8.ஆம்
வகுப்பு-தமிழ் வினா விடைகள்
இயல்-3 வருமுன் காப்போம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.
அ) நிலம் ஆ) வையம் இ) களம் ஈ)
வானம்
2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்ப து _____.
அ) நலம் + எல்லாம் ஆ) நலன் +
எல்லாம் இ) நலம் + எலாம் ஈ) நலன் + எலாம்
3. இடம் + எங்கும் என்பதனை ச்
சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல்_____.
அ) இடவெங்கும் ஆ) இடம்எங்கும் இ) இடமெங்கும்
ஈ) இடம்மெங்கும்
வருமுன்காப்போம் - இப்பா
டலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை,
இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை
உடலில் , உறுதி,உடையவரே
சுத்தம்,சுகம்
காலை,காற்று,காலன்
எதுகை
உடலில்,இடமும்
சுத்தம்,நித்தம்
இயைபு
பட்டிடுவாய்,விழுந்திடுவாய்
தருமப்பா,விடுமப்பா
குறுவினா
1.
நம்மை
நோய் அணுகாமல் காப்பவை எவை?
தூய்மையான
காற்று,நல்ல குடிநீர்,உடற்பயிற்சி
2.
அதிகமாக
உண்பதா ல் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
செரிமானமின்மை,நோய்வாய்ப்படுதல்.
சிறுவினா
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத்
தொகுத்து எழுதுக.
v காலையும்
,மாலையும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
v தூய்மையான
காற்றைச் சுவாசித்து,தூய நீரைப் பருக வேண்டும்.
v குளித்த
பிறகு உண்டு,இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
v அளவுடன்
உண்ண வேண்டும்.
சிந்தனை வினா
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
v காலையும் ,மாலையும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
v தூய்மையான
காற்றைச் சுவாசித்து,தூய நீரைப் பருக வேண்டும்.
v குளித்த
பிறகு உண்டு,இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
v அளவுடன்
உண்ண வேண்டும்.
இயல்-3 தமிழர் மருத்துவம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தொடக்க காலத்தில்
மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை ஆ)
விலங்குகளை இ) உலோகங்களை ஈ) மருந்துகளை
2. தமிழர்
மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின் ஆ)
உடற்பயிற்சியின் இ) உணவின் ஈ) வாழ்வின்
3. உடல் எடை
அதிகரிப்பதா ல் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.
அ) தலை வலி ஆ) காய்ச்சல் இ)
புற்றுநோய் ஈ) இரத்தக் கொதிப்பு
4. சமையலறையில்
செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக ஆ)
சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக ஈ) உணவுக்காக
குறுவினா
1. மருத்துவம் எப்போது
தொடங்கியது?
மனிதனுக்கு நோய் வந்தபோது மருத்துவம் தொடங்கியது.
2. நல்வாழ்விற்கு நாம்
நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
§ நடைபயிற்சி மற்றும்
உடற்பயிற்சி
§ அளவான உணவு
§ சத்தான உணவு
3. தமிழர்
மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
வேர்,பட்டை,இலை,பூ,கனி
சிறுவினா
1. நோய்கள் பெருகக்
காரணம் என்ன?
ü இயற்கையை விட்டு
விலகியமை
ü மாறிப்போன உணவு
முறை
ü மாசு நிறைந்த
சுற்றுச்சூழல்
ü மன அழுத்தம்
2. பள்ளிக்
குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
ü சரியான
உணவு,
சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய
மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.
ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதா
னியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ü கணினித்திரை
யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
நெடுவினா
தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத்
தொகுத்து எழுதுக
v தமிழரது
நிலம்,நிறைந்த பண்பா டுகளும் தத்துவங்க ளும் அடங்கியது.நோய்கள் எல்லாம் பேய்,பிசாசுகளால் வருகின்றன; பாவ, புண்ணியத்தால்
வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர் தத்துவங்களா ன சாங்கியம், ஆசீவகம் போன்றவை
உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில்
ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
v நோயை
இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின்
தன்மை,சுவை இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை
மிகத்தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறா க ஆகும்போது நாட்டு
வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு
சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.
சிந்தனை வினா
நோயின்றி வாழ நாம்
என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
ü சரியான
உணவு,
சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய
மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.
ü விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று
எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதா
னியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ü கணினித்திரை
யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
இயல்-3 எச்சம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. முற்றுப் பெறாமல்
எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.
அ) முற்று ஆ) எச்சம் இ)
முற்றெச்சம் ஈ) வினையெச்சம்
2. கீழ்க்காணும் சொற்க
ளில் பெயரெச்ச ம் _____.
அ) படித்து ஆ) எழுதி இ) வந்து
ஈ) பார்த்த
3. குறிப்பு
வினையெச்சம் _____ வெளிப்படை யாகக் காட்டாது.
அ) காலத்தை ஆ) வினையை இ) பண்பினை
ஈ) பெயரை
பொருத்துக.
நடந்து - வினையெச்சம்
பேசிய - பெயரெச்சம்
எடுத்தனன் உண்டான் - முற்றெச்சம்
பெரிய – குறிப்புப் பெயரெச்சம்.
கீழ்க்காணும்
சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த,
கடந்து, வீழ்ந்த , மாட்டிய,
பிடித்து, அழைத்த, பார்த்து.
பெயரெச்சம்: நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த
வினையெச்சம்:
படுத்து, பாய்ந்து, கடந்து, , பிடித்து, பார்த்து.
சிறுவினா
1. எச்சம் என்றால்
என்ன? அதன் வகைகள் யாவை?
பொருள் முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம்
எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.
2. ‘அழகிய மரம்’ –
எச்ச வகையை விளக்குக.
குறிப்புப் பெயரெச்சம்- செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும்
பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
3. முற்றெச்சத்தைச் சான்றுடன்
விளக்குக.
வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும்
வினையெச்சப் பொருளைத் தருகிறது.
இவ்வாறு ஒரு வினைமுற்று
எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
4. வினையெச்சத்தின்
வகைகளை விளக்குக.
எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல்
எழுதுதல் என்னும் செயலை யும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வா று
செயலை யும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்
எனப்படும்.
மெல்ல வந்தான் – இத்தொடரில்
உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படை யாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும்
பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை
மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு
வினையெச்சம் எனப்படும்.