8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JUNE 5 TH WEEK

      8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 26-06-2023 முதல் 01-07-2023         

மாதம்         ஜூன்

வாரம்     :  ஐந்தாம் வாரம்                      

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     : கவிதைப்பேழை (ஓடை , கோணக்காத்துப்பாட்டு)

1.கற்றல் நோக்கங்கள்   :

        @ பாடலை ஓசை நயத்துடன் படித்துச் சுவைத்தல் 

       Ø நாட்டுப்புறப் பாடல்கள் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

           @ மனித வாழ்வு இயற்கையோடு இயையந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப் மாலைப் பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடை யும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை . அவ்வா று மனத்திற்கு இன்ப மூட்டும் கவிதை ஒன்றைக் கற்போம் வாருங்கள்!

      மேற்கண்ட கருத்தைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

@ ஒலி எழுப்பிக்கொண்டு ஓடும் ஓடையைப் பார்க்கும்போது அனைவருக்கும் தானாகவே மகிழ்ச்சி வந்துவிடுகிறது

@ அனைத்துவகை நிலங்களுக்கும் ஓடை நீரைக்கொண்டு சேர்க்கிறது

@ ஓடை அனைவருக்கும் ஒரே மாதிரியான பயனைத் தரவல்லது.

@ இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது. ஆனால் அது சீற்றம் கொண் டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத் தி விடும். தமிழ்நாடு அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும். முன்பு ஒருமுறை தமிழ்நாடு புயலால் தாக்குண்டது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல் ஒன்று நமது பாடப்பகுதியாகும்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

    Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.  

    Ø ஓடையின் பயன்களை நடைமுறைச் சான்றுகளுடன் மாணவர்களுக்கு விளக்குதல்

    Ø சூரைக்காற்று என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்              :

கோணக்காத்துப்பாட்டு

7.மாணவர் செயல்பாடு:

Ø  ஓடை மக்களுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்பதை அறிதல்.

Ø   ஓடைகளை அழியாமல் காக்க வேண்டும் என அறிதல்

@ புயல் தாக்கத்தின்போது மக்கள் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என அறிதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
@ ஓடை பாடலின் ஆசிரியர் யார்?
Ø  வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
Ø  கோணக்காத்துப்பாட்டு எந்த பகுதியிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது?விளக்குக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
      Ø கோணக்காத்து மக்களின் வாழ்வில் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கியது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:     

     @ 814 தான் எழுதுவதை படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்

      திறன்கள்:

      @ படித்தல்,பேசுதல்

                                                 8.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை