7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 31-07-2023 முதல் 04-08-2023
மாதம் : ஆகஸ்டு
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்
2. கப்பலோட்டிய தமிழர்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø நாட்டுப்பற்றில் சிறந்த ஆளுமைகள் குறித்து பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø பசும்பொன் என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா?
@ கப்பலோட்டிய தமிழர் யார்?
ஆகிய வினாக்களைக் கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.படித்தல் :
உரைநடை மற்றும் விரிவானம் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
பசும்பொன்னார்
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி
வ.உ.சியின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதுக.
12.கற்றல் விளைவு
Ø 702- ஒன்றைப் படிக்கும்போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட
சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும், கருத்துகளைத் தமது சொந்த
கருத்துகளுடன் அனுபவங் களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன்
படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்
# 708- வெவ்வேறான உணர்ச்சிகரமான பாடப்பொருள் / பிரச்சனைகள் (சாதி, மதம்,
நிறம், பாலினம், சடங்குகள் போல்வன) மீது காரணகாரிய அடிப்படையில் தங்கள்
கருத்துக்களை வெளிப்படுத்துதல்