7 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JULY WEEK 1

  7. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு 

வகுப்பு: 7.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: விரிவானம் (சொலவடைகள்) ,

கற்கண்டு (குற்றியலுகரம்,குற்றியலிகரம்)

நாள் : ஜூலை முதல் வாரம்

             (04--2022 முதல் 08-07-2022 வரை)


1.அறிமுகம்:

  • சில வட்டார வழக்குச் சொற்களைக்கூறி என்ற பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

                   இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே இலக்கணப் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
  @ சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை
@ பத்து வகை சார்பெழுத்துகளில் குற்றியலுகரமும்,குற்றியலிகரமும் அடங்கும்.
@ உகரம் தன் மாத்திரையளவில் குறைந்தொலிப்பது குற்றியலுகரம் ஆகும்.இது ஆறு வகைப்படும்.
# அவை :நெடிற்றொடர்,ஆய்தத் தொடர்,உயிர்த்தொடர்,வன்றொடர், மென்றொடர், ஆய்தத்தொடர்.
@இகரம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரமாகும்

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • சொலவடைகள் என்றால் என்ன?

  • குற்றியலுகரம் என்பது யாது?

  • குற்றியலுகர வகைகள் யாவை?

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

9.தொடர்பணி:

  • சொலவடைகள் உரையாடலை வகுப்பறையில் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து நிகழ்த்தச் செய்தல்

 கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை  


கற்றல் விளைவு
@ சொலவடைகளில் பொதிந்துள்ள சமூக உண்மைகளைக் கண்டறிதல்
@ குற்றியலுகர ,குற்றியலிகரச் சொற்களை அடையாளம் கண்டு பயன்படுத்துதல்



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை