10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 26-06-2023 முதல் 01-07-2023
மாதம் : ஜூன்
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. முல்லைப்பாட்டு
2. புயலிலே ஒரு தோணி
1.கற்றல் நோக்கங்கள் :
@ குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயன்பாட்டுத் திறத்தினையும் படித்துச் சுவைத்தல்.
Ø கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø மழை பெய்தவுடன் என்னென்ன நிகழ்வுகள் நிகழும்? என்ற வினாவைக்கேட்டு அதன்மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்
Ø யாரெல்லாம் கப்பலில் பயணம் செய்துள்ளீர்கள்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ அகன்ற உ லகத்தை வளைத்துப்பெருமழை பொழிகிறது. வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடைய திருமால் ,குறுகிய வடிவம் கொண் டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும்விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம்.அம்மழைக்காலத்தில் தலைவிக்காக விரிச்சி கேட்டு நின்றனர்
@ இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியமாய் அமையும்போ து இனிமையும் மகிழ்வும் ஒருங்கே பெறுகிறோம். அதேஇயற்கையின் அசைவு சீற்றமாய்,ஊழித்தாண்டவமாகமாறுகையில் எதிர்நிற்க இயலாது தோற்றுத்தான் போகிறோம். சுற்றியுள்ளஇயற்கை நம் மைச் சுருட்டிச் செல்ல எத்தனிக்கும்போ து, புயலின்பெருங்காட்சி உயிரை உறையவைக்கிறது. அதில் கிடைக்கும் அனுபவம் சொல்லொணாதது.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø முல்லைப்பாட்டு பாடலின் பொருளை உணர வைத்தல்
Ø இலக்கணக்குறிப்பைப் புரிய வைத்தல்
Ø கவிதையின் நயங்களை உணர்த்துதல்
Ø காற்று எவ்வளவு வலிமையானது என வருணனைகள் மூலம் விளக்குதல்
Ø காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1008 - சங்ககால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப்பயன்பாட்டுத் திறனையும் படித்து சுவைத்து, அவை சார்ந்த தங்களின் கருத்துகளைர் பதிவு செய்தல்.
Ø @ 1009 - குறிப்புகளைக் கொண்டு படைப்புகளை உருவாக்குதல், அனுபவங்கள் வழி வெளிப்படும் எண்ணங்களை வருணித்தும் விவரித்தும் எழுதுதல்.
10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க