SCHOOL EDUCATION DEPARTMENT 81 EMIS ONLINE REGISTERS AND G.O

EMIS- 81 வகையான பதிவேடுகள்

   தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நிர்வாகப் பணிச் சுமையைக் குறைக்கும் வண்ணம் பள்ளிகளில் பராமரிக்கப்படும் தேவையற்ற பதிவுகள் நீக்கப்படும். அவசியமான பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு கல்வி. மேலாண்மைத் தகவல் முறைமை(EMIS) வாயிலாக தரத்தக்க வகையில் மாற்றி அமைக்கப்படும் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் பார்வையில் காணும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

     ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைச் செய்து வருவதுடன் பல்வேறு நிர்வாகப் பணிகளையும் செய்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறையின் பல்வேறு காலகட்டங்களில் தேவை கருதியும் நிர்வாக நலனுக்காகவும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தொடர் கவனிப்பு செய்வதற்காகவும் பல்வேறு பதிவேடுகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நிர்வாகப் பணிச்சுமை இயன்ற அளவு குறைக்கப்பட்டால் மட்டுமே கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இயலும். பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 100 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பதிவேடுகள் நாள்தோறும் வாரந்தோறும் மாதந்தோறும் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை என்ற பல்வேறு கால முறைகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் கணினி மயமாக்கப்படும் உள்ள 74 பதிவேடுகள் கணினி தகவல்களை கொண்டு நேரடியாக பராமரிக்கப்படவேண்டிய பதிவேடுகள் ஆகிய மொத்தம் 81 பதிவேடுகளுக்கான தகவல்களை கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் (EMIS)  இருந்து நேரடியாக படி எடுத்து பயன்படுத்த இயலும் இதன் வாயிலாக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் நிர்வாகப் பணி சுமை வெகுவாக குறைக்கப்படும் இதனால் அவர்கள் கற்றல்-கற்பித்தல் பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலும் மேலும் கணினி மயமாக்கப்பட்ட உள்ள பதிவேடுகளில் இருந்து தேவையான விவரங்களை உடனுக்குடன் பெற்று திட்டமிடல் மற்றும் நிர்வாக மேம்பாடு குறித்த நடவடிக்கைகளை எடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
   முதற்கட்டமாக 30 வகையான பதிவேடுகளின் விவரங்கள் மற்றும் அவற்றுக்கான அரசாணை இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

PDF ஐப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.

காத்திருந்தமைக்கு நன்றி!!!

You have to wait 15 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை