8 TH STD TAMIL MODEL LESSON PLAN -AUGUST 1 ST WEEK (2023-2024)

  8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 31-07-2023 முதல் 04-08-2022        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. தமிழர் மருத்துவம்

                                            2. தலைக்குள் ஓர் உலகம்

                                             3. எச்சம்

1.கற்றல் நோக்கங்கள்   :

       # தமிழர் மருத்துவத்தின்  தன்மையையும் சிறப்பையும் அறிந்து பெருமிதம்

கொள்ளுதல்

       Ø மூளையின் செயல்பாடுகள் பற்றிய புதுமையான செய்திகளை அறிந்து மகிழ்தல்

      # எச்சச்சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள் , காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        @ அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்

         Ø மனித மூளையினைப் பற்றி சில வியப்பூட்டும் உண்மைகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

          #  பேச்சு வழக்கில் எச்சங்கள் பயன்படும் சில இடங்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  : 

  • தமிழர் மருத்துவம்  மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

  •  இது தமிழகத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்கள் வளர்த்த மருத்துவம் ஆகையால் இது சித்த மருத்துவம் என்றும் போற்றப்படுகிறது.

  • மூளையின் அமைப்பு

  • மூளையின் உணவு

  • மூளையின் வலதும் இடதும்

  •  மூளையும் அன்றாட நிகழ்வுகளும்.

  • பொருள் முடிவு பெறாமல் எஞ்சி இருக்கும் சொல் எச்சம் எனப்படும்.

  • எச்சம் பெயரெச்சம் ,வினையெச்சம் என இருவகைப்படும்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

    @ உணவே மருந்து எனும் கருத்தை நடைமுறைச்சான்றுகளுடன் விளக்குதல்

    Ø  மூளை பற்றிய செய்திகளை காணொளிகள் மற்றும் விளக்கப்படங்கள் மூலம் விளக்குதல்

   Ø நூல்வெளி பகுதியைத் தெளிவாக விளக்குதல் விளக்குதல்.

   Ø  எச்சத்தின் வரையறையைத் தெளிவாகக் கூறுதல்

   Ø  எச்சத்தின் வகைகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

தமிழர் மருத்துவம்


தலைக்குள் ஓர் உலகம்



இலக்கணம்- எச்சம்

7.மாணவர் செயல்பாடு:

      Ø  மூளையின் அமைப்பினப் பற்றி அறிதல்
     Ø  மூளையின் செயல்பாடுகளைப்பற்றி அறிதல்
     Ø  எச்சத்தின் வரையறையைப் படித்துத் தெரிந்துகொள்ளுதல்.
     Ø எச்சத்தின் வகைகளைப் புரிந்துகொள்ளுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.மூளைக்குத்தேவைப்படும் காற்று எது?
2.எச்சம் எத்தனை வகைப்படும்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.எச்சம்-வரையறு
2.மூளையின் அமைப்பு யாது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.மூளையின் அன்றாட நிகழ்வுகள் யாவை?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

      Ø 801- மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடப்பொருள்களின் மீது

 எழுதப்பட்டவற்றைப் படித்துக் கலந்துரையாடச் செய்தல் ( பாடப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட

 பறவையின் விவரிப்புடன், பறவைகள் பற்றிய ஆய்வாளரான சலீம் அலியின் புத்தகத்தைத் 

தொடர்பு படுத்திக் கூறுதல்)

      # 803- படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக்கொள்ளல்.

   816- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது

 பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப்

 புரிந்துகொள்ளுதல்)

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை