6 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JULY WEEK 1

  6. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு 

வகுப்பு: 6.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: விரிவானம் (கனவு பலித்தது)

கற்கண்டு (எழுத்து -வகை,தொகை)

நாள் : ஜூலை முதல் வாரம்

             (04-07-2022 முதல் 08-07-2022 வரை)


1.அறிமுகம்:

  • தமிழில் எண்ணற்ற அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.

  • தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றி அறிதல் அவசியம்

      மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

                   உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:

கனவு பலித்தது 


தமிழ் எழுத்துகளின் வகையும்,தொகையும்

4.தொகுத்தலும்,வழங்குதலும்:
கனவு பலித்தது 
@ ஐம்பூதங்கள் -தொல்காப்பியம்
@ கடல்நீர் ஆவியாதல் -முல்லைப்பாட்டு ,பரிபாடல்,திருக்குறள்,கார்நாற்பது
@ புண்,வெண்ணிற ஊசி -பதிற்றுப்பத்து
@ தொலைநோக்கி-கலீலியோ-கபிலர்

தமிழ் எழுத்துகளின் வகையும்,தொகையும்
       @ தமிழ் எழுத்துகள் முதலெழுத்துகள்,சார்பெழுத்துகள் என இரு வகைப்படும்.
         @ உயிர் 12 ம்,மெய் 18 ம் முதலெழுத்துகள் ஆகும்.
         @ சார்பெழுத்து 10 வகைப்படும்

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • ஐம்பூதங்கள் யாவை?

  • உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

  • சார்பெழுத்து என்பது யாது?

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

9.தொடர்பணி:

  • தமிழ் எழுத்துகளை வீட்டுப்பாடமாக எழுதிவரச்செய்தல்.

 கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை  




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை