8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 24-07-2023 முதல் 28-07-2023
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.நோயும் மருந்தும் (கவிதைப்பேழை)
2. வருமுன் காப்போம் (கவிதைப்பேழை)
1.கற்றல் நோக்கங்கள் :
Ø உடலின் சிறப்பையும், உடல் ஓம்பும் முறைகளையும் இலக்கியங்கள் வழி அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை. நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
கவிமணி எனப்போற்றப்படும் தேசிக விநாயகனார் குமரிமாவட்டம் தேரூரில் பிறந்தார்.
36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவர் ஆசிய ஜோதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்
உமர்கய்யாம் பாடல்கள் எனும் மொழிபெயர்ப்பு நூலையும்இயற்றியுள்ளார்
பாடப்பகுதி அவரது மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.
அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø சிற்றிலக்கியங்கள் எவ்வெவை என்பதைக் கூறல்.
Ø நீலகேசி குறித்த நூற்குறிப்புகளை விளக்குதல்.
Ø நீலகேசி பாடலைச் சீர் பிரித்து படித்துக் காட்டல்
Ø மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.
Ø வருமுன் காத்தலின் அவசியத்தைச் சான்றுகளுடன் விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
நோயும் மருந்தும்
வருமுன் காப்போம்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு: