குறைதீர் கற்றல் பதிவேடு- வகுப்பு 6-10
அன்பார்ந்த தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 6 முதல் 10 வகுப்புகளுக்கு உண்டான வாராந்திர பாடக் குறிப்பில் குறைதீர் கற்றல் அல்லது கற்பித்தல் மிக முக்கியமான படிநிலைகளில் ஒன்றாகும். தற்போது தமிழக அரசுப் பள்ளிகளில், அனைத்து மாவட்டங்களிலும் பல கட்டங்களாக நடைபெற்று வரும் ஆணையர் குழுவின் உயர் அலுவலர்கள் கூட குறைதீர் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
குறைதீர் கற்றல் மேற்கொண்டு மாணவர்களின் நிலைகளை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக 6 முதல் 10.ஆம் வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களுக்கும் மாணவர்களின் குறைதீர் கற்றல் குறித்த விவரங்களைப் பதிவு செய்வதற்கான பதிவேடு இங்கே PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. குறைதீர் கற்றலை மேற்கொள்ளுதலோடு இந்த பதிவேட்டினைப் பராமரித்தலும் மிகவும் அவசியமாகிறது.பதிவேட்டை PDF வடிவில் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.
Download Timer