9 TH STD TAMIL MODEL LESSON PLAN -JULY 1 WEEK

  9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு


நாள்        :  04-07-2022 முதல்  09-07-2022        

மாதம்          ஜூலை          

வாரம்     :  முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. வளரும் செல்வம்

                                            2.தொடர் இலக்கணம்

கருபொருள்                            :

Ø  மொழி வளர்ச்சிக்கான வாயில் சொற்பெருக்கம்

@ இலக்கணத்தொடர் அமைப்பு 

உட்பொருள்                           :

Ø  தமிழில் கல்ந்த பிறமொழிச்சொற்களும்,தமிழால் உருவான பிறமொழிச்சொற்களும்

@ தொடர் அமைப்பை அறிதல்

@ தொடர் வகைகளை  அறிதல்


அறிமுகம்                               :

#     தமிழில் கலந்த பிறமொழிச்சொற்கள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  பின்ன எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச்சொற்கள்

@ தொழில்நுட்பக் கலைச்சொற்கள்

Ø  பேச்சுறுப்புகளின் அதிர்விற்கேற்ப பொருள்மயக்கம் ஏற்படுதல்.

# கடல்துறை சார்ந்த சொற்கள்

@  கிரேக்கத்தில் உள்ள தமிழ்ச்சொற்கள்.

@ தொடர் வகைகள் மற்றும் தொடர் அமைப்பு


ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø பிற மொழியில் உள்ள தமிழ்வழிச்சொற்களை ஒப்பீடு செய்தல்

Ø தொடர் வகைகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

Ø   தொடரமைப்பை விளக்குதல்

Ø  தொடர்களை வேறுபடுத்தி அறியும் முறைகளை எளிமையாக விளக்குதல்.

கருத்துரு வரைபடம்

வளரும் செல்வம்

தொடர் இலக்கணம்

மாணவர் செயல்பாடு:

Ø  சொற்களஞ்சியமே வளரும் செல்வம் என அறிதல்

Ø   எண்ணற்ற மொழிகளில் உள்ள சொற்கள் தமிழை அடிப்படையாகக் கொண்டு உருவானவை என அறிதல்

@தொடர் அமைப்பை அறிதல்

@தொடர் வகைகளை அறிதல்

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  அரைக்காணி என்றால் என்ன?

Ø   வங்கம் என்பது யாது?

Ø   பயனிலை என்றால் என்ன?

Ø   வினாத்தொடர் என்றால் என்ன?

தொடர்பணி:

·       பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

கற்றல் விளைவு

@ தமிழ்ச்சொற்களையும் பிறமொழிச்சொற்களையும் வேறுபடுத்தி அறிதல்.

@ தொடர்களின் அமைப்பினை அறிந்து பயன்படுத்துதல்.


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை