10 TH STD TAMIL MODEL LESSON PLAN -AUGUST 1 WEEK

 10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 01-08-2022 முதல் 05-08-2022        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.தொகாநிலைத்தொடர்கள் (கற்கண்டு)

                                             2. திருக்குறள் (வாழ்வியல் இலக்கியம்)

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø  இருப்பதை பகிர்ந்து உண்ணும் பண்பினை வளர்த்தல்.

       Ø  தொகா நிலைத் தொடர்களின் வகைகள் அறிதல்.

        Ø  மனித வாழ்வில் திருக்குறள் கூறும் பண்பாட்டு நெறிகளைப் பின்பற்றுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  மாணவர்கள் அன்றாடம் செய்யும் செயலைகளை கூற செய்து அதனை தொடராக எழுதி தொடரை அறிமுகம் செய்தல்.

         Ø  திருக்குறள் சிறப்புகளை கூறல்

4.பாடச் சுருக்கம்  :             

        Ø  தொகா நிலைத் தொடர்களில் உள்ள ஒன்பது வகைகள் அறிதல்.

Ø    எழுவாய்த் தொடர்

Ø    விளித் தொடர்

Ø    வினைமுற்றுத் தொடர்

Ø    பெயரெச்சத் தொடர்

Ø    வினையெச்சத் தொடர்

Ø    வேற்றுமைத் தொடர்

Ø    இடைச்சொல் தொடர்

Ø    உரிச்சொல் தொடர்

Ø    அடுக்குத் தொடர்

Ø  திருக்குறளின் சிறப்புகள் அறிதல்.

Ø  ஒழுக்கமுடைமை,பெரியாரைத் துணைகோடல், கண்ணோட்டம்,கொடுங்கோன்மை,ஆள்வினை உடைமை, நன்றி இல் செல்வம்

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  தொகா நிலைத் தொடர்களை சொல்லட்டைகளைப் பயன்படுத்தி தொடர் அமைத்து கூறல்.

       Ø  அன்றாட செயல்பாடுகளை தொடர்களாக அமைத்து தொகா நிலைத் தொடர்களை தொடர்புப்படுத்தி கற்றல்.

       Ø  திருக்குறளை சீர் பிரித்து படித்துக் காட்டல்

       Ø  மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.

        Ø  திருக்குறளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளுடன் ஒப்பிடல்

6.கருத்துரு வரைபடம்:


தொகாநிலைத்தொடர்கள்



திருக்குறள்


7.மாணவர் செயல்பாடு:

      Ø  வாழ்வியல் தொடர்களுடன் தொகா நிலைத் தொடர்களுடன் ஒப்பிடல்.
     Ø  மாணவர்கள் திருக்குறளை சீர் பிரித்து படித்தல்
     Ø  குறட்பாக்களின் பொருள் அறிதல்
     Ø  திருக்குறளின் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.தொகா என்பதன் பொருள் யாது?
2.ஒழுக்கம்------தரும்

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.பண்புத்தொகை என்றால் என்ன? 
2.யார் எய்தாப்பழி அடைவர்?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.. கந்தா வா-என்பது எவ்வகைத்தொடர் ? விளக்கம் தருக
2..பாடலோடு பொருந்தாத இசை எதற்கு உவமையாகக் காட்டப்பட்டது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

# 1015 - மொழிப்பயன்பாட்டில் தொகாநிலைத்தொடர்களை அறிந்து எழுதுதலை முறைப்படுத்தல்
# 1016 - எளிமையும் இனிமையும் நிறைந்த அற இலக்கியத்தைப் படித்துச் சுவையுணர்தல்.
       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை