9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JANUARY 4 TH WEEK

  9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        : 23-01-2023 முதல் 27-01-2023         

மாதம்          ஜனவரி    

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. விரிவாகும் ஆளுமை

                                             2.அக்கறை

1.கற்றல் நோக்கங்கள்   :

      @ சான்றோர்க ள், அறிஞர்கள் ஆகிேயாரின் உழைப்பாகிய உரத்தில் தமிழ்ப்பயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து, தம்மால் இயன்ற பங்களிப்பை நல்குதல்

Ø          @ புதுக்கவிதைகளைப் படிப்பதால் , தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # யாதும் ஊரே என்று கூறியவர் யார் தெரியுமா?

       #யாரெல்லாம் மற்றவர்க்கு உதவ விரும்புகிறீர்கள்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

    விரிவாகும் ஆளுமை:

@ மூன்று இலக்கணங்கள்

@ பிறர் நலவியல்

@ ஒற்றுமை உணர்ச்சி

@ இலக்கணத்தில் பரந்த மனப்பான்மை

@ நன்மை நன்மைக்காகவே

@ இமயவரம்பு

@ ஒன்றே உலகம்

அக்கறை:
@ மற்றவர் மீதும் அக்கறையோடு செயல்படவேண்டும்.

5.ஆசிரியர் செயல்பாடு :

     §  உரைநடைப் பகுதியை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்

§  பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

§  புதுக்கவிதை எழுத மாணவர்களுக்குக் கற்றுத் தருதல்

6.கருத்துரு வரைபடம்:

விரிவாகும் ஆளுமை

அக்கறை




7.மாணவர் செயல்பாடு:

   Ø  தன்னிடம் உள்ள ஆளுமையை அடையாளம் காணுதல்.

Ø  புதுக்கவிதை எழுதக் கற்றுக் கொள்ளுதல்

@ வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. தனிநாயகம் அடிகள்------பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்
2. கல்யாண்ஜியின் இயற்பெயர்--------

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3.விரிவாகும் ஆளுமை கட்டுரையில் உங்களைக் கவர்ந்த கருத்துகள் யாவை?

4.கல்யாண்ஜி-குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ள என்னவெல்லாம் செய்வீர்கள்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       9044- சான்றோர்களின் அறிஞர்களின் தமிழ்ப்பணிகளைப் படித்துணர்ந்து தம்மால் இயன்ற பங்களிப்பினைச் செய்தல்..

Ø          @ 9045-தற்கால கவிதைப் போக்கினை அறிந்து புதுக்கவிதைகளைப் படித்தல் அவை போல எழுதுதல்

      திறன்கள்:

      @ பேசுதல்,எழுதுதல்

9.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇





      

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை