10 TH STD TAMIL MODEL LESSON PLAN -AUGUST 2 nd WEEK (2023-2024)


  10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 31-07-2023 முதல் 04-08-2022        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   இரண்டாவது வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. மொழிபெயர்ப்புக் கல்வி

                                            2. நீதிவெண்பா                                    

1.கற்றல் நோக்கங்கள்   :

     Ø கல்வி சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும், சுவைக்கவும், இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.

Ø        @ மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையையும் நுட்பத்தையும் உணர்ந்து

ம  மொழிபெயர்ப்புப் பகுதிகளைப் படித்தல், புதிய பகுதிகளைத் தேவைக்கேற்ப மொழிபெயர்த்தல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)




3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  கல்வியால் உயர்ந்தவர்கள் பெயர் சிலவற்றைக் குறிப்பிடுக என்று கூறி மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

    # மொழிபெயர்ப்பு-தொடக்கம்

     # மொழிபெயர்ப்பு-தேவை

     #மொழிபெயப்புக் கல்வி

     # மொழிபெயர்ப்பு செம்மை

     #  பல்துறை வளர்ச்சி

    #  அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி,அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம்சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  மொழிபெயர்ப்பின் அவசியம்,மொழிபெயர்ப்பின் பயன்கள் முதலானவற்றைத் தக்க நடைமுறைச் சான்றுகளுடன்  விளக்குதல்

       Ø  மொழிபெயர்ப்பு உலக வரலாற்றில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைச் சுவைபட விளக்குதல்

       Ø  கல்வியின் இன்றியமையாமையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவுற விளக்குதல்.

6.கருத்துரு வரைபடம்:


மொழிபெயர்ப்புக் கல்வி


நீதிவெண்பா

7.மாணவர் செயல்பாடு:

      Ø  மொழிபெயர்ப்பின் தேவைகளை ஆய்ந்தறிதல்.
     Ø  உரைநடைப்பகுதியை பிழையின்றி  படித்தல்
     Ø  அருஞ்சொற்களின் பொருளறிதல்
     Ø  நூல்வெளியிலுள்ள செய்திகளை அறிந்து கொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.CAMEL என்ற சொல்லின் பொருள் யாது?
2.நீதிவெண்பாவை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.மொழிபெயர்ப்பு ஏன் அவசியமாகிறது? 
2.சதாவதானம் என்றால் என்ன?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1..தவறான மொழிபெயர்ப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

#  1022 - மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையும் நுட்பத்தையும் உணர்ந்து

 மொழிபெயர்ப்புப் பகுதிகளைப் படித்தலபடித்த பகுதியின் கருத்துகளுடன் தங்கள்

கருத்துகளையும் இணைத்து எளிமையாக வழங்கும் திறன் பெறுதல்

Ø 1023- செய்யுள் உணர்த்தும் கல்வி சார்ந்த கருத்துகளை அறிந்து சுவைத்தல்,

இன்றைய கல்வியுடன் ஒப்பிட்டு உணர்ந்து பேசுதல்எழுதுதல்.

       
கடந்த வார மாதிரி பாடக்குறிப்புகளைக் காண👇👇

(ஜூலை நான்காம் வாரம்)

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை