்தியடிகள் தமக்கும்
தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில்
வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார் . ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார் .
திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.
1937
ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக்
காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக
இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். ”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது”
என்று கூறினார் காந்தியடிகள்.
சிந்தனை
வினா
காந்தியடிகளிடம்
காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?
v எளிமை,சிக்கனம்
v தேசப்பற்று
v பொதுநல நோக்கு
v உண்மை பேசுதல்
இயல்-1 நால்வகைச்சொற்கள்
பின்வரும்
தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக.
1. வளவனும் தங்கையும்
மாநகரப் பேருந்தில் ஏறினர்.
2. நாள்தோறும் திருக்குறளைப் படி.
3. "ஏழைக்கு உதவுதல்
சாலச்சிறந்தது" என்றார் ஆசிரியர்.
பெயர்ச்சொல் |
வினைச்சொல் |
இடைச்சொல் |
உரிச்சொல் |
வளவன் |
ஏறினர் |
உம் |
மா |
தங்கை |
படி |
தோறும் |
சால |
பேருந்து |
உதவுதல் |
|
|
திருக்குறள் |
என்றார் |
|
|
கீழ்க்காணும்
குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
இடைச்சொல்: மற்று
சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை வட்டமிடுக.
1. அ)
படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு
2. அ) மதுரை ஆ) கால்
இ) சித்திரை ஈ) ஓடினான்
3. அ) சென்றாள் ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்து
4. அ) மா ஆ) ஐ இ)உம் ஈ) மற்ற
குறுவினாக்கள்
1. சொல் என்றால் என்ன?
தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
(எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.
2. சொற்களின் வகைகளை
எழுதுக.
இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
என நான்கு வகைப்படும்.
3. பெயரையும் வினையையும் சார்ந்து
வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?
பெயர்ச்சொல்லையும்
வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.
(எ.கா.) உம் – தந்தையும் தாயும்.
கீழ்க்காணும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
இந்திய
விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள்
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் . அவர்,
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும்
பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906
ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் ”சுதேசி
நாவாய்ச் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தைப் ப திவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச்
செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
1. சுதேசி நாவாய்ச்
சங்கத்தை நிறுவியவர் யார்?
வ.உ.சிதம்பரனார்
2. வ.உ.சி.
சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது
பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்
3. வ. உ.சி. அவர்கள்
யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?
பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
4. வ. உ. சி.
அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?
அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத்
தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்
5. வ. உ. சி. அவர்கள்
புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் .
கீழ்க்காணும்
தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக
1. ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
2. ஓர் இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3. அஃது இல்லாத
இடத்தில் எதுவும் நடக்காது.
4. அது நகரத்திற்குச் செல்லும் சாலை.
5. அஃது ஒரு இனிய
பாடல்.
அகரவரிசைப்படுத்துக
பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி , புதுமை , பூமி, பையன்,பொதுக்கூட்டம்,
, போக்குவரத்து
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்க
வடக்குண்டு,பந்துண்டு,பாட்டுண்டு
வடக்கில்லை,பந்தில்லை,பாட்டில்லை
கட்டங்களில்
உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக
பாரி வீட்டுக்கு
வந்தான்
எழிலி வீட்டுக்கு வந்தாள்
மாணவர்கள் வீட்டுக்கு வந்தனர்
மாடு வீட்டுக்கு வந்தது
மாடுகள் வீட்டுக்கு வந்தன
கட்டங்களில்
மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக
பெயர்ச்சொல்: குமரன், ஐ,நகரம், பேருந்து, வண்டி, தாய்
வினைச்சொல்: பேசி, நடக்கிறாள்
இடைச்சொல்: மற்று
உரிச்சொல்: மா, உறுபசி
(மற்ற இயல்கள் விரைவில்)
கட்டுரை மற்றும் கடிதங்கள்👇