9.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல் - 9
(பக்க எண்: 247 கற்பவை கற்றபின்)
1. கீழ்காணும் குறட்பாக்களில் அமைந்த அணி
வகைகளைக் கண்டறிக.
அ)
ஊழி பெயரினும்
தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
அணி : ஏகதேச உருவக அணி
அணி விளக்கம் :
தொடர்புடைய இருபொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை
உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
பொருத்தம் :
சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும்
சான்றாண்மையைத் தாங்கிக் கொண்டு நிற்பவரை கடற்கரையாக்கி உருவகப்படுத்தாமையால்
ஏகதேச உருவக அணி ஆயிற்று.
ஆ)
பிறர்நாணத்
தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து
அணி : சொற்பொருள் பின்வருநிலையணி
அணி விளக்கம் :
வந்த சொல்லே மீண்டும்
மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது “சொற்பொருள் பின்வருநிலையணி”
ஆகும்
பொருத்தம் :
நாண்’ என்னும் சொல் வெட்கம் என்னும் பொருளில் மீண்டும் மீண்டும்
வந்துள்ளமையால் சொற்பொருள்பின்வருநிலையணியாயிற்று.
இ)
தீயவை தீய
பயத்தலால் தீயவை
தீயினும்
அஞ்சப் படும்
அணி :
சொற்பொருள்
பின்வருநிலையணி
அணி விளக்கம் : வந்த
சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது
“சொற்பொருள்
பின்வருநிலையணி” ஆகும்.
பொருத்தம் :
தீய என்னும் சொல்
`தீமை’
என்னும்
பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளமையால் சொற்பொருள் பின்வருநிலையணியாயிற்று.
2.உவமையணி அமைந்த பாடல் அடிகளை எழுதுக.
குறள்: இனிய உளவாக
இன்னாத கூறல்
கனியிருப்ப காய்
கவர்ந்தற்று.
பாடல்: கன்று குரல் கேட்ட பசு போல மாற்றார்
கதறுவதைக்கேட்டவுடன்
அன்பு செய்தால்
வென்று வரும் மனித
குலம்
(பக்க எண்: 248 மதிப்பீடு)
பலவுள் தெரிக.
1. இமயத்துக்கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில்அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்யாது?
அ) கொம்பு ஆ) மலையுச்சி இ) சங்கு ஈ) மேடு
2. தமிழ்ப்புலவரைப் போலவே
உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை
அ) நிலையற்றவாழ்க்கை ஆ) பிறருக்காகவாழ்தல் இ) இம்மைமறுமை ஈ) ஒன்றேஉலகம்
3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது
பெற்றுத்தந்தநூல்
அ) ஒரு சிறு இசை ஆ)
முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப்பறத்தல்
4. யாமரம் என்பது எந்தநிலத்தில் வளரும்?
அ) குறிஞ்சி ஆ) மருதம் இ) பாலை ஈ) நெய்தல்
5. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல
மற்றை யவை – இக்குறளில்பயின்று வந்துள்ள அணி?
அ) சொல்பின்வருநிலையணி ஆ)
பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள்பின்வரு நிலையணி ஈ) வஞ்சப்புகழ்ச்சியணி
குறுவினா
1. தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?
விடை:
உரோம நாட்டவர்
: உரோமையரின்
சான்றோர் எழுதும்போது நாம் நம்மவர் என்ற செருக்குடன் உரோமரை
கருதியே
எழுதுகின்றனர்.
தமிழ்ச் சான்றோர்
: எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம்
தழுவுவதற்குரிய கொள்கையை தம் நூல்களில் யாத்துள்ளனர் என்பதே இரு
சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு ஆகும்
2. பிடிபசி களைஇய பெருங்கைவேழம் – இவ்வடியில் உள்ள
இலக்கணக்குறிப்புகளைக்கண்டறிக.
விடை:
- பிடிபசி – ஆறாம்
வேற்றுமைத்தொகை
- களை இய – சொல்லிசை
அளபெடை
- பெருங்கை – பண்புத்தொகை
- பெருங்கை வேழம் – இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
3. குறுந்தொகை – பெயர்க்காரணம் எழுதுக.
விடை: குறுமை + தொகை – குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகளால்
குறுகிய பாக்களால் ஆன தொகுக்கப்பட்ட நூல் ஆதலால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.
4. நினைத்தேன் கவித்தேன் படைத்தேன் சுவைத்தேன்.
இத்தொடரில் அமைந்துள்ள உருவகத்தைக் கண்டறிக.
விடை: கவித்தேன், சுவைத்தேன் – உருவகம்
சிறுவினா
1. உலக இலக்கியத்தில் காணஇயலாத அரிய
கருத்துகளாக ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?
விடை:
ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர்,
திருக்குறளைப்
பற்றிக் கூறும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலக
இலக்கியத்தில் காண்பது அரிது என்பார்.”
அவர்
குறிப்பிட்ட அரிய கருத்துகள்:
- மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.
- பிறப்போ சாதியோ சமயமோ மக்களை
உயர்த்தவோ, தாழ்த்தவோ, முடியாது.
- இத்தகைய கொள்கைகள் வள்ளுவர்
காலத்திற்கு முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன என்று வியக்கிறார்.
2. கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று
இலக்கணங்களைக் குறிப்பிடுக.
விடை:
கோர்டன்
ஆல்போர்ட் ஓர் உளநூல் வல்லுநர். அவர் கூறும் மூன்று இலக்கணங்களாவன.
- மனிதன் தன் ஈடுபாடுகளை விரிவாக
வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய
- நலத்திற்கும் இன்பத்திற்கும்
பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த
வேண்டும்.
- பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறோம்
என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்க வேண்டும்.
- ஒருவன் அவனது வாழ்க்கைக்குச் சுய
ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கண்டுபிடித்து நடத்தல் வேண்டும்.
3. பழங்களைவிடவும் நசுங்கிப்போனது – இடம் சுட்டிப் பொருள்விளக்கம் தருக.
விடை:
இடம்:
இக்கூற்று
(இவ் அடி)
கல்யாண்ஜி
எழுதியுள்ள “அக்கறை” என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
விளக்கம்:
மிதிவண்டி
ஓட்டி வந்த தக்காளி வியாபாரி மிதிவண்டியில் இருந்து சாய்ந்து விழ.
கூடையில்
இருந்த தக்காளிப் பழங்கள் சிதறி விழுந்தன. தலைக்கு மேல் வேலை இருப்பதாய்,
அனைவரும்
கடந்தும், நடந்தும் சென்றனர். எல்லாம் நசுங்கி வீணானது. பழங்களை விடவும் சக மனிதர்கள் மீது உள்ள
நேயமும், அக்கறையும் நசுங்கிப் போனது.
4. மணல்விளையாட்டு என்னும் தலைப்பில்சிறு
கவிதைபடைக்க.
விடை:
மணலில்
தான் எத்தனை
விளையாட்டு
விளையாடுவோம்..!
மணல்
வீடு கட்டி
மகிழ்வுடன்
உறவுகளை வளர்த்து
விளையாடினோம்..!.
ஈர
மணலில் கோபுரம் கட்டினோம்
கருப்பட்டி
செய்து கவிழ்த்து
வைத்துப்
பேசினோம்..!.
மணலுக்குள்
குச்சியை
கிச்சுகிச்சு
பாளம்
விளையாடி
மணலில்
தொலைந்ததை
பொறுமையாய்க்
கண்டெடுத்தோம்..!.
மணலில்
ஓடினோம்
ஆடினோம்
பாடினோம்
இன்றோ..!
மடியிலே
மடிக்கணினியோடு
பல
விளையாட்டை ஆடுகிறார்
மண்ணில்
கால் வைக்க
விடுவதில்லை...பெற்றோர்....!.
5. “யா” மரத்தின் பட்டையைஉரித்தது எது?
எதற்காக? விளக்குக.
விடை:
- யா மரம் என்பது பாலை நிலத்தில்
உள்ள ஒருவகை மரம் அதன் பட்டை ஈரத் தன்மையுடையது பாலை நிலத்தின் வழியாகக்
கடந்து செல்லும் யானைகள்.
- அப்போது ஆண் யானை பெண் யானையின்
பசியையும் களைப்பையும் போக்கும் பொருட்டு அம்மரப்பட்டைகளை தன் தும்பிக்கையில்
உரித்து பெண் யானைக்கு கொடுக்கும் காட்சியை குறுந்தொகை,
- “பிடி பசி
களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்” என்று
விளக்குகிறது.
6. உருவகஅணியைஎடுத்துக்காட்டுடன் எழுதுக.
விடை:
அணி விளக்கம் :
ஒரு பொருளின் தன்மையைச்
சிறப்பிக்க அதற்கு உவமையாகும் வேறொரு பொருள் மேல் உவமையின் தன்மையை ஏற்றிக்
கூறுவது உருவகம் ஆகும். உவமை உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என தோன்றக் கூறுவது
உருவக அணி ஆகும்.
சான்று:
“இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு
வாய்மை எருவட்டி
அன்புநீர்
பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ்
சிறுகாலைச் செய்”
நெடுவினா
1. தமிழ் இலக்கியங்கள்காட்டும் சான்றாண்மைக் கருத்துகளைத்
தனிநாயக அடிகளாரின் வழி நிறுவுக.
விடை:
முன்னுரை :
உலக நாடுகளையும் மக்களையும்
உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் சான்றாண்மைத் தன்மை.
இச்சான்றாண்மைப்
பண்பு பண்டைத் தமிழ்ப் புலவர்களால் பாராட்டி பாடப்பட்டுள்ளது.
நம் தமிழ்
இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைப் பண்புகளை அறியலாம்.
யாதும் ஊரே யாவரும் நம்மவரே:
கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்னும்
சான்றாண்மைக் கொள்கையை இக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கூறியுள்ளார்.
‘யாதானும்
நாடாமால் ஊராமல் என்னொருவர்’ என்று திருக்குறளும் நம் காலத்திற்கும் பொருந்தி வரும் அறிவுரையைக்
கூறியுள்ளது. ஊர், நாடு, கேளிர் என்னும் இச்சொற்கள் பரந்த மனப்பான்மை மனித நலக்
கோட்பாடு என்னும் சான்றாண்மையை வலியுறுத்துகிறது
இலட்சியங்களைக் கடைப்பிடித்தல்:
இலட்சியங்களைக்
கடைப்பிடிக்கும் சமுதாயம் உயரும். குறிக்கோள் இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும்.
குறிக்கோள்
இல்லாத மனிதன் வெறும் சதைப்பிண்டம் என்பதை, “பூட்கையில் லோன் யாக்கை” போல என்று புலவர் ஒருவர் புறநானூற்றில்
கூறுகிறார். குறிக்கோள் வேண்டும் என்பதை வள்ளுவம்
“உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளல்” என்று குறிப்பிடுகிறார்.
பிறர் நலவியலும் ஒற்றுமை உணர்ச்சியும்:
பிறர் நலத்துக்காகப் பணி செய்வதில் தான் ஒருவனுடைய வாழ்க்கை
பண்புடைய வாழ்க்கை ஆகிறது. “என் கடன் பணி செய்து கிடப்பதே”
என்னும்
கொள்கையைப் பின்பற்றினர் தமிழர். இச்செய்தி தமிழ்ச் சான்றோர் தன்னலம் தேடுவதில் இருந்து
விடுவித்துப் பிறர் நலம் பேணுவதில் தான் சிறந்தனர் என்பதை உணர்த்துகின்றது.
மக்கள்
அனைவரும் தன் இனத்தவர் எல்லா உயிர்க்கும் அன்பு காட்டுதல் வேண்டும் என்ற உயரிய
சான்றாண்மைப் பண்பை பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒற்றுமை உணர்வு:
பாணர்களும்
பாடினிகளும் தமிழ்ப் புலவர்களையும் அரசர்களையும் மக்களையும் நாட்டையும் வேறுபாடு
இன்றி பாடியதால் தமிழகம் என்ற ஒற்றுமை உணர்வை உருவாக்கினர்.
பிறர்
நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலை ஒருவருக்கு ஒருவர் உதவுதல் ஆகிய
அவர் தம் அன்பையும் ஒற்றுமை உணர்வையும் பறைசாற்றுகின்றன.
நன்மை செய்தல்:
தமிழ்ச் சான்றோர்களின் இன்றியமையாப் பண்பு,
நன்மையை
நன்மைக்காக செய்வதுதான் பிறர் போற்றுவார்கள் என்றோ, வேறு நலன்களைப் பெறலாம் என்றோ தமிழர்
நன்மைகளைச் செய்யவில்லை என்பதற்குக் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான
“ஆய்”
சான்றாவான்.
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவினை வணிகன் ஆய்அலன்”,
என்று
புறநானூறு பாராட்டுகிறது.
பிறர்க்காக
நன்மை செய்து வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும்
“உண்டாலம்ம
இவ்வுலகம்” என்ற புறப்பாட்டு இப்பண்பையே எடுத்துக்காட்டுகிறது.
முடிவுரை :
இவ்வாறு நம்
இலக்கியங்கள் நம் தமிழ்ச் சான்றோர்களின் பண்புகளையும் மக்கட் தன்மையை வளர்க்க
முனைந்ததையும் உலகமெல்லாம் தழுவுவதற்கும் உரிய பண்புகளை வளர்த்தனர் என்று தனி நாயக
அடிகள் தம் கட்டுரை வாயிலாக நிறுவுகிறார்.
2. ’தாய்மைக்கு வறட்சி இல்லை’ என்னும்
சிறுகதையில்வரும் ஏழைத்தாயின் பாத்திரப்படைப்பைவிளக்குக.
விடை:
முன்னுரை:
எது வறண்டு போனாலும் உலகில் தாய்மை வறண்டு போவது இல்லை.
தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும்
ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.
அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:
தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன்
மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம்
செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.
செல்வந்தன் தன்
கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை
நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கையில் உணவுடன் வந்த கணவனைத் தன் கண்களால்
இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார். இவ்வாறு
கண்டிப்பும் அன்பும் கலந்து அந்த ஏழைத்தாய் வறுமையிலும் தன்மானம் உள்ளவளாகக் காணப்படுகிறாள்.
குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:
குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன.
அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். பசிமுள் அவள் வயிற்றைக்
குத்தியது. சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக்
கண்டது போல் சுவைத்தார்கள் அவள் அனுதாபத்துடன் குழந்தைகளைப் பார்த்து,
இப்போ இப்படிச்
சாப்டுகிறீர்கள் ராத்திரி என்ன செய்வீர்கள்? என்று உள்ளத்துள் வருந்துவதால்
அன்புத்தாய்
ஆகிறாள்.
மனிதநேயம் புரிந்தாள்:
அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த
தொண்டைக்குள்
உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட
ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர்
உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள்.
நாய்க்குட்டிகளை விரட்டுதல்:
சாப்பிடும் நேரத்தில் தொந்தரவு செய்த நாய்க்குட்டிகளைக் குரலிட்டபடியே
கையைத் தூக்கி துரத்தினாள். ஒரு காலைத் தூக்கியபடியே ஓடின. நாய்க்குட்டி ஒலி
எழுப்பியது.
சுவைத்து உண்டாள்:
தட்டை குழந்தையைப் போல மடியில் வைத்துக்கொண்டு உணவை
வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. உண்டு உண்டு அந்த
சுவையில் சொக்கி லயித்துக்கொண்டிருந்தாள். நாயின் ஒலி அவளைச் சுண்டி இழுத்தது. பாசத்தில்
பரிதவித்து ஓடுகிறாள்.
நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:
எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை
வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன்
பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த
உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது
முடிவுரை :
வறுமையிலும் அன்பு குறையாத
மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி
தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி
உணர்த்தியுள்ளார்.
(பக்க எண்: 250 மொழியை ஆள்வோம்)
மொழி பெயர்க்க.
A deer, a turtle, a crow and a rat
were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a
plan to save him. According to the plan, the deer lay motionless as if it were
dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the
hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and
went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer.
The crow picked up the turtle and quickly took it away from the hunter. From
this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.
விடை:
ஒரு மான், ஒரு கடல் ஆமை, ஒரு காகம், ஓர் எலி ஆகியவை நட்பு கொண்டிருந்தன.
ஒருநாள் வேடன்
வலைவிரித்து மானைப் பிடித்து விட்டான். நண்பர்கள் மானைக் காப்பாற்ற திட்டம் தீட்டின.
மானை,
நீ இறந்ததுபோல்
அசைவின்றி படுத்துக் கொள் என்றன. காகம், இறந்து போன மாதிரி படுத்திருந்த மான் மீது அமர்ந்து கொத்த
தொடங்கியது. கடல் ஆமை வேடனின் வழிமறித்தது;
அவனை
அலைக்கழித்தது. வேடன் வலையில் அகப்பட்ட மான் இறந்து விட்டது என எண்ணி
சென்று அதனை விட்டு விடுகிறான். கடல் ஆமை இன்னும் வேடனை அலைக்கழித்தபடியே இருக்கிறது.
அதற்குள் எலி
வலையைக் கடித்து மானைக் காப்பாற்றத் தொடங்கியது. மானை விடுத்த வேடன் கடலாமையைப் பிடிக்க
எண்ணியபோது காகம் ஆமையை கொத்திக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து சென்று
சிறிய கடலாமையை வேடனிடம் இருந்து காத்தது. இந்தப் பஞ்சதந்திரக் கதை குழுவாக இணைந்து ஒன்றுபட்டு
செயல்பட்டால் பல சாதனைகளைப் புரியலாம் என்பதை உணர்த்துகிறது.
பொருத்தமான நிறுத்தற்குறியிடுக.
ஆசிரியர் மாணவர்களிடம்
மாணவர்களே கடவுளரையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி எழுதப்பட்ட சிற்றிலக்கிய
வகை பற்றித் தெரியுமா தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று என்று
கூறினார்.
பிள்ளைத் தமிழ் நூல்கள் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலியன.
அடடா என்று சிலிப்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு
அளிக்கும் வகையில் குமரகுருபாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்ததாகத்
திகழ்கிறது.
விடை:
ஆசிரியர் மாணவர்களிடம், “மாணவர்களே!
கடவுளையும்
தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா?
தமிழ்ச்
சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று” என்று கூறினார்.
பிள்ளைத்தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,
அமுதாம்பிகைப்
பிள்ளைத்தமிழ் முதலியன.
“அடடா!
என்று
சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில்,
குமரகுருபரரின்
‘மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ்’ மிகச்சிறந்ததாகத் திகழ்கிறது.
சொற்றொடர் உருவாக்குக.
1. செந்தமிழும் சுவையும் போல
விடை:தவைவன் தலைவியாக நீவிர் இருவரும் செந்தமிழும் சுவையும்
போல இணைந்தே மகிழ்வுடன் இனிதாய் வாழுங்கள்.
2. பசுமரத்தாணிபோல
விடை: குழந்தைப் பருவத்தில் நான் மனனம் செய்த பாரதியார் பாடல்கள்
அனைத்தும் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது.
3. உள்ளங்கை நெல்லிக்கனி போல
விடை: தமிழாசிரியர் நடத்திய அணியிலக்கணம் உள்ளங்கை நெல்லிக்கனி
போல தெளிவாகப் புரிந்தது.
4.அத்தி பூத்தாற்போல
விடை: என் மாமாவின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது
நிகழ்வதால் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
5.மழைமுகம் காணாப் பயிர் போல
விடை: தன் குடும்பத்தை விட்டு விடுதிக்குச் சென்ற கமலா,
மழைமுகம்
காணாப் பயிர் போல சோர்வுற்று
வாடிக் காணப்பட்டாள்.
பாடலில் காணும் இலக்கிய வடிவங்களையும்
அவற்றுக்குப் புகழ் பெற்றோரையும் கண்டறிந்து எழுதுக.
வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்
சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காள மேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காசு
அலாதொருவர் பகர ஒணாதே.
– பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.
விடை:
வெண்பா – புகழேந்தி
பரணி – சயங்கொண்டான்
விருத்தம் – கம்பன்
கோவை, உலா, அந்தாதி – ஒட்டக்கூத்தர்
கலம்பகம் – இளஞ்சூரியர், முதுசூரியர் எனும் இரட்டையர்கள்
வசைக்கவி – காளமேகம்
சந்தம் – படிக்காசுப்புலவர்
நூல்
மதிப்புரை எழுதுக.
நீங்கள் விரும்பிப்படித்தநூல்ஒன்றுக்கு மதிப்புரை
எழுதுக.
உலகப்பொதுமறை –
திருக்குறள்
இனம்,மதம்,மொழி,நாடு என அனைத்தையும் கடந்து உலகமக்கள்
அனைவருக்கும் பொதுவான மறை நூலாகக் கருதப்படுவது வான்புகழ் வள்ளுவன் எழுதிய திருக்குறளாகும்.
அறம்,பொருள்,இன்பம் ஆகிய முப்பொருளின்(பால்) அடிப்படையில் அமைந்த திருக்குறளில் வீடுபேறு என்ற ஒன்று இடம்பெறாததற்குக் காரணம் என்னவென்று யாரேனும்
சிந்தித்ததுண்டா?
முப்பாலையும் கற்றுணர்ந்தால் வீடுபேறு தானே கிடைக்கும் என்பதால்தான் என்று எனக்குத்தோன்றுகிறது.நூல்
வைப்பு முறை,பாக்கள் அமைப்பு,இலக்கணப் பிறழ்ச்சியின்மை என அனைத்துமே திருக்குறளில்
மிகச்செம்மையாக உள்ளது.
”அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்” என்று ஔவையார் திருக்குறளைப்
புகழ்ந்துரைத்தது எவ்வளவு பொருத்தமானது எனத்
திருக்குறளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.
நயம் பாராட்டுக.
”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமைஉடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உள்ளம்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விழைந்ததாலே”
- வள்ளலார்
முன்னுரை:
வள்ளலார் எனப் போற்றப்படும்
இராமலிங்க அடிகள் சமத்துவமும், சமதர்மமும் வளரவும், சமயம் என்பது பிறர்நலன் போற்றுவதாக அமையவும் குரல் கொடுத்தவர் ஆவார்.
இறைவனை எண்ணி இவர் பாடிய பாடல்கள் சிறப்புடன் விலங்குகின்றன. அந்த வகையில் இவரது
பாடல் ஒன்றிற்கு அமைந்துள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.
திரண்ட கருத்து:
எந்த ஒரு வேறுபட்டையும்
வெளிப்படுத்தாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல எண்ணி, தன்
உள்ளத்துள்ளே ஒத்த அன்புடையவராய் இருப்பவரை இறைவன் உயந்து ஏற்கிறார் அத்தகைய
உள்ளம் உடையவர்களே சித்துருவாய்த் திகழும் எம்பெருமான் நடம்புரியும் இடம் ஆகும்.
எல்லா வல்ல இறைவன் அடிக்கு ஏவல் புரியும் சிந்தைமிக இருந்ததால் எவ்வுயிரிடத்தும்
அன்புடன் வாழ விழைந்தேன்.
மையக்கருத்து:
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு
பாராட்டி உயிர்களுக்கு ஏவல் செய்வதே இறைவனுக்குச் செய்யும் தொண்டு, அவர் உள்ளத்துள்ளே இறைவன் உள்ளான் என்ற கருத்தை மையமாக வைத்து வள்ளலார்
இப்பாடலைப் புனைந்துள்ளார்.
மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ சிரிலோ
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
சான்று :எத்துணையும்
எவ்வுயிரும் உடையவராய் உவக்கின்றார் என மோனை நயம் அமைந்துள்ளது.
எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ
இரண்டாவது எழுந்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும். சான்று எத்துணையும், ஒத்துரிமை, சித்துரு வித்தகர் என எதுகை நயம்
மிக்குள்ளது.
சந்த நயம்:
“சந்தம் தமிழுக்குச்
சொந்தம்" என்பதை உணர்த்தும் வகையில் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பெற்று அகவல் ஓசையுடன் மையம் பொருந்த அமைந்துள்ளது.
அணி நயம்:
"எவ்வுயிரும் தம்முயிர்
போல" என்பதில் உவமையணி இடம்பெற்றுள்ளது
முடிவுரை :
பக்தி உணர்வு சொட்ட
பாடப்பட்டுள்ள இப்பாடல் பக்திச்சுவையும் இலக்கியச் சுவையையும் ஒருங்கே பெற்றுள்ளது.
எழுத்துகளை முறைப்படுத்தி சொற்களைக்
கண்டுபிடி.
- புன்பமொப்லமைழி – பன்மொழிப்புலமை.
- யனிநேம்தம் – மனிதநேயம்.
- கச்வப்ஞ்புசிழ்ச – வஞ்சப்புகழ்ச்சி.
- தைக்விதுகபு – புதுக்கவிதை.
- டுசிப்காட்ப – காஞ்சிப்பட்டு.
அகராதி காண்க. (
குரிசில்,
தலையளி,
நயம்,
உய்த்தல்,
இருசு )
குரிசில் – பெருமையில் சிறந்தேன், உபகாரி, தலைவன்.
- தலையளி – முகமலர்ந்து
கூறுதல், அன்பு, அருள்.
- நயம் – நன்மை, விருப்பம், போற்றுகை, மிகுதி, பயன், நுண்மை , அருள்.
- உய்த்தல் – செலுத்துதல், நடத்துதல், நுகர்தல் , அனுப்புதல், அறிவித்தல், நீக்குதல்.
- இருசு – நேர்மை, வண்டியச்சு, மூங்கில்.
தொகைக் சொற்களைக் கொண்டு பத்தியைச் சுருக்குக.
சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்படை,
குதிரைப்படை,
தேர்ப்படை,
தரைப்படை
ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர்.
கிழக்கு,
மேற்கு,
வடக்கு,
தெற்கு ஆகிய
திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி,
முல்லை,
மருதம்,
நெய்தல் ஆகிய
நிலங்களில் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று
வாழ்த்தினர்.
விடை:
மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர்.
நாற்றிசைகளிலும் அவர்களின் ஆட்சி புகழ் பரவியிருந்தது.
தமிழகத்தின்
ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று
வாழ்த்தினர்.
4.வினைப்பகுதிகளை எச்சங்களாகவும் முற்றாகவும்
மாற்றுக.
விடை:
பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள்(செல்). தன் தோழிகளைக் கண்டு(காண்)மகிழ்ச்சியுடன் உரையாடினாள்(உரை). பின்னர் வங்கிக்குப் போய்(போ) தான் கூடுதலாகச் செலுத்திய (செலுத்து) தொகையை திரும்பப் பெற்று(பெறு)க் கொண்டு (கொள்)வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற நில்) பேருந்தில் ஏறி (ஏறு) வீடு திரும்பினாள் (திரும்பு).
பொருத்தமான தமிழ் எண்களைக் கொண்டு நிரப்புக.
விடை:
தமிழிலுள்ள மொத்த எழுத்துகள் உசஎ.
இவை
முதலெழுத்து, சார்பெழுத்து என்று உ பிரிவாகப் பிரிக்கப்படும். கஉ உயிரெழுத்துகள் கஅ மெய்யெழுத்துகள்
ஆகிய ௩0 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும்.இவற்றைச் சார்ந்து பிறப்பவை
சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் க0 வகைப்படும்.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
உயிர்களிடத்து
அன்பு வேண்டும்.
உயிரிப்
பசி போக்குபவன்
ஆண்டவதுக்கே
தொண்டாற்றும்
அடியவனாகிறான்
உயிர்
நேயமேஉண்மை நாகரிகம்
உயிர்
நேயம் உள்ளவரே
நாகரிகர்
ஆவார்....
அந்நேயமற்றோர் நரகரே!
நிற்க அதற்குத்தக.
நான்
தலைமைப் பொறுப்பிற்கு வந்தால்..
ü
அனைவரிடமும்
பாகுபாடின்றி நடந்து கொள்வேன்
ü
இயன்றவரை
பிறருக்கு உதவுவேன்.
ü
பெரியோர்களின்
அறிவுரையைக் கேட்டு நடப்பேன்
ü
அனைவரையும்
ஈடுபாட்டுடன் பணிபுரியச் செய்வேன்.
ü
என்
கீழ் பணிபுரிவோரின் சுக துக்கங்களில் பங்கு கொள்வேன்.
ü
அன்பு
கலந்த கண்டிப்புடன் கடமையாற்றுவேன்.
இயல்-9 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇