RANIPET DISTRICT SECOND MID TERM EXAM 2022-10 TH STD TAMIL ANSWER KEY

 

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஈ.சிலப்பதிகாரம்

1

2.    

அ.பட்டும் பவளமும்

1

3.     

இ.வலிமையை நிலைநாட்டல்

1

4.     

இ.இடையறாது அறப்பணி செய்தலை

1

5.    

ஆ.திருத்தணி

1

6.    

அ.ராஜம் கிருஷ்ணன்

1

7.     

அ.அகவற்பா

1

8.    

ஆ.ஆசிரியப்பா

1

9.    

அ.கைமாறு கருதாமல் அறம் செய்வது

1

10.   

அ.இகழ்ந்தால் என்மணம் இறந்துவிடாது

1

11.    

ஆ.அதியன்,பெருஞ்சாத்தன்

1

12.  

ஆ.சிலப்பதிகாரம் 

1

13.  

இ.இளங்கோவடிகள்

1

14.  

ஆ.செல்வம்

1

15.  


அ.தூசும் துகிரும்

1

 PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

அரசர்களது வரலாறும் பெருமையும் காலம் கடந்து நிலைத்திருக்க

2

17

வெற்றிலை வணிகர்,நறுமணப்பொருள் வணிகர்,இறைச்சி விற்போர்,உப்பு வணிகர்

2

18

வழக்குகளை ஆராய்ந்து அறம் கூறும் மன்றங்கள்

2

19

அநீதி அழுக்குகளை நீக்குதல்

2

20

வறுமையிலும் கையில் சிறிது பணம் கிடைத்தாலும் நூல்களையே வாங்குவார்

2

21

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

வெட்சி-கரந்தை ,வஞ்சி-காஞ்சி, நொச்சி-உழிஞை ,தும்பை-வாகை    

2

23

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று ஈரடிகளில் வருவது

2

24

வெண்பா-செப்பலோசை ,ஆசிரியப்பா-அகவலோசை, கலிப்பா-துள்ளலோசை வஞ்சிப்பா-தூங்கலோசை

2

25

உதகை,குடந்தை,மயிலை,கோவை

2

26

மயங்கு+இ(ன்)+ய்+அ  மயங்கு-பகுதி, இ(ன்)-இறந்தகால இடைநிலை, ”ன்” புணர்ந்து கெட்டது.ய்-உடம்படு மெய்,அ-பெயரெச்ச விகுதி

2

27

அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப்பார்த்தே வெகுநாட்களாகி விட்டது!

2

28

காப்புரிமை,ஆவணம்

2

  PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

இடம்:மொழி வாரி மாநிலம் பிரிக்கப்படும்போது,சென்னை தமிழகத் தலைநகராக இருக்கவேண்டுமென ம.பொ.சி. முழங்கியது

 

பொரு;ள்: உயிரைக் கொடுத்தாவது தலைநகரைக் காக்க வேண்டும்.

 

விளக்கம்: மொழி வாரி மாநிலம் பிரிக்கப்படும்போது,சென்னை தமிழகத் தலைநகராக இருக்கவேண்டுமென ம.பொ.சி. முழங்கியது. பல போராட்டங்களின் விளைவாக அக்கூற்று மெய்யானது.

3

30

·       கான் அடை-காட்டைச்சேர்

·       கான் நடை- காட்டுக்கு நடத்தல்

          கால் நடை-காலால் நடத்தல்

 

3

31

அ.அரசனின் ஆட்சிக்கு ஆ.மதுரைக்காஞ்சி இ.அவையம்

3

    

  PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

 

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

மூன்று+வேந்தர்  சேரர்,சோழர்,பாண்டியர்

இரண்டு+திணை  உயர்திணை,அஃறிணை

நான்கு+நிலம்  குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்

3

33

வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகை ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும் சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்…

3

34

 

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவைதீமைஎவ்வெவைநன்மை

என்பதறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமேஅட்சய பாத்திரம்!

3

   PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

புளிமா  புளிமா  புளிமா  புளிமா

கருவிளம்  தேமா   மலர்.

3

36

தீவகம்- விளக்கு .விளக்கின் ஒளி பல இடங்களுக்கும் சென்று ஒளி தருவது போல ஒரு சொல் செய்யுளின் பல இடங்களிலும் சென்று பொருள் தருவது.

3

37

ü  இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.

ü  செடியில் பூக்கள் இல்லாமல் இருக்கிறது.

ü  நான் உண்ட உணவில் காரம் கொஞ்சம் அதிகம்.

3

 

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

2)சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளை இக்கால வளாகங்களோடும் அங்காடிகளோடும்  ஒப்பிட்டு எழுதுக.

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. வணிகம் செய்யும் மக்கள் வீதிகளில் அமர்ந்து செய்யும் வணிகமே விளம்பரமாகச் செயல்பட்டது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் செய்தித்தாள், தொலைக்காட்சி,துண்டு பிரசுரம் ஆகிய ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர்.ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் ஒரு பொருள் வாங்குவதற்குப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்,  அகில் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருள் விற்பவர்களும், தானியங்கள் விற்பவர்களும், உப்பு விற்பவர்களும்,எண்ணெய் விற்பவர்களும், பலவிதமான இறைச்சி விற்பவர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.அங்காடிகள் அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் ஆகும்செலவினத்தை,பொருட்களின் விலையை ஏற்றி  நுகர்வோரை பாதிப்படையச் செய்கின்றனர்.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகளில்,அங்கு வரும் மக்களை மகிழ்விக்க  பாணன்,பாடினி,விறலி,கூத்தர்  உள்ளிட்ட இயல் இசை நாடகக் கலைஞர்கள் இருந்தனர். இன்றளவிலும்  வணிக வளாகங்களில் மக்களையும் பொழுதுபோக்கிற்காக  நிறைய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

(அல்லது)

ஆ)

அ)சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்  மனித வாழ்வுக்குத் தேவையான பண்பு நலன்களை  உருவாக்குகின்றன.

 ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

இ)நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின் கடமை என்று சங்கஇலக்கியங்கள் கூறுகின்றன. இக்கருத்து  இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

 ஈ)மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே.

5

39

அ. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

 

அனுப்புநர்

                    அ அ அ அ அ,

                    100,பாரதி தெரு,

                    சக்தி நகர்,

                    சேலம் – 636006.

பெறுநர்

          ஆசிரியர் அவர்கள்,

          தமிழ்விதை நாளிதழ்,

,         சேலம் – 636001

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

          வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                                                                                                            1.கட்டுரை

                                                                                                          இப்படிக்கு,

                                                                                                                                                    தங்கள் உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                                                   அ அ அ அ அ.                                  

நாள் : 04-03-2021


உறை மேல் முகவரி:

  PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

(அல்லது)

ஆ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில்நடந்துசெல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரியஅலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரியஅலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

     ப.இளமுகில்,

     6,காமராசர் தெரு,

     வளர்புரம்,

     அரக்கோணம்-631003

பெறுநர்

      உதவிப்பொறியாளர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

     அரக்கோணம்-631001    

ஐயா,

    பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.

      வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்படுகின்றனர்.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

நன்றி!!

                                                                                                  இப்படிக்கு,

                                                                                                தங்கள் பணிவுடைய,

                                                                                                                                    ப.  இளமுகில்                                                                                                                                          

இடம்:அரக்கோணம்,

நாள்:15-10-2022 

 


5

40

அ) சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அல்லது)

ஆ) திரண்ட கருத்து :

          கோடை வெப்பத்தில் துன்பப்படுகிறவர்களுக்கு இளைப்பாற ஏற்ற குளிர்ந்த மரம் போன்றவனாகவும்,அம்மரம் தரும் நிழல் தருபவனாகவும், அந்நிழலிடத்தில் மரத்தில் பழுத்த பழமாகவும், அதனை ஒட்டி அமைந்த் நீரோடையில் ஓடும் இன்சுவை நீராகவும், அந்த ஓடையில் மலர்ந்த நறுமணமிக்க மலராகவும், மென்மையாக வீசுகின்ற பூங்காற்றாகவும், அந்த காற்றினால் சுகத்தை தருபவனாகவும், சுகத்தில் உண்டான இன்ப பயனாகவும், சிறு வயதில் என்னை மணந்த மணவாளனாகவும் இருக்கும் அம்பலத்தில் ஆடும் அரசே என் பாமாலையை ஏற்றுக் கொள்க.

மையக் கருத்து:

          வள்ளலார் அனைத்துப் பொருட்களிலும் இறைவனைக் காணுகிறார். அதனை பாமலையாக சூட்டுகிறார்.

மோனை :

          சீர்தோறும் அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

          கோடையிலே - குளிர்தருவே

          டையிலே  - கந்ததண்ணீர்

          மேடையிலே - மென்காற்றில்

          டையிலே - டுகின்ற

எதுகை :

          சீர் தோறும் அடி தோறும் முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

          கோடையிலே - டையிலே      

          மேடையிலே - டையிலே       

இயைபு :

          அடிதோறும் இறுதியில் உள்ள எழுத்தோ,அசையோ,சீரோ ஒன்றி வருவது இயைபு.

          கனியே – தண்ணீரே

          மலரே - காற்றே

          பயனே          - அருளே

அணி நயம் :

          இப்பாடல் இறைவன மரமாகவும், நிழலாகவும், கனியாகவும், மலராகவும், தென்றலாகவும் பாடியிருப்பதால் உருவக அணி வந்துள்ளது.

சந்த நயம் :

            அடிதோறும் எட்டு சீர்களைப் பெற்றுள்ளதால் எண் சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5

41

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

5

42

 

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று சொன்னது

இந்தக் காட்சி!       

உழவைப் பற்றி எழுதினேன்!

அனைவரும் இதன் அருமை அறிந்து

நடக்க வேண்டும்!

வாழ்க்கையில் மேலும் உயர வேண்டும்!

 

 



5

  PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக 

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

அ)

பாடலின் திரண்ட கருத்து:

   இராசராசன்  எட்டு திசைகளிலும் உள்ள காவல் தெய்வங்கள்  ஒன்றிணைந்தது போல் ஆட்சி செய்தான். அவனது நாட்டில்,

·        யானைகள் மட்டுமே பிணைக்கப்பட்டு இருந்தன.

·        சிலம்புகள் மட்டுமே புலம்பின.

·        ஓடைகள் மட்டுமே கலக்கம் அடைந்திருந்தன.

·        நீர் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தது.

·        மாங்காய்கள் மட்டுமே வடுப்பட்டிருந்தன.

·        மலர்கள் மட்டுமே பறிக்கப்பட்டு இருந்தன.

·        காடுகள் மட்டுமே கொடியனவாக இருந்தன.

·        வண்டுகள் மட்டுமே தேன் உண்பதாக இருந்தன.

·        நெற்கதிர்கள் மட்டும் போராகவும்,மலைகள் மட்டுமே இருள்சூழ்ந்ததாகவும்,

·        இளம் ஆண்களின் கண்கள் மட்டுமே பயந்ததாகவும்,

·        குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து சென்றதாகவும்,

·        செவிலித்தாய் மட்டுமே சினம் கொண்டதாகவும் போது சரியான

·        இசைப் பாணர்கள் மட்டுமே ஆடிப்பாடியதாகவும்  கல்வெட்டுகள் கூறுகின்றன. 

மையக்கருத்து:

      இரண்டாம் ராசராசன் நாட்டில் வாழ்ந்த மக்கள் எல்லா உரிமைகளையும் பெற்று வாழ்ந்ததாக  இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.

மோனை நயம்:

         செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

     மாவே 

     மா மலரே

     இயற்புலவரே

     இசைப்பாணரே

ஆகிய சொற்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.

 எதுகை நயம்:

          செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.

     இந்திரன்      வாழிபெற்ற          கயற்குலமே

     வந்தபடி      மொழிபெற்ற         இயற்புலவரே

ஆகிய சொற்களில் திரைப் பயின்று வந்துள்ளது.

 

அணிநயம்:

       இரண்டாம் இராசராசனின் ஆட்சிச் சிறப்பை உயர்வு படுத்திக் கூறியுள்ளதால்,       இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

சந்தநயம்:

   இப்பாடல் எதுகை,மோனை நயங்கள் சிறப்புற அமைந்து சந்தநயம் மிக்க பாடலாக அமைந்துள்ளது.

(அல்லது)

ஆ)

ü  வீட்டைத்தூய்மையாக வைத்திருத்தல்

ü  மழைநீரைச் சேமித்தல்

ü  பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல்

ü  வீதிகளைத் தூய்மைப்படுத்தல்

ü  மரங்களை வளர்த்தல்

ü  இயற்கை உரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

 

8

44

அ)இராமானுசர் நாடகத்தை எழுதிய மாணவரின் மொழிநடை,பிழையின்மை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.

(அல்லது)

ஆ) சாதனைப்பெண்களைப் பற்றி எழுதிய மாணவரின் மொழிநடை, பிழையின்மை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.

 

8

45

அ) நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும்.

நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள்  விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

      இந்திய நாட்டிற்காக தனியான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுமையான மக்களாட்சி அரசியலமைப்பு பெற்றநாளை குடியரசுநாள் விழாவாக ஜனவரி 26இல் கொண்டாடுகிறோம்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக ஆங்கிலேயர்கள்  பெரும்பான்மையான  சிற்றரசுகளைக் கைப்பற்றி  நாட்டை ஆளத்தொடங்கினர்.இது  பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

         எண்ணற்றோர் சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கொடிகாத்த குமரன், தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி  ஆகியோர் அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும் இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

        நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

           மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்  மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.கல்வியறிவில் முக்கியத்துவத்தைப் பொது மக்களுக்கு உணர்த்த வேண்டும். மேலும், காந்தி பிறந்த தினம்,ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், கொடி நாள், விடுதலை நாள், வழிபாட்டு நாள் போன்ற விழாக்களைத் தாமே முன்னின்று நடத்திய முனைய வேண்டும்.

(அல்லது)

ஆ)உறவுமுறைக் கடிதம் எழுதும் பின்வரும் கூறுகளைக் கொண்டு சரியாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

ü  இடம்,நாள்

ü  விளித்தல்

ü  நலம் வினவுதல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி.

 

8

   PDF  வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை