10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 21-08-2023 முதல் 25-08-2023
மாதம் : ஆகஸ்டு
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.கம்பராமாயணம்
2. பாய்ச்சல்
3.அகப்பொருள் இலக்கணம்
1.கற்றல் நோக்கங்கள் :
# இயற்கையழகை நுகர்ந்து அதனைப் பாதுகாத்தல்.
# கலையைப் போற்றுதல்
# சங்க காலத் தமிழரின் வாழ்வியல் நெறிகளை அறிதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
விளக்கப்படங்களைப் பதிவிறக்க
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# தழுவல் இலக்கியம் குறித்துக் கூறுதல்.
# சங்கத் தமிழரின் ஐவகை நிலப் பகுப்புகள் குறித்துக் கூறச் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
@ சரயுநதி பாய்தல்- மருதமும் இயற்கை அழகும்-கோசல நாட்டின் இருப்பும் இல்லாமையும்- இராமனின் அழகு- குகனின் பண்பு- கும்பகருணனை எழுப்புதல்.
@ அனுமன் வேடம்- தெருமுனை -சிறுவன் செயல் -கலைஞனின் பண்பு .
@ நிலமும் பொழுதும்- கருப்பொருள்கள்
5.ஆசிரியர் செயல்பாடு :
# கம்பன் பற்றிய சிறப்புகள், படைப்புகள் குறித்துக் கூறுதல்.
# கம்பராமாயணம் பாடலைப் பொருள் விளங்க பாடுதல்.
# அரிய சொற்களுக்குப் பொருள் கூறுதல்.
# பாய்ச்சல் விரிவானத்திற்குக் குறிப்புகள் அளித்தல்.
# அகத்திணை, அன்பின் ஐந்திணை, முதற்பொருள், கருப்பொருள் போன்றவற்றைப் பட்டியலிடுதல்.
6.கருத்துரு வரைபடம்:
கம்பராமாயணம்
பாய்ச்சல்
அகப்பொருள் இலக்கணம்
7.மாணவர் செயல்பாடு:
# கடினச் சொற்களுக்கு அடிக்கோடல்.
# பொருள் விளக்கம் அறிதல்.
# இராமன், குகன், அனுமன் குறித்துத் தெரிந்து கொள்ளுதல்.
# கலைகளைப் போற்றுதலின் அவசியம் உணர்தல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. உயிரென உலவும் நதி_____________.
2. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் __________.
3. குறிஞ்சிக்குரிய சிறுபொழுது__________
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
4.ஐந்திணைக்குரிய நிலங்கள் யாவை?
5. கும்பகர்ணனை எழுப்பும் விதம் குறித்துக் கூறுக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
6.வண்மையில்லை யோர் வறுமை யின்மையால் - இடைஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
* 1030-அழகியலும் ,கலைநயமும் இலக்கியத்தில் காட்சிப்படுத்தியுள்ளமையை அறிந்து, செய்யுளைப்படித்தல் ,ஓசை நயங்களை உணர்தல்.
# 1031- கதைகளைப் படித்து மையக்கருத்துணர்தல்
# 1032- இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளுதல்