8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON SEPTEMBER 1ST WEEK (REVISION)

   8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  04-09-2023 முதல் 08-09-2023   வரை

மாதம்          செப்டம்பர்

வாரம்     :   முதல் வாரம்                                            

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு       

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  திருப்புதல் ( இயல் 1 முதல் 4)

1.கற்றல் நோக்கங்கள்   :

      @ மாணவர்களை காலாண்டுப்பொதுத்தேர்வுக்குத் தயார் செய்தல்.    

2.மதிப்பீடு (முக்கிய வினாக்கள்)       

04-09-2023 (குறு வினாக்கள் : செய்யுள் , உரைநடை)

1.ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

2.பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?

3.நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

4.தாய்நாடு எனும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

5.தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுபவை யாவை?

6.ஓவிய எழுத்து என்றால் என்ன?

7. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

8. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

05-09-2023 (குறு வினாக்கள் :  இலக்கணம் , மொழித்திறன் பயிற்சி)

1.எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

2.வினைமுற்று என்றால் என்ன?

3.உரிமைப்பொருளில் வரும் வேற்றுமையைச் சான்றுடன் விளக்குக.

4.பொருத்தமான நிறுத்தற்குறியிடுக : 

        அ.மூவேந்தர் சேரர் சோழர் பாண்டியர்  ஆ.பாம்பு பாம்பு

5.கலைச்சொல் தருக : அ.REFORM  ஆ.VALLEY

6.சரியான மரபுச்சொல்லால் நிரப்புக: 

       அ.தண்ணீர்---(குடி/பருகு)  ஆ.சுவர்-----(கட்டு/எழுப்பு)

7. பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.

    கல், பூ, மரம், புல், வாழ்த்து, சொல், மாதம்,

06-09-2023 (சிறு வினாக்கள் :  உரைநடை)

1.  தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி.க. கூறுவனவற்றை எழுதுக.

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை ?

3. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவமாற்றங்களை எழுதுக.
4. எவையெல்லொம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகின்றார்?
5. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

07-09-2023 (சிறு வினாக்கள் : செய்யுள்)

1.  ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

2. உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

3.  தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

4.  புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?

5. நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

08-09-2023 (சிறு வினாக்கள் :  இலக்கணம், மொழிப்பயிற்சி)

1.  ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே யுள்ள வேறுபாடுகள் யாவை?

2. எச்சம் என்றால் என்ன?அதன் வகைகளை எழுதுக.

3. எழுவாய் வேற்றுமையை விளக்குக.

4. ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை