8 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JULY WEEK 1

 8. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு  

வகுப்பு: 8.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: கற்கண்டு (எழுத்துகளின் பிறப்பு)

நாள் : ஜூலை முதல் வாரம்

             (04-07-2022 முதல் 09-07-2022 வரை)


அறிமுகம்                               :

  • தொல் பழங்காலத்திலேயே ,எவ்வித அறிவியல் கருவியும் இல்லாத காலத்திலேயே,எழுத்துகள் எந்த உறுப்பில் இருந்து பிறக்கின்றன என்று ஒரு அறிஞர் கண்டறிந்துள்ளார். 

      மேற்கண்ட கருத்தைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

பாடச் சுருக்கம்                        :             

  • அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன. •

  •  இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. • 

  • உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன

  • க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

  • ச், ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தி ன் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

  • ட், ண் - ஆகிய இருமெய்களும் நா வின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

ஆசிரியர் செயல்பாடு              :

    Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.  

Ø எழுத்துகளின் பிறப்பைப் படிப்படியாக விளக்குதல்

Ø எழுத்துகள் தோன்றுமிடங்களையும்,பிறக்குமிடங்களையும் எளிதாக விளக்குதல்

கருத்துரு வரைபடம்

 

மாணவர் செயல்பாடு:

Ø  மாணவர்கள் எழுத்துகளின் பிறப்பு எவ்வாறு நிகழ்கிறது என உணர்தல்.

Ø   இடப்பிறப்பைப் பற்றி அறிதல்

@ முயற்சிப் பிறப்பைப் பற்றி அறிதல்

@ எழுத்துகள் பிறக்கும் இடங்களை எழுத்துகளைச் சரியாக உச்சரித்துப்பார்த்து அறிதல்.

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  உந்தி என்பது யாது?

Ø  உ,ஊ எவ்வாறு பிறக்கும்?

Ø  இடை நா இடையண்ணம் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் யாவை?

Ø ப்,ம் ஆகிய மெய்கள் எவ்வாறு பிறக்கின்றன?

தொடர்பணி:

    பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

கற்றல் விளைவு

@ சொற்களின் பிறப்பு முறைகளை அறிந்து உரிய முறையில் பயன்படுத்துதல்



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை