8.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இயல் - 8
ஒன்றே குலம் (பக்க எண்: 169 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக்
கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.
அ) புலனை ஆ) அறனை இ) நமனை ஈ) பலனை
2.
ஒன்றே_____ என்று கருதி
வாழ்வதேமனிதப்பண்பாகும்.
அ) குலம் ஆ) குளம் இ) குணம் ஈ) குடம்
3.
‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது _____.
அ) நம் + இல்லை ஆ) நமது + இல்லை இ) நமன் + நில்லை ஈ) நமன் + இல்லை
4.
நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) நம்பரங்கு ஆ) நம்மார்க்கு இ) நம்பர்க்கங்கு ஈ) நம்பங்கு
குறுவினா
1.
யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?
விடை:
ü மனிதர் அனையரும் ஒரே
இனத்தவர். உலகைக்காக்கும் இறைவனும் ஒருவனே.
ü இக்கருத்துகளை நன்றாக மளத்தில்
நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம்
இல்லை.
2. மக்களின்
உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?
விடை: மனிதர் அனைவரும் ஒரே இனத்தவர். உலகைக் காக்கும்
இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனதில் நிறுத்த வேண்டும்."
சிறுவினா
மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு
குறித்துத்திருமூலர் கூறுவது யாது?
விடை:
ü படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில்
வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச்
செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது
ü அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில்
இருக்கும் இறைவனுக்கும் சேரும், என்று
திருமூலர் கூறுகிறார்.
சிந்தனைவினா
அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய
உதவிகளைச் செய்யலாம்?
விடை:
ü நம்மால் முடிந்த அளவு ஏழை மக்களுக்கு உணவிடலாம்.
ü சாலைனயக் கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கோ,முதியோர்களுக்கோ உதவலாம்.
ü பேருந்துகளில் செல்லும்போது முதியோர்களுக்கு
எழுத்து இடம் நாணம்.
ü விபத்துகள் ஏற்பட்டால், ஓடி ஒதுங்காமல் முன்னால் சென்று முதலுதவி
மேற்கொள்ளலாம்.
மெய்ஞ்ஞான ஒளி (பக்க எண்: 171 மதிப்பீடு)
சரியான
விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்லவிடாமல்
காக்கவேண்டும்.
அ) ஐந்திணைகளை ஆ) அறுசுவைகளை இ) நாற்றிசைகளை ஈ) ஐம்பொறிகளை
2.
ஞானியர் சிறந்தகருத்துகளைமக்களிடம் _____.
அ) பகர்ந்தனர் ஆ) நுகர்ந்தனர் இ) சிறந்தனர் ஈ) துறந்தனர்
3.
‘ஆனந்தவெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது _____.
அ) ஆனந்த+ வெள்ளம் ஆ) ஆனந்தன் + வெள்ளம் இ) ஆனந்தம் + வெள்ளம் ஈ) ஆனந்தர் + வெள்ளம்
4.
உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) உள்ளேயிருக்கும் ஆ) உள்ளிருக்கும் இ)
உளிருக்கும் ஈ) உளருக்கும்
குறுவினா
1.
உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?
விடை: உண்மை அறிவினை உணர்ந்தவர்களின்
உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக இறைவன் விளங்குகின்றார்
2.
மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?
விடை: இறைவன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல்,
பணத்தின்மீது ஆசை வைத்ததால் மனிதன் மனம்
கலங்கி அலைகின்றான்.
சிறுவினா
குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?
விடை:
ü மேலான பொருளே! தம்
தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளேஎழுந்தருளி
இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே!
ü உன் திருவடிகளின்மேல்
பற்று வைக்காமல்,
பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.
ü நீ
உண்மைஅறிவினைஉணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும்
கடலாக விளங்குகின்றாய்.
ü மேலான பொருளே!
ஐம்பொறிகளைஅடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பைஉணர்ந்து நல்வழிப்படுத்தும்
அறிவினைஎனக்குத்தந்து அருள்செய்வாயாக.
சிந்தனைவினா
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்யவேண்டிய நற்செயல்கள் யாவை?
விடை:
1.
கண்
– நல்லவற்றையே பார்த்தல்
2.
காது
– நல்லவற்றையே கேட்டல்
3.
வாய்
– நல்லவற்றையே பேசுதல்
4.
மூக்கு
– நல்ல காற்றைச் சுவாசித்தல்
5.
மெய்
– நல்லுணர்வினை வெளிப்படுத்துதல்
அயோத்திதாசர் சிந்தனைகள் (பக்க
எண்: 178 மதிப்பீடு)
சரியான
விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
அ) தமிழக ஆ) இந்திய இ) தென்னிந்திய ஈ) ஆசிய
2. அயோத்திதாசர்
நடத்திய இதழ்_____.
அ)
ஒருபைசாத்தமிழன்
ஆ) காலணாத்தமிழன் இ) அரைப்பைசாத்தமிழன் ஈ)
அரையணாத்தமிழன்
3. கல்வியோடு
_____ கற்கவேண்டும் என்பது அயோத்திதாசர்
கருத்து.
அ) சிலம்பமும் ஆ) கைத்தொழிலும் இ) கணிப்பொறியும் ஈ) போர்த்தொழிலும்
4. அயோத்திதாசரின்
புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ________.
அ) ஆழ்ந்தபடிப்பு
ஆ) வெளிநாட்டுப்பயணம் இ) இதழியல் பட்டறிவு ஈ) மொழிப்புலமை
5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________.
அ) வானம் ஆ) கடல்
இ) மழை ஈ) கதிரவன்
குறுவினா
1. அயோத்திதாசரிடம்
இருந்த ஐந்து பண்புகள் யாவை?
விடை:
1.நல்ல
சிந்தனை
2. சிறப்பான
செயல்
4.உலப்பான
எழுத்து
3.உயர்வான
பேச்சு
5.பாராட்டத்தக்க
உழைப்பு
2. ஒரு சிறந்தவழிகாட்டி எவ்வாறு
இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?
விடை: ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக,
நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும் என
அயோத்திதாசர் கூறுகிறார்.
3. திராவிட மகாஜன சங்கம்
எவற்றுக்காகப் போராடியது?
விடை:
திராவிட மகாஜனசங்கம்,
ü
சாலைகள் அமைத்தல்
ü
கால்வாய்கள்
பராமரித்தல்
ü
குடிகளின்பாதுகாப்புக்குக்
காவல்துறையினரை நியமித்தல்
ü
பொது மருத்துவமனைகள்
அமைத்தல்
ü
சிற்றூர்கள் தோறும்
கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக போராடியது.
சிறுவினா
1. அயோத்திதாசரின்
இதழ்ப்பணி பற்றி எழுதுக.
விடை:
ü அயோத்திதாசர் 1907 ஆம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத் தமிழன் என்னும்
வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
ü ஓர் ஆண்டிற்குப் பின் அவ்விதழின் பெயரைத் தமிழன்
என மாற்றினார். * உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி
அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை,
சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று
குறிப்பிட்டார்.
ü
இவர் தமிழன் இதழ் மூலம்
தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார்,
ஐதராபாத் இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.
2. அரசியல்
விடுதலைபற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?
விடை:
ü விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம்
மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்
ü நல்ல சுயராஜ்ஜியத்தின்
நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும்.
ü மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது.
நெடுவினா
வாழும் முறை, சமத்துவம்
ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.
விடை:
அ) வாழும்
முறை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள்:
v மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும்.
v கோபம்,பொறாமை,
பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்வில் இருந்து
நீக்கி வாழவேண்டும்.
v பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது.
v மேலும் மதியை அழிக்கும் போதைப் பொருள்களைக்
கையாலும் தொடுதல் கூடாது. * ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால், அக்குடும்பம் யாழும் ஊர் முழுவதும் அன்பும்
ஆறுதலும் பெறும்.
v ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு
முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத்திகழும் இத்தகைய நாட்டில் புலியும் பகவும் ஒரே
நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள்,
ஆ) சமத்துவம் பற்றிய
அயோத்திதாசரின் சிந்தனைகள்:
v மக்கள் அனைவரும் சம உரிமைபெற்றுச் சமத்துவமாக
வாழவேண்டும். கல்வி, வேளான்மை,
காவல்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சம
வாய்ப்பு வழங்கவேண்டும்.
v ஊராட்சி, நகராட்சி,
சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும்
எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
v இவற்றில் இந்து, பௌத்தர், கிறித்துவர்,
இசுலாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற
v அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்
எனத்தொடர்ந்து வலியுறுத்திவந்தார் அயோத்திதாசர்.
சிந்தனைவினா
ஒரு
சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்கவேண்டிய உயர்பண்புகள் யாவை?
விடை:
ü நல்ல சிந்தனை உடையவராக இருத்தல்வேண்டும்.
ü சமத்துவச் சிந்தனை உடையவராக இருத்தல்வேண்டும்.
ü பகுத்தறிவுச் சிந்தனைவாதியாக இருக்கவேண்டும்.
ü நேர்மையான செயல்களைப் பெற்றவராக இருத்தல்
வேண்டும்
மனித யந்திரம் (பக்க எண்:
181 மதிப்பீடு)
மனித யந்திரம்
கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.
முன்னுரை
“சிறுகதை மன்னன்” என்று
போற்றப்படும் புதுமைப்பித்தன் எழுதிய கதை மனித யந்திரம் ஆகும். அதனை இனிக்
காண்போம்.
மீனாட்சி
சுந்தரம்
மீனாட்சி சுந்தரம் ஒரு
கடையில் எழுத்தர் வேலை செய்பவர். 45 வருடங்களாக ஒரே கடையில்
வேலை செய்கிறார். சம்பளம் மாதத்திற்கு 20 ரூபாய். அவர்
மிகவும் சாது. அவரைப் பாரத்தாலே அனைவருக்கும் பழுதுபடாத எந்திரம் தான்
ஞாபகத்திற்கு வரும். இவரை ஊரார் அப்பாவிப் பிராணி என்றுதான் கூறுவார்கள்.
மீனாட்சி
சுந்தரத்தின் ஆசை
சாதுவாக இருந்த மீனாட்சி
சுந்தரத்தின் மனில் ஆசைகள் முளைவிடத் தொடங்கின. மாடும் கன்றும் வாங்க வேண்டும்.
நிலத்தைத் திருப்ப வேண்டும். ஒருமுறை கொழும்புக்குப் போய் விட்டு தங்க அரைஞான்,
கடிகாரச் சங்கிலி, கையில் பணம் போன்றவற்றுடன்
மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும். தெருவில் எதிரிலே வருகிறவர்கள் எல்லாரும்
துண்டை இடுப்பில் கட்டி அண்ணாச்சி சவுக்கியமா? என்று கேட்க
வேண்டும். இதுதான் மீனாட்சி சுந்தரத்தின் ஆசை.
மீனாட்சி
சுந்தரத்தின் செயல்
கணக்கு வழக்கைப் பாரத்து
விட்டுக் கடையை பூட்டிவிட்டுப் பணத்தை முதலாளி வீட்டில் ஒப்படைத்து விட்டு
வருவதுதான் வழக்கம். மீனாட்சி சுந்தரம் தன்னுடைய ஆசைகளுக்கு வடிவம் கொடுக்க
நினைத்தார். பெட்டியில் உள்ள பணத்தைத் திருடிச் சென்று விட முடிவு செய்தார்.
நாற்பது ரூபாயும் சில்லறையும் இருந்ததை எடுத்துக் கொண்டு கடையைப் பூட்டிவிட்டு
சென்றார் மீனாட்சி சுந்தரம்.
மனமாற்றம்
மீனாட்சி சுந்தரம் கடையில்
திருடிய பணத்தையும் சில்லறையும் எடுத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து
தூத்துக்குடி வண்டியில் ஏறி அமர்ந்தார். திருடிய பயத்தில் வியர்வை பூத்தது. அந்த
நேரத்தில் மீனாட்சி சுந்தரம் என்று ரயில்வே போலீஸ் நண்பர் கல்யாணசுந்தரம்
மீனாட்சி சுந்தரத்தைக் கூப்பிட்டார். திருடிய பயத்தில் தூத்துக்குடி செல்வதாகக்
கூறினார். காலை விடிந்தவுடன் எல்லா விஷயமும் ஊராருக்குத் தெரிந்.துவிடும். கல்யாண
சுந்தரமும் நான் தூத்துக்குடி சென்றுள்ளதை சொல்லிவிடுவான். எனவே பயத்தில்
மனமாற்றம் அடைந்தான். மீண்டு கடையை நோக்கி நடந்து தனக்குரிய பதினொண்ணே காலணா
சம்பளத்தை எடுத்துக்கொண்டு, முதாலாளி ஐயா வீட்டிற்குச்
சென்று சம்பளம் எடுத்துக் கொண்டதை சொல்லி விட்டுச் சென்றார்.
முடிவுரை
குற்றவுணர்வு மனதில் அழுத்திக் கொண்டே இருந்து, அது நம்மைத் தீயவை பக்கத்தில் விடாமல் காப்பாற்றும் என்பதை அறியலாம்.
யாப்பு இலக்கணம் (பக்க எண்:
184 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து
எழுதுக.
1.
அசை _____ வகைப்படும்.
அ)
இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
2.
விடும் என்பது_____ சீர்.
அ) நேரசை ஆ) நிரையசை இ) மூவசை ஈ) நாலசை
3.
அடி _____ வகைப்படும்.
அ) இரண்டு ஆ) நான்கு இ) எட்டு ஈ) ஐந்து
4.
முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____.
அ) எதுகை ஆ) இயைபு இ) அந்தாதி ஈ) மோனை
பொருத்துக.
விடை:
வெண்பா - செப்பலோசை
ஆசிரியப்பா - அகவலோசை
கலிப்பா - துள்ளல் ஓசை
வஞ்சிப்பா - தூங்கலோசை
சிறுவினா
1.
இருவகைஅசைகளையும் விளக்குக.
விடை:
ü எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து
அமைவது அசை. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
ü குறில் அல்லது நெடில்
எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும். (எ.கா.) ந, நம், நா, நாம்.
ü இரண்டு
குறில்எழுத்துகள் அல்லது குறில்,
நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து
சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும். (எ.கா.) கட, கடல், கடா, கடாம்.
2.
தளை என்பது யாது?
விடை: சீர்கள்
ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.
3.
அந்தாதி என்றால் என்ன?
விடை: ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது
அடியின் இறுதிப்பகுதி அடுத்தபாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு
பாடப்படுவது அந்தாதித் தொடை
4.
பா எத்தனை வகைப்படும்? அவையாவை?
விடை:
வெண்பா, ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா என பா நான்கு
வகைப்படும்.
மொழியை ஆள்வோம் (பக்க எண்:
184 மதிப்பீடு)
இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக
எ.கா: முத்து நன்கு
படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.
முத்து நன்கு
படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.
1. மழை
நன்கு பெய்தது எங்களால் விளையாட முடியவில்லை.
விடை: மழை நன்கு பெய்ததால் விளையாட முடியவில்லை.
2. எனக்குப்
பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.
விடை: எனக்கு பாலும் பழமும் வேண்டும்.
3. திருமூலர்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.அவர்
பதினெண் சித்தர்களில்
ஒருவராக கருதப்படுபவர்.
விடை: திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண்
சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
4.அறநெறிகளைக்
கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற
வேண்டும்.
விடை: அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று பின்பற்ற
வேண்டும்.
5. குணங்குடி
மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்
நந்தீசுவரக்கண்ணி நூலை
இயற்றியுள்ளார்.
விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
அறிந்து பயன்படுத்துவோம்
பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
விபத்தில்லா வாகனப்
பயணம்
சாலைவிதிகளுக்கு உட்பட்டு
வாகனம் ஒட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயசுகினால்
விபத்துகளைத் தவிர்க்கலாம்.
Ø ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில்
செலுத்துவதுடன், எதிரே
வரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்ல போதிய இடம்விட வேண்டும்.
Ø சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள். திரும்பும் இடங்கள்
ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில்
இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல
வேண்டும்.
Ø சாலைச்சந்திப்பில் நுழையும் போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லுகள் வாகளங்களுக்கு
முதலிடம் கொடுக்கவேண்டும்.
Ø நீயணைப்பு வாகனம், அவசரா சிகிள்ளா அர்தி ஆகியாற்றுக்கு முன்னுரியின்
அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழியிட
வேண்டும்
Ø எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை
அல்லது வாகனஎச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
Ø மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச்
செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள்
பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தரவேண்டும்.
வினாக்கள்
1.விபத்துகளை
எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை: சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும்
முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
2. கண்டிப்பாக
வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?
விடை: தீயணைப்பு வாகனம், அவசர சிகிச்சை ஊரதி
3. சாலைச்
சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?
விடை: சாலைச் சந்திப்பில் நுழையும்போது அந்தச்
சாலையில் ஏற்கனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
4.மலைச்சாலைகளில்
பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?
விடை: கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேல் நோக்கி
வரும் வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.
5.வாகனம்
செலுத்தும் முறையை எழுதுக.
விடை: வாகனத்தைச் சாலையின் இடது புறத்தில்
செலுத்துவதுடன் எதிரே வரும் வாகனத்துக்கு வலப்புறமாகக் கடந்து செல்ல போதிய இடம்
விட வேண்டும்.
புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
12,தென்றல் நகர்,
திருத்தணி-1.
12-03-2022.
அன்புள்ள அண்ணனுக்கு,
தங்கள்
அன்பு தம்பி தமிழ்வேந்தன் எழுதும் மடல்.நலம், நலமறிய ஆவல்.தங்களைச் சந்தித்து நீண்ட
நாட்கள் ஆகியிருப்பினும்,தங்களை அவ்வப்போது நினைவு கூர்வதுண்டு.எனது தமிழ் தேடலுக்காகச்
சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ஒன்று தேவைப்படுகிறது.எங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை.
தாங்கள் வசிக்கும் திருவல்லிக்கேணி வள்ளுவர் பதிப்பகத்தில் கிடைப்பதாக அறிந்தேன்.ஒரு
பிரதியை வாங்கி தூதஞ்சல் மூலம் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள் அன்பு தம்பி,
கா.கொற்றவன்.
உறைமேல்
முகவரி:
பூ.சொற்கோ
54,மறவன் வீதி,
திருவல்லிக்கேணி,
சென்னை-14
மொழியோடு விளையாடு (பக்க எண்: 187 )
படத்தைப் பார்த்து எழுதுக.
இயல்-8 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇