8 TH STD TAMIL UNIT 7 QUESTION & ANSWER

 

8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

இயல் - 7 

படை வேழம்  (பக்க எண்: 146 மதிப்பீடு)

ரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிங்கம் _____யில் வாழும்.

அ) மாயை  ஆ) ஊழி   இ) முழை   ஈ) அலை

2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _____.

அ) வீரம்    ஆ) அச்சம்    இ) நாணம்    ஈ) மகிழ்ச்சி

3. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) வெம் + கரி  ஆ) வெம்மை+ கரி   இ) வெண்+ கரி ஈ) வெங் + கரி

4. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) என் + இருள் ஆ) எட்டு + இருள்    இ) என்ற+ இருள்    ஈ) என்று + இருள்

5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) போன்றன     ஆ) போலன்றன     இ) போலுடன்றன   ஈ) போல் உடன்றன

குறுவினா

1. சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?

விடை : கலிங்கர்  தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி,அலைந்து குலைந்து நடுங்கினர்.

2. கலிங்கவீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?

விடை :  எத்திசையில் செல்வது எனத்தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

3. சோழனின் யானைப் படையைக் கண்டவீரர்களின் செயல்கள் யாவை?

விடை:     சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்தகுகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

சிறுவினா

சோழ வீரர்களைக் கண்டகலிங்கப் படைவீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?

விடை:

சோழர் படையின் தாக்குதலைக் கண்டகலிங்கர், இஃது என்னமாய வித்தையாஎன வியந்தனர். தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர். சோழர்படைதம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.

அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத்தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர். எத்திசையில் செல்வது எனத்தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

கலிங்கவீரர்கள் ஒருவரைஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர்.

சிந்தனைவினா

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?

விடை:

v  இயற்கை அரண்கள்

v  வலிமையான இராணுவம்

v  துணிச்சல் மிக்க இராணுவ வீரர்கள்

விடுதலைத் திருநாள்  (பக்க எண்: 149 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.வானில் முழுநிலவு அகாக ----------  அளித்தது.

அ) தயவு இ துணிவு  ஆ) தரிசனம்   ஈ) தயக்கம்

2.இந்த-------முழுவதும் போற்றும்படி வாழவதே சிறந்த வாழ்வு.

அ) வையம்   ஆ) வானம்  இ) ஆழி   ஈ) கானகம்

3.சீவனில்லாமல் - எனனும் சொல்லைப் பிரிந்து எழுதக் கிடைப்பது

அ) சீவ + நில்லாமல் ஆ)சீவன் + நில்லாமல் ) சீவன் +இல்லாமல்   ஈ) சீவ + இல்லாமல்

4.விலங்கொடித்து - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) விலம் + கொடித்து ஆ) விலம் + ஓடித்து இ விலன் + ஓடித்து ஈ) விலங்கு + ஓடித்து

5.காட்டை + எரித்து - என்பதனைச் சேர்த்தெழுதக கிடைக்கும் சொல்

அ) காட்டைஎரித்து ஆ) காட்டையெரித்து  இ)காடுரித்து   ஈ) காடுயெரித்து

6. இதம் + தரும் - என்பதனைச் சேர்த்தெழுதக கிடைக்கும் சொல்

அ) இதந்தரும்   ஆ) இதம்தரும்   ) இதத்தரும்   ஈ) இதைத்தரும்

குறுவினா

1. பகத்சிங் கண்ட களவு யாது?

விடை: இன்று இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் என்று பகத்சிங் கனவு கண்டார்.

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

விடை:  300 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என்று  மீரா குறிப்பிடுகிறார்.

சிறுவினா

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

விடை:   அடிமையாய்த் தவித்துக்கொண்டிருந்த இந்தியத்தாய் சினத்துடன் எழுந்துதன்னுடைய கை விலங்கை உடைத்து, பகைவரை அழித்து, * தன்னுடைய அமிதை கூந்தலை முடித்துதன் நெற்றியில் திலகமிட்டுக் காட்சியளிக்கிறான்.

சிந்தனை வினா

நாட்டுப்பற்றை வளர்க்கும்  வகையில் விடுதலை நானை எவ்வாறு கொண்டாடலாம்?

விடை:  விடுதாய் போட்ட நிகழ்வு காட்சிகளை நாடகமாக நடத்தவலம் விடுதலை வீராகனைப் போல வேடமிட்டு அவர் தம் செயல்களை எடுத்துக் கூறலாம். விடுதலை போராட்டங்கள் குறித்த செய்திகளை உணர்த்தும் வகையில் பேச்சுப் பேசட்டி, கட்டுரைப் போட்டிஙமன வைக்கலாம்.

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்  (பக்க எண்: 154 மதிப்பீடு)

சரியான  விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எம்.ஜி.ஆர். _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

அ) கண்டி   ஆ) கும்பகோணம்  இ) சென்னை   ஈ) மதுரை

2. எம்.ஜி.ஆர். படிப்பைத்  தொடர முடியாமைக்குக் காரணம் _____ .

அ) நடிப்பு ஆர்வம்   ஆ) பள்ளி இல்லாமை   இ) குடும்பவறுமை   ஈ)படிப்பில் ஆர்வமில்லாமை

3. இந்திய அரசு சிறந்தநடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.

அ) புரட்சித்தலைவர்  ஆ) பாரத்   இ) பாரதமாமணி    ஈ) புரட்சி நடிகர்

4. ஐந்தாம் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்றஇடம் _____

அ) திருச்சி   ஆ) சென்னை   இ) மதுரை   ஈ) கோவை

5. எம்.ஜி.ஆருக்கு அழியாதபுகழைத்தேடித்தந்ததிட்டம் _____.

அ) மதிய உணவுத்திட்டம் ஆ) வீட்டு வசதித்திட்டம் இ) மகளிர் நலன் திட்டம் ஈ) இலவசக் காலணித்திட்டம்

குறுவினா

1. எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?

விடை: எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் குடும்ப வறுமை ஆகும்.

2. திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத்திறமைகள் யாவை?

விடை: நடிகர் , தயாரிப்பாளர் ,இயக்குநர்

3. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனைஎழுதுக.

விடை:

v  உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்

v  ஆதரவற்றமகளிருக்குத்திருமண உதவித்திட்டம்

v  தாய்சேய்நல இல்லங்கள்

v  நலிவடைந்தபிரிவைச் சேர்ந்தமாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்

v  முதியோருக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம்

சிறுவினா

1. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தநிகழ்வைஎழுதுக.

விடை:

ü  பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தநிகழ்வை எழுதுக. எம்.ஜி.ஆரும் அவரது மனைவியும் ஒரு முறை வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.

ü  அப்போது மூதாட்டி ஒருவரும், பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் யில் காலணி இல்லாமல் தலையில் புல் கட்டுகளைச் கமந்தவாறு சென்று கொண்டிருந்தனர்.

ü  சாலையின் சூடு தாங்காமல் மரநிழலில் நிற்பதும், ஓடுவதுமாக இருந்தனர்.உடனே எம்.ஜி.ஆர் தமது மனைவியாரின் காலணியையும் உறவினப் பெண்ணின் காலணியையும் அவர்களுக்குக் கொடுத்துப் பணம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது.

ü  அதனால், பின்னர் பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்

2. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?

விடை:

ü  தந்தைப் பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப் படுத்தி தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.

ü  மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடடைச் சிறப்பாக நடத்தினார்.

ü  தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

நெடுவினா

எம்.ஜி.ஆரின் பண்புநலன்களைவிளக்கி எழுதுக.

விடை:

ü  திரைப்படத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகொண்டவர் எம்.ஜி.ஆர்.

ü  தாம் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் மூலம் உயரிய கருத்துக்களை மக்களிடம் விதைத்தார்.

ü  வாழ்வின் உயர்நிலையை அடைந்த பின்னரும் எளிமையாக வாழ வேண்டும் என்பதைத்தன் பாடல்களில் கூறினார். அப்பாடலுக்கு ஏற்ப தாமும் வாழ்ந்தார் ஏழை மக்கள் காலில் காலணி கூட இல்லாமல் நடந்து செல்லும் நிகழ்ச்சி அவரது மனதை ஆழமாகப் பாதித்தது.

ü  அதனால் பின்னர் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு இலவச காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

ü  எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அரும்பாடுபட்டார். உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம், முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் முதலிய எண்ணற்ற திட்டங்களை ஏழைகளுக்காகக் கொண்டு வந்தார்.

சிந்தனைவினா

சிறந்தஅரசியல் தலைவருக்கு இருக்கவேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?

விடை:

ü  தன்னலமின்மை

ü  மக்கள்மீது அளவற்ற அன்பு

ü  ஏழை எளியோரைப் பற்றி சிந்தித்தல்

ü  அறிஞர்களது ஆலோசனைகளைக் கேட்டல்

அறிவுசால் ஔவையார்  (பக்க எண்: 160 மதிப்பீடு)

அறிவுசால் ஔவையார் - என்னும் நாடகத்தைச் சிறுகதைவடிவில் சுருக்கமாக எழுதுக.

     அதியமானின் அரண்மனையில் ஒளவையார் நீண்டகாலம் தங்கியிருந்தார். அப்போது தொண்டைமான், அதியமான் இருவருக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்து நிறுத்தியதைப் பற்றி இக்கதையில் காண்போம்.

    ஒருநாள் அதியமான் காட்டுவளத்தைக் காணச் சென்றான். திரும்பி வரும்போது அரிய நெல்லிக்கனியைக் கொண்டு வந்து ஒளவையாரிடம் கொடுத்தான். சுவைத்துப் பார்த்த ஒளவையார் இதுவரை இவ்வளவு சுவையுள்ள கனியை தான் சுவைத்ததே இல்லை என்று கூறினார்.

    அமைச்சர் “இது அரிய நெல்லிக்கனி , நமது வீரர்களால் பறிக்க இயலவில்லை . நம் மன்னரே மலையுச்சியில் இருந்த மரத்தில் ஏறிப் பறித்தார்” என்று கூறினார். மேலும் “இக்கனியை உண்டவர்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்” என்றும் கூறினார்.

   அதனைக் கேட்ட ஒளவையார் வியந்து அதியமானிடம் “நீ உண்ணாமல் எனக்கு ஏன் கொடுத்தாய்?” என்று கேட்டார். அதற்கு அதியமான் “என்னைப் போன்ற அரசன் இறந்து போனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால், அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது” என்று கூறினான். அதியமான் தமிழ் மீது கொண்ட பற்றினைக் கண்டு ஒளவையார் மனமுருகினார்.

    மறுநாள் அதியமானின் கவலைகொண்ட முகத்தைக் கண்டு ஒளவையார் காரணம் கேட்டார். அதியமானும் “தொண்டைமான் போர்ச் செய்தி அனுப்பியுள்ளான்” என்று கூறினான். ஔவையார் அதியமானிடம் “எதற்கும் அஞ்சாத நீ போரைக் கண்டு அஞ்சலாமா?” என்று கேட்டார்.

   அதியமான் தான் போரைக் கண்டு அஞ்சவில்லை என்றும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அஞ்சுவதாகவும் கூறினான். அதியமானின் உள்ளத்தை அறிந்த ஒளவையார், அதியமானின் ஒப்புதலோடு தொண்டைமானைக் காணச் சென்றார்.

   தொண்டைமானின் அரண்மனையில் படைத் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது படைத்தலைவர் “அதியமான் நம் படையின் பெருக்கத்தைக் கண்டு அதிர்ந்துபோய், சமாதானம் வேண்டிப் புலவர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார்” என்று கூறினான்.

   தொண்டைமான் ஒளவையாரை வரவேற்றான். போர்க்கருவிகள் நிறைந்த படைக்கலக் கொட்டிலைப் பார்க்க அழைத்துச் சென்றான். அப்படைக் கருவிகளைப் பார்த்து ஒளவையார் “அளவுக்கதிகமான கருவிகள், அழகாக அடுக்கி வைத்திருக்கும் முறை, புத்தம் புதியனவாய் நெய் பூசப்பெற்று மாலையும் மயில் தோகைகளும் அணிவிக்கப்பட்டு அழகாக உள்ளன” என்றார்.

    மேலும், ‘அதியமான் எப்போதும் போர் புரிந்து கொண்டே இருப்பதால் அவனது படைக்கருவிகள் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன் நுனி ஒடிந்தும் கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக் களத்தில் கிடக்கின்றன” என்று கூறினார்.

     ஒளவையாரின் பேச்சில் இருந்த உட்பொருளை உணர்ந்த தொண்டைமான். ‘தான் இதுவரை போர்க்களத்தைக் கண்டதில்லை என்றும், அதியமான் பல போர்களைக் கண்டுள்ளான்’ என்றும், கூறி அதியமானுடன் போரிடப் போவதில்லை என்று முடிவெடுத்தான். இதனை அதியமானிடம் தெரிவிக்கும்படியும் கூறினான்.

    ஒளவையாரின் அறிவு சார்ந்த செயலினால் இழப்புகளின்றி நாடும், நாட்டு மக்களும் காப்பாற்றப்பட்டனர்.

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்  (பக்க எண்: 163 மதிப்பீடு)

பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும். மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

1. சுட்டுத் திரிபு                                    -  வல்லினம் மிகும்

2. திசைப் பெயர்கள்                            -  வல்லினம் மிகும்

3. பெயரெச்சம்                                    -  வல்லினம் மிகாது

4. உவமைத்தொகை                          - வல்லினம் மிகும்            

5. நான்காம் வேற்றுமை விரி              - வல்லினம் மிகும்

6. இரண்டாம் வேற்றுமை தொகை     - வல்லினம் மிகாது

7. வினைத்தொகை                           - வல்லினம் மிகாது

8. உருவகம்                                      - வல்லினம் மிகும்

9. எழுவாய்த் தொடர்                         - வல்லினம் மிகாது

10. எதிர்மறைப் பெயரெச்சம்              - வல்லினம் மிகாது

சிறு வினா.

1.சந்திப்பிழை என்றால் என்ன?

விடை: வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெயயிட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை என்று கூறுவர்.

2.வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.

விடை:இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும், நான்காம் வேற்றுமை  உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும் வல்லினம் மிகும்.

    சான்று:  தலையைக் காட்டு.  , எனக்குத் தெரியும்.

3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.

விடை:  அது சென்றது, காய் தின்றேன், எழுதாத பாடல், எழுதும்படி சொன்னேன் ,இலை பறித்தேன்

மொழியை ஆள்வோம்  (பக்க எண்: 165)

பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

1. அதைச் செய்தது நான் அன்று.

விடை: அதைச் செய்தது நான் அல்லேன்

2. பானையைஉடைத்தது கண்ணன் அல்ல.

விடை: பானையைஉடைத்தது கண்ணன் அல்லன்

3. மல்லிகைகுளத்தில் பூக்கும் மலர் அல்லை.

விடை: மல்லிகைகுளத்தில் பூக்கும் மலர் அன்று

4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.

விடை: சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்

5. பகைவர் நீவீர் அல்லர்.

விடை:  பகைவர் நீவீர் அல்லீர்

சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.

1. தாங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள் இவை அல்ல

2. உங்களோடு வருவோர் நாம் அல்லோம்.

3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லள்

4. மொய்த்தபண்டங்கள் உடலுக்கு நன்மைசெய்வன அல்ல

5. இந்தநிலத்துக்கு உரிமையாளர் நீ அல்லை.

கட்டுரை எழுதுக.

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு.

முன்னுரை:

  நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்குஇனிவரும் காலம் இளைஞர்கள் காலம். எனவேநான் இளைஞர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

இளைஞர்களின் சிறப்புகள்:

   இன்றைய இளைஞர்கள் திறமையிலும் அறிவிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே தான் அன்று விவேகானந்தர் என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் நம் நாட்டு இளைஞர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

நாட்டு வளர்ச்சி:

    ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, பொருளாதாரம், தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்த நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி என்றே கூறலாம்.

இளைஞர்களின் பங்கு:

   நன்கு கல்வி கற்ற இளைஞர்களால் தான் ஒருநாடு வளர்ச்சியில் மேலோங்கும். அத்தகைய வகையில் நன்கு கல்விகற்று இளைஞர்கள் பலர் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டுள்ளனர். எண்ணற்ற தொழில்துறைகளில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் இளைஞர்கள் எண்ணற்ற புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்து நாட்டின் வளர்ச்சி மேலோங்கி நிற்கிறது.

உழவுத்தொழியின் புதுமைகள்:

    நம் நாட்டின் முதன்மையான தொழில் உழவுத்தொழில் ஆகும். தந்து வரும் உழவர்களைக் காப்பாற்றுவதற்காக நவீன செயல்பாடுகளை நம்நாட்டு வேளாண்மைத் துறை மாணவர்கள் செய்துள்ளனர். வேளாண் பெருக்கத்திற்கு உரிய வழிவகைகளை நம் இளைஞர்கள் தங்கள் ஆய்வின் மூலம் செய்துகாட்டி அதிக வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.

முடிவுரை:

    "ஒரு நாட்டின் முதுசெலும்பு அந்த நாட்டு இளைஞர்கள்" என்றார் மகாத்னா காந்தி, அது முற்றிலும் உண்பையே! நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருபவர்கள் இளைஞர்களே! என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 

மொழியோடு விளையாடு  (பக்க எண்: 165)

வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.

கதை நிகழ்வுக்கேற்ப சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.

1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.

2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான ஔவைக்குத் தெரிவித்தல்.

3. ஔவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.

4. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.

5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.

6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.

விடை:

1. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.

2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஔவைக்குத் தெரிவித்தல்.

3. தொண்டைமானிடம் ஔவை தூது போதல்.

4. ஔவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.

5. தொண்டைமானிடம் ஔவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்,

6. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.

இயல்-7 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை