9 TH STD TAMIL-UNIT TEST QUESTION PAPER- UNIT 1

 9.ஆம் வகுப்பு-தமிழ்

அலகுத்தேர்வு வினாத்தாள்- இயல் 1

ஒன்பதாம் வகுப்பு                                                                                                   மதிப்பெண்கள்-50                         

  (அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க)

) பலவுள் தெரிக:-

1)இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை

அ.1200  ஆ.1300  இ.1400  ஈ.1500

2) தமிழோவியம் எனும் நூலை எழுதியவர் யார்?

அ.ஈரோடு தமிழன்பன் ஆ.தமிழ் ஒளி  இ.சேக்கிழார்   ஈ.பாரதியார்

3. தமிழன்பனின் எந்த நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றது?

அ.தமிழோவியம்  ஆ.தமிழன்பன் கவிதைகள் 

இ.வணக்கம் வள்ளுவ  ஈ.மலரும் மலையும்

4. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறியவர்/கூறியது

அ.பிங்கல நிகண்டு  ஆ.கால்டுவெல்  இ.குமரிலபட்டர்   ஈ.பாரதிதாசன்

5)தமிழ் விடு தூது----இலக்கிய வகையைச் சார்ந்தது

)தொடர்நிலைச்செய்யுள் )புதுக்கவிதை )சிற்றிலக்கியம்  )தனிப்பாடல்

பாடலப்படித்து பினவரும் வினாக்களுக்கு விடையளிக்க:

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார்  கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ– திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தாமணியாய் இருந்தஉனைச்

    சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

6)இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?

அ.தமிழோவியம் ஆ.தமிழ்விடு தூது இ.மணிமேகலை ஈ.குறம்

7)இப்பாடல் எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?

)தொடர்நிலைச் செய்யுள் )புதுக்கவிதை 

)சிற்றிலக்கியம்  )தனிப்பாடல்

8)எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க

அ.குறம்-கொடுப்பாய்க்கு ஆ.வந்து-சிந்து  இ.குறம்-சிந்து  

ஆ) குறு வினா                                                                                    

9.நீங்கள் பேசும் மொழி எந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது?

10.கண்ணி என்பதன் விளக்கம் யாது?

11.தமிழோவியம் கவிதையில் உங்களைக் கவர்ந்த அடிகள் இரண்டனைக் கூறுக.

12.பின்னங்களை எழுதுக : காணி .இருமா

13.தூது-குறிப்பு வரைக.

14.அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களைமாற்றி எழுதுக.

அ)நம்முன்னோர்இயற்கையோடுஇயைந்தவாழ்வுநடத்தினர். (வினாத்தொடராக)

ஆ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத்தொடராக)

15.மொழிபெயர்க்க:MORPHEME , LEXICON

இ) சிறு வினா                                                                                     

16.திராவிட மொழிக்குடும்பத்தின் பிரிவுகளை எழுதுக

17.'காலந்தோறும் தமிழ் தன்னை எவ்வாறு புதுப்பித்துக்கொள்கிறது?

18.தன்வினை,பிறவினை -சான்றுகளுடன் வேறுபடுத்துக

ஈ. 5 மதிப்பெண் வினாக்கள்:

19.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

20)மொழிபெயர்க்க:

   1.LINGUISTICS  2.PHILOLOGIST 3.PHONOLOGIST 4.LITERATURE  5.POLYGLOT                                                                       

21)தூது அனுப்பத் தாய்மொழியே சிறந்தது என்பதை நிறுவுக.

22)உங்கள் நண்பர் பரிசாக அனுப்பிய எஸ்.இராமகிருஷ்ணனின் “கால் முளைத்த கதைகள்” எனும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக

PDF வடிவில் பதிவிறக்க👇👇

 



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை