10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 12-09-2022 முதல் 16-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.நிகழ்கலை
2. பூத்தொடுத்தல்
3.முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
1.கற்றல் நோக்கங்கள் :
தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மை யறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச்செய்யவும் தங்களின் ப ங்களிப்பை நல்குதல்.
எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறம றிந்து தானே கற்றல்.
கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாட ப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன்அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர் ந்து படித்தல், படைத்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø உங்களுக்குப் பிடித்த நாட்டுப்புறக்கலை எது? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
# சில ஹைக்கூ கவிதைகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
# பிள்ளைத்தமிழ் என்றால் என்ன? என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
# மயிலாட்டம்,காவடியாட்டம்,ஒயிலாட்டம்,தேவராட்டம்,பொய்க்கால் குதிரையாட்டம்,புலி ஆட்டம் தெருக்கூத்து பற்றி அறிதல்
# பூத்தொடுப்போரின் வாழ்வியலின் இயல்பை அறிந்து கொள்ளுதல்
#சிற்றிலக்கியங்களின் தன்மையை அறிதல்
# வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசாமியைப் பாட்ட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழின் கருத்துகளை அறிதல்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நிகழ்க்லைகளின் வகைகளையும்,அவை நிகழ்த்தப்படும் முறைகளையும் தெளிவுற விளக்குதல்
Ø இலக்கணக்குறிப்பை எளிமையாக விளக்குதல்
Ø பகுபத உறுப்பிலக்கணத்தை ஒவ்வொரு படிநிலையாக விளக்குதல்
# சிற்றிலக்கியச் சுவையை மாணவர்களை உணரச்செய்தல்.
6.கருத்துரு வரைபடம்:
நிகழ்கலை
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மை யறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச்செய்யவும் தங்களின் ப ங்களிப்பை நல்குதல்.
எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்.
கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாட ப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன்அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்.