9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 26-06-2023 முதல் 01-07-2023
மாதம் : ஜூன்
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. நீரின்றி அமையாது உலகு
2.பட்ட மரம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல்
Ø கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# உங்கள் ஊரைச்சுற்றியுள்ள நீர் நிலைகள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø தமிழரின் நீர் மேலாண்மை
@ கல்லணை கரிக்காலனால் கட்டப்பட்டு நீர்ப்பாசனம் சிறந்திருந்தது
Ø ஜான் பென்னி குயிக் முல்லைபெரியாறு அணையைக் கட்டினார்.
# குமிழித்தூம்பு பயன்படுத்தப்பட்டது
@ மரங்களை அழிப்பது மனிதனுக்குப் பேராபத்து.
@ கவிஞர் தமிழ் ஒளி பாரதியாரின் வழித்தோன்றல் ஆவார்
@ தொடர் வகைகள் மற்றும் தொடர் அமைப்பு
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø தமிழரின் நீர் மேலாண்மையை தெளிவாக விளக்குதல்.
Ø நீரின் தேவையை நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு உணர்ந்தனர் என்பதை அறிந்துகொள்ளச்செய்தல்
Ø நீரின்மையால் மரங்கள் அழிந்து வருவதை மாணவர்க்குப் புரியவைத்தல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 9005 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மொழிக்கூறுகளைக்
கருத்தரங்கிற்கு ஏற்றவாறு திரட்டி, பகுத்தும் தொகுத்து முறைப்படுத்திப் பேசுதல்.
@ 9006 - பாடல்களில் வெளிப்படுத்தும் இயற்கையழகை உணர்ந்து உள்வாங்குதல்.
கவிதையின் மொழி நடையைப் படித்தறிந்து புதிதாக உருவாக்குதல்.