9.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல் - 8
(பக்க எண்: 226 மதிப்பீடு)
பலவுள் தெரிக.
1. சரியான விடையைத்தேர்ந்தெடுக்க.
கூற்று - பெரியார் உயிர் எழுத்துகளில்’ஐ’ என்பதனை ’அய்’
எனவும், ’ஒள’ என்பதனை’அவ்’எனவும்
சீரமைத்தார்.
காரணம் – சிலஎழுத்துகளைக்குறைப்பதன் வாயிலாகத்தமிழ் எழுத்துகளின்
எண்ணிக்கையைக்குறைக்கலாம் என்று எண்ணினார்.
அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு ஈ) கூற்று தவறு, காரணம் சரி
2. காலத்தினால்செய்தநன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு
யாது?
அ) நாள் ஆ)
மலர் இ) காசு ஈ) பிறப்பு
3. முண்டி மோதும் துணிவே
இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது
அ) மகிழ்ச்சி ஆ) வியப்பு இ) துணிவு ஈ) மருட்சி
4. விடைக்கேற்றவினாவைத்தேர்க.
விடை – பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
அ) பானையின் எப்பகுதி
நமக்குப்பயன்படுகிறது? ஆ) பானை எப்படி நமக்குப்பயன்படுகிறது?
இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது? ஈ) பானை எங்கு நமக்குப்பயன்படுகிறது?
5. ‘ஞானம்’ என்பதன் பொருள்யாது?
அ) தானம் ஆ) தெளிவு இ) சினம் ஈ) அறிவு
குறுவினா
1. ‘பகுத்தறிவு’ என்றால்என்ன?
விடை: எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்?
எதற்கு?
எப்படி?
என்ற வினாக்களை
எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.
2. தாவோதேஜிங் ‘இன்னொரு
பக்கம்’ என்று எதைக் குறிப்பிடுகின்றது?
விடை: தாவோதேஜிங் ‘இன்னொரு பக்கம்’ என்று வெற்றிடத்தைக் குறிப்பிடுகின்றது
3. கமுகுமரம் எதைத்தேடியது?
விடை: கமுகுமரம்
ஒளியைத் தேடியது
4. யசோதரகாவியத்தின் பாட்டுடைத்தலைவன்
யார்?
விடை: யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன், அவந்தி நாட்டு மன்னனாகிய “யசோதரன்” ஆவார்
5. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
விடை: இரண்டு வகைப்படும், அவை: நேரசை, நிரையசை
சிறுவினா
1. சிக்கனம் குறித்தபெரியாரின் கருத்துகளைஇன்றைய
நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
விடை:
- பெரியார் அவர்கள், பொருளாதார
தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம்
என்றார்.
- ஆனால் இன்றைய நடைமுறையில்
பொருளாதாரத்தில் நிறைவு பெறவில்லை என்றாலும் சிறுகடன் பெற்றாவது அநேகர்
ஆடம்பரமாகவே வாழ விரும்புகின்றனர்.
- விழாக்களும் சடங்குகளும்
மூடப்பழக்கம் வளர்ப்பதோடு வீண் செலவும் ஏற்படுத்துகிறது. சடங்குகள், விழாக்களைத்
தவிர்த்து சிக்கனமாய் வாழச் சொன்னார்.
- ஆனால் இன்று இதுவும்
நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.
- எனவே பெரியார் கூறிய சிக்கனக்
கொள்கைகளை, இன்றைய நடைமுறை நிகழ்வுகளில்
பின்பற்ற முடியாத நிலையே அநேக நேரங்களில் உள்ளது.
2. நாம் கடைப்பிடிக்கவேண்டிய வாழ்க்கைநெறிகளாக
யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?
விடை:
- நாம் செய்கின்ற செயல்கள்
பிறருக்குப் பயன்தரத்தக்கச் செயலாக இருத்தல் வேண்டும்.
- “ஆக்குவது
ஏதெனில் அறத்தை ஆக்குக”. நம்மிடம் உள்ள தீய நெறிகளை, பண்புகளை
நீக்க விரும்பினால் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
- “போக்குவது
ஏதெனில் வெகுளி போக்குக”.
மெய்யறிவு நூல்களை ஆராய்ந்து ஞானம் பெற வேண்டும். - “நோக்குவது
ஏதெனில் ஞானம் நோக்குக”.
நாம் மேற்கொண்ட நற்செயல்களாகிய விரதத்தைக் காக்க வேண்டும். . - “காக்குவது
ஏதெனில் விரதம்”
என்று நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை யசோதர காவியம் கூறுகிறது.
3. பிறமொழி இலக்கியங்களைத்
தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் குறிப்பிடுக.
விடை:
- வான்மீகி வடமொழியில் எழுதிய
இராமகாதையைத் தழுவி கம்பர் “கம்பராமாயணம்” எழுதினார்.
- வியாசர் வடமொழியில் எழுதிய
மகாபாரதத்தைத் தழுவி, ‘வில்லிபாரதம்’, ‘பாஞ்சாலி
சபதம் எழுதப்பட்டது.
- ஷத்ரிய சூடாமணி, ஸ்ரீபுராணம், சத்ய
சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி “சீவகசிந்தாமணி” எழுதப்பட்டது.
- Pilgrims progress
என்ற
நூலைத் தழுவி “இரட்சண்ய யாத்திரிகம்” எழுதப்பட்டது.
- The secret way – என்னும் நூலைத் தழுவி ”மனோன்மணியம்” எழுதப்பட்டது.
- புட்பந்தர் எழுதிய யசோதர சரிதம்
என்னும் நூலைத் தழுவி “யசோதர காவியம்” எழுதப்பட்டது.
4. யசோதரகாவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கைநெறிகளைத்திருக்குறளுடன்
ஒப்பிட்டு எழுதுக.
விடை:
அறத்தை ஆக்குக:
பின்னாளில் செய்யலாம்
என்று எண்ணாது அறஞ் செய்க என்று (36வது) குறள் கூறுகிறது.
“அன்றறிவாம் எண்ணாது அறஞ்செய்து மற்றது
பொன்றுங்கால்
பொன்றாத் துணை”
வெகுளி போக்குக:
யாரிடத்தும் கோபம் கொள்ளாமல் சினத்தை
மறந்துவிட வேண்டும் என்று (குறள் 303) கூறுகிறது.
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல்
அதனான் வரும்”.
ஞானம் நோக்குக:
குற்றமில்லாத அறிவைக்
கண்டவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் கிட்டும் என்று
(குறள்
352) கூறுகிறது.
“இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு
காட்சி யவர்க்கு”.
விரதம் காக்க:
விரதம் என்றால் நன்னெறி.
தீய செயல்கள்
தீயைப் போல் தீமைதரும், எனவே கொடிதான தீமையை விட்டு விலகி நன்னெறி பற்றுக என்று
(202) குறள்
கூறுகிறது.
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும்
அஞ்சப் படும்”.
இவையே யசோதர
காவியமும் திருக்குறளும் குறிப்பிடும் வாழ்க்கை நெறிகள் ஆகும்.
நெடுவினா
1. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்டசீரமைப்புகளை
விளக்குக.
விடை:
முன்னுரை:
தமிழக மக்களைப் பகுத்தறிவு பாதைக்கு அழைத்துச் சென்றவர்
பெரியார். இந்தியாவின் பழமையான மொழி தமிழ்.
பழமையான
இலக்கியமும் தமிழிலே உள்ளன. இலக்கியத்திலும், மொழியிலும் பெரியார் செய்த சீரமைப்புகள் பற்றி அறிந்து
கொள்வோம்.
மொழி, இலக்கியம் பற்றிய
பெரியாரின் கருத்து:
மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும், மனிதனுக்கு மானம்,
பகுத்தறிவு,
வளர்ச்சி,
நற்பண்பு ஆகிய
தன்மைகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராய் இருந்தார் தந்தை
பெரியார்.
இலக்கிய சீர்திருத்தம்:
அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும்.
மதம் கடவுள்
ஆகியவற்றின் தொடர்பற்ற, யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியமே
அதிகளவில் வேண்டும். திருக்குறளில் அறிவியல் கருத்துக்களும்,
தத்துவக்
கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால்,
அதை
மதிப்புமிக்க நூலாகக் கருதியதோடு, திருக்குறளைப் போன்ற இலக்கியம் உருவாக வேண்டும் என்ற
சீர்திருத்தத்தை உருவாக்க முனைந்தார். இலக்கியமானது அரசியல், சமூகம், பொருளாதாரம், சுயமரியாதை உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும்
உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்பினார்.
மொழியில் சீர்திருத்தம்:
ஒரு மொழியின் பெருமையும், மேன்மையும்,
அவை எளிதில்
கற்றுக் கொள்ளக் கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன.
எனவே கால
வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க தயங்கக் கூடாது என்று கருதினார்
பெரியார். மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்.
அக்கருவிகள்
காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்றார்.
அதற்கேற்ப, உயிர் எழுத்துக்களில் ‘ஐ’ என்பதை ‘அய்’ எனவும் ‘ஔ’ என்பதை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். மேலும் மெய்யெழுத்துகளில் சில எழுத்துக்களைக் குறைப்பதன்
வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.
கால
வளர்ச்சிக்கு மொழி சீரமைப்புகள் தேவை என்று கருதினார்.
அவரது
சீரமைப்புக் கருத்தின் சில கூறுகளை 1978ம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
முடிவுரை :
மொழி,
இலக்கியம்
பற்றிய பெரியாரின் சிந்தனைகள், அறிவுலகின் திறவுகோலாய்த் திகழ்ந்தது எனில் மிகையாகாது.
2. மொழியின் விரல்பிடித்து நடக்கப்பழகிக் கொண்டிருக்கும்
தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
விடை:
முன்னுரை :
கடித செய்தி என்பது உயிர்ப்புள்ள
மொழி. செய்தியை அளிப்பவருக்கும், பெறுபவருக்குமான உறவுப் பாலத்தை
உறுதியாக்குகிறது. தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம்
மகனுக்கு எழுதிய கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம்.
குழந்தைப் பருவமும் – உலக வாழ்வும் :
என் செல்லப் பூங்குட்டியே!
நீ குழந்தையாய்
இருந்தாய்; அழுதாய்; சிரித்தாய்; குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்து,
சாகசம்
கொண்டாடினாய். தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய்;
எழுந்தாய்;
விழுந்தாய்;
நடந்தாய்;
ஓடினாய்.
இந்த உலக வாழ்வும்
இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும் சாகசம் செய்தல் வேண்டும்.
தவழ வேண்டும்,
எழவேண்டும்,
விழவேண்டும்,
மீண்டும் எழ
வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக வாழ்வில்
நடிக்கத்தான் வேண்டும்.
அனுபவமே கல்வி :
கல்வியில் தேர்ச்சி கொள்ள
வேண்டும், அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள்.
தீயைப்
படித்துத் தெரிந்து கொள்வதை விட தீண்டிக் காயம் பெறு.
அந்த அனுபவக்
கல்வியே இவ்வுலகில் வெற்றியுடன் வாழ பயன்படும் சூத்திரம் ஆகும்.
அன்பாக இரு:
எங்கும்,
எதிலும்
எப்போதும் அன்பாய் இரு. அன்பை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை.
உன் பேரன்பால்
இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட மேன்மையானது நட்பு மட்டுமே,
உன் அன்பால்
நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள். உன் வாழ்வு அன்பாலும், நட்பாலும் நேராகும்.
உனக்கான காற்றை நீயே உருவாக்கு :
என் மகனே மாநகரத்தில்
நீ வாழ்க்கை முழுக்கக் கோடைகாலங்களையும், வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும்
சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறி
கொண்டிருக்க முடியாது. உனக்கான காற்றை நீயே உருவாக்கு.
புத்தகங்களை
நேசி : புத்தகங்களை நேசிக்கத் தவறாதே.
ஒரு
புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்.
உன் பாட்டனும்
தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள் உன் உதிரத்தில் காகித நதி
ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
முடிவுரை:
இக்கருத்துக்கள்
அனைத்தும் முத்துக்குமாரின் மகனுக்கு மட்டுமல்ல.
இதனைப்
படிக்கின்ற ஒவ்வொரு மாணவனுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், வளர்வதற்கும்,
உயர்வதற்கும்,
ஏற்ற
கருத்துக்கள் ஆகும் என்பதை எவராலும் மறுக்க இயலாது.
3. வாழ்க்கைப் போரில் வெற்றி
பெறுவதற்கான வழிகளைக் கமுகுமரம் வாயிலாகஆசிரியர் எவ்வாறு உணர்த்துகிறார்?
விடை:
முன்னுரை:
போட்டி இன்றி வாழ்க்கை இல்லை.
வலிகளின்றி
வெற்றி இல்லை. ஒன்றையொன்று அடுத்தும், படுத்தும் மென்மேலும் முன்னேறுவது
இயற்கைக்கு மட்டுமன்று வாழ்க்கைக்கும் தான் என்பதை ந.
பிச்சமூர்த்தி
அவர்கள் கமுகுமரம் வாயிலாக உணர்த்துகிறார்.
கமுகு பிறந்த இடம்:
அடர்ந்த இருள் போன்ற நிழல்
பரப்புகின்ற பெருமரங்களின் இடையே கமுகு பிறந்தது.
பெருமரங்களின்
நிழல் என்னும் இருள் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஒளியமுதைத் தடுத்தது.
பெருமரங்களின்
நிழலை வெறுத்த கமுகு தான் வளரத் தேவையான ஒளியமுதைப் பெற்று உயிர்ப்புப் பெற போராட
துவங்கியது.
கமுகின் போராட்டம்:
கமுகு மரம் கடுமையாகப்
பெருமரங்களுடன் முட்டிமோதும் முயற்சியைத் தொடங்கியது.
விண்ணிலிருந்து
வரும் தன் உயிர்ப்பாகிய ஒளியமுதைத் தேடியது. மீண்டும், மீண்டும் உயர முயற்சித்தது. கதிரவனின் ஒளிக்கதிர்களாகிய விரல்களின்
அழைப்பைக் கண்டது. பெருமரங்களின் இருட்டில் இருந்து கொண்டே தன் கிளையை வளைத்து
ஒளியை நோக்கி நீட்டத் தொடங்கியது; வளர்ந்தது. பெரு மரங்களை முட்டி மோதும் துணிச்சலையும்,
முயற்சியையும்
பெற்றதால் கமுகு வளைந்து, நெளிந்து, நீண்டு வளர்ந்தது. மலர்ச்சி பெற்றது.
வாழ்க்கைப் போர்:
வாழ்க்கையிலும் இருள் போன்ற
நிழல் சூழ்ந்த நிலைகள் ஏற்படலாம். ஒளியமுதை நம்பி, வேண்டி, கமுகு துணிச்சலான முயற்சியில் ஈடுபட்டது போல,
நாமும்
வாழ்க்கைப் போரில் நம்பிக்கை தன்முனைப்பு, விடாமுயற்சி, உடையவர்களாய் இருந்தால் வாழ்வு மலர்ச்சி பெறும்.
முடிவுரை:
“பெருமரத்துடன் சிறுகமுகு போட்டியிடுகின்றது,
அதுவே
வாழ்க்கைப் போர். முண்டி போதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின்
மலர்ச்சி”. இயற்கையின் போராட்டங்களையும், வாழ்வின் அனுபவங்களையும் இணைத்து
அறிவுத் தெளிவுடன் வாழ்க்கைப் போரைச் சந்திப்போம்; முயல்வோம்;
வெற்றி
பெறுவோம்.
(பக்க எண்: 226 மொழியை ஆள்வோம்)
மொழி பெயர்க்க.
Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it
was muddy because somebody just finished washing their clothes. Buddha asked
his disciples to take a little rest there by the tree. After half an hour the
disciples noticed that the water was very clear. Buddha said to them,”You let the
water and the mud be settled down on its own. Your mind is also like that. When
it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its
own. We can judge and take best decisions of our life when we stay calm.”
விடை:
ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன்
இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால்,
ஏரி நீர்
கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில்
அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப்
பார்த்தனர்.
அழுக்குகள் ஒதுங்கிவிட்டன.
சேறும் நீரின்
அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது.
உங்கள் மனமும்
இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள்
நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச்
சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.
சொற்றொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு
மாற்றுக.
1.மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார்
(நேர் கூற்றாக
மாற்றுக).
விடை: “நான் நாளை வீட்டுக்கு வருவேன்”
என்று முரளி
கூறினார்.
2.தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவை புகழ்கிறோம்
என்று ஆசிரியர் கூறினார் (அயற் கூற்றாக மாற்றுக).
விடை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர்
கூறினார்.
3.மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில்
சாப்பிட்டான் (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக)
விடை காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்).
4.அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க
வேண்டும் (ஒலி மரபுப் பிழைகளை திருத்துக).
விடை அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.
5.கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின
(பெயர் மரபுப்
பிழைகளைத் திருத்துக).
விடை கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.
நயம் பாராட்டுதல்.
திங்கள்முடி சூடுமலை
தென்றல் விளை யாடுமலை
தங்குமுகில் சூழுமலை
தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மை திரு
அருள்சுரந்து
பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதியமலை என்மலையே - குமரகுருபரர்.
திரண்ட கருத்து:
நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை.
எப்போதும்
தென்றல் தவழ்ந்து விளையாடும் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை.
தமிழ் முனிவன்
அகத்தியன் வாழ்ந்த மலை.
அங்கயற்கண்ணியாம்
மீனாட்சி கண் திறந்து அருள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள்
விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே.
மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ,
சீரிலோ முதல்
எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் எனப்படும்.
சான்று: தங்கு முகில் –
தமிழ் முனி
அங்கயற்கண்ணி – அருள் சுரந்து
எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ
இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
சான்று: திங்கள்
– தங்கு
அங்கயற்
– பொங்கருவி
அணி நயம்:
பொதிகை மலையில் விழும் அருவி
“அங்கயற்கண்
அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென்” என்னும் அடியில் உவமையணி அமைந்துள்ளது.
சந்தநயம்:
அறுசீர்ச் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
பெற்று செப்பலோசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.
இயைபுத் தொடை: செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ,
சொல்லோ இயைந்து
வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும்.
சான்று: சூடு மலை, யாடு மலை, வாழு மலை
முடிவுரை:
குமரகுருபரரின் இப்பாடல்
இன்பம் தரும் இன்சுவையுடன் அமைந்து பொதிகை மலையின் புகழைப் பறைசாற்றுகிறது.
இது போன்ற
பாடல்களைப் படித்து இன்புறுவாமாக.
(பக்க எண்: 229 மொழியோடு விளையாடு)
பொருத்தமான வாய்பாடுகளை வட்டமிடுக.
பகலவன் - காசு/கருவிளம்/கூவிளங்கனி
மலர்ச்சி - கூவிளம்/ புளிமா/ கருவிளம்
தாவோவியம் - தேமாங்கனி/ தேமா/ பிறப்பு
வெற்றிடம் - நாள்/ கூவிளம் / புளிமா
பூங்குட்டி - கருவிளங்கனி / மலர்/ தேமாங்காய்
அகராதியில்
காண்க.
(வயம்,
ஓதம், பொலிதல், துலக்கம்,
நடலை)
வயம்
– வலிமை,
வெற்றி,
வேட்கை
, பறவை,
வசம்,
குதிரை,
ஆடு,
முயல்.
ஓதம்
– ஈரம்,
வெள்ளம்,
கடல் அலை,
ஒலி,
பெருமை,
வாதநோய்.
பொலிதல்
– செழித்தல்,
பெருகுதல்,
மிகுதல்,
நீடுவாழ்தல்,
நிகழ்தல்.
துலக்கம்
– விளக்கம்,
ஒளி,
பளபளப்பு,
மெருகு,
தெளிவு.
நடலை
– வஞ்சனை,
துன்பம்,
பொய்மை,
பாசாங்கு,
அசைவு.
வினைத்தொகைகளைப்
பொருத்தி எழுதுக.
(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம்,
உயர்மதில், நீள்வீதி, கரைவிளக்கு,
மூடுபனி, வளர்பிறை, தளிர்பூ)
1. வளர்பிறை நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது.
2. தளிர்பூ ங்கொடிகளும் விளைநில ங்களும் மனத்தைக்
கொள்ளையடிக்கின்றன.
3. மூடுபனி கள் அனைத்தும் நீள்வீதி யில்முழுகிக்கிடக்கின்றன.
4. மெல்லவீசும் குளிர்காற்று
றும் வளர்தமிழ் புகழ்பாடுகின்றது.
5. தொலைவில் கலங் கரைவிளக்க
த்தின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச்
செய்கிறது.
பொருத்துக:
நேர் நேர் நிரை –
தேமாங்கனி நிரை நிரை நேர் - கருவிளங்காய் நேர் நிரை - கூவிளம் நிரை நிரை – கருவிளம் நேர் நேர் நேர் - தேமாங்காய் காட்சியைக்கண்டு கவினுற எழுதுக உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகம் உள்கையில் அடங்கலாம் தோல்விகண்டு துவண்டு போகாமல் வெற்றிபெற வீறுநடை போடலாம் உறுதியான உள்ளம் கொண்டிரு உலகவீரன் நெப்போலியன் போன்று வாழும் போதே வரலாறு படைத்திடு திண்ணிய எண்ணம் இருந்தால் மண்ணுலகை எளிதில் வெல்லலாம் உன்னை நீ அறிவாய் உன் பேளாவை உலகறியும் நிற்க அதற்குத்தக. ஒரு நல்ல தோழியாக/தோழராக நண்பர்களுக்குச் செய்யவேண்டியது. அ) எழுதுபொருள்களை நண்பர்களுக்குக் கொடுத்து உதவுவது ஆ) விடுப்பு எடுத்த நண்பர்களுக்கு ஏடுகள் கொடுத்து உதவுதல், வகுப்பில் நடந்தவற்றைப் பகிர்தல். இ) நல்ல பண்புகளைப் பாராட்டி ஊக்குவித்தல். ஈ) குறைகளை நயமுடன், புண்படா வகையில் சுட்டிக்காட்டுதல். உ) இடர்வரும் வேளையில் இனிமையான, இதமான சொற்களால் தேற்றுதல். இயல்-8 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇
|