6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -AUGUST 4 TH WEEK

   6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        : 01-08-2022 முதல் 05-08-2022        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.அறிவியலால் ஆள்வோம்

                                              2.கணியனின் நண்பன்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தேவை என அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø யாருக்கெல்லாம் அறிவியல் அறிஞர் ஆகவேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து, பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுள்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

அறிவியலால் ஆள்வோம்


கணியனின் நண்பன்


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  @ ஆய்வுகளின் அடிப்படையில் யாவற்றையும் நம்புவதே அறிவியல்
@ மனிதன் ஆழ்கடலுக்குச் சென்று ஆய்வுகள் செய்கிறான்.
@ எந்திர மனிதன் உலகையே நமது உள்ளங்கையில் தருகிறான்
@ செக் நாட்டு நாடக ஆசிரியர் காரல் கபெக் ரோபோ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்
@ மனிதனின் உழைப்பின்றி தானாகச் செயல்படுபவையே தானியங்கிகள்
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

        1.ரோபோ என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
        2.எந்திர மனிதன் என்பதை ஆங்கிலத்தில் கூறுக

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.நுண்ணுணர்வுக் கருவிகள் என்றால் என்ன?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.தானியங்கிகள் கண்டுபிடிக்கப்படக் காரணம் யாது?
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

எந்திர மனிதனின் புகைப்படங்களைத் தொகுத்து வருதல்

 112.கற்றல் விளைவு:

  Ø நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தேவை என அறிதல்


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை