9 TH STD TAMIL- REVISION QUESTION PAPER -UNIT-3

 

அலகுத்தேர்வு வினாத்தாள்- இயல் 3

ஒன்பதாம் வகுப்பு                          தமிழ்                   மதிப்பெண்கள்-50

) பலவுள் தெரிக:-                                                                                8X1=8

1. பொருந்தாதஇணைஎது?

அ) ஏறுகோள் – எருதுகட்டி ஆ) திருவாரூர் – கரிக்கையூர்

இ) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.

ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.

இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

3. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத்தரும் தொடர் –

அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

ஆ) புறப்பொருள் வெண்பாமாலைஎன்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில்காணப்படுகிறது.

4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

அ) திசைச்சொற்கள் ஆ) வடசொற்கள் இ) உரிச்சொற்கள் ஈ)தொகைச்சொற்கள்

5.சொற்றொடர்களைமுறைப்படுத்துக.

அ)ஏறுதழுவுதல்என்பதைஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல்என்கிறது

i) ஆ – அ - இ ii) ஆ – இ - அ iii) இ - ஆ - அ iv) இ – அ - ஆ

பாடலப்படித்து பினவரும் வினாக்களுக்கு விடையளிக்க:

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் .

6)இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?

அ.தமிழோவியம் ஆ.தமிழ்விடு தூது இ.மணிமேகலை  ஈ.குறம்

7)இப்பாடல் எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?

)தொடர்நிலைச் செய்யுள் )புதுக்கவிதை  )சிற்றிலக்கியம்  )தனிப்பாடல்

8)எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க

அ.குறம்-கொடுப்பாய்க்கு ஆ.வசியும் வளனும் இ.குறம்-சிந்து  ஈ.பசியும் வசியும்

ஆ) குறு வினா                                                                               7X2=14

9.நீங்கள் வாழும் பகுதியில்ஏறுதழுவுதல்எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

10.பழமணல்மாற்றுமின்; புதுமணல்பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.

11. பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.

12.ஏறுதழுவுதல்குறித்துத் தொல்லியல்சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

13. மரபு இணைச் சொற்களைத் தொடரில்அமைத்து எழுதுக.

     1. மேடும் பள்ளமும் 2. நகமும் சதையும்

14. பொருள் எழுதித் தொடரமைக்க.     கரை, கறை;

15. அகராதியில்காண்க.  அ.இயவை, ஆ.சந்தப்பேழை

இ) சிறு வினா                                                                                            2X3=6

16. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியைவிளக்குக.                

17.ஏறுதழுவுதல், திணைநிலைவாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?                                                                                                     

ஈ. 5 மதிப்பெண் வினாக்கள்:                                                           3X5=15

19.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.                                           

20)தூது அனுப்பத் தாய்மொழியே சிறந்தது என்பதை நிறுவுக.

21) பள்ளியில்நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

உ.நெடுவினா:                                                                             1X7=7

22)ஏறுதழுவுதல்தமிழரின் அறச்செயல்என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க👇



 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை