7.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்
இரண்டாம் பருவம் இயல் - 1
கலங்கரை விளக்கம்
(பக்க எண்: 4 மதிப்பீடு)
சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேயா மாடம் எனப்படுவது
அ) வைக்கோலால் வேயப்படுவது ஆ) சாந்தினால்
பூசப்படுவது
இ) ஓலையால்
வேயப்படுவது ஈ) துணியால் மூடப்படுவது
2. உரவுநீர் அழுவம் - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின்
பொருள்
ஆ) வானம் அ) காற்று இ) கடல் ஈ) மலை
3. கடலில் துறை அறியாமல் கலங்குவன
அ) மீன்கள் ஆ) மரக்கலங்கள்
இ) தூண்கள் ஈ) மாடங்கள்
4.தூண் எனும் பொருள் தரும் சொல்
அ) ஞெகிழி ஆ)
சென்னி இ) ஏணி ஈ) மதலை
குறு வினா
1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
விடை: மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது : கலங்கரை விளக்கின் ஒளி,
2. சுலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
விடை: கலங்கரை விளக்கில் இரவுநேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.
சிறு வினா
1. கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகள் யாவை?
விடை:
Ø கலங்கரை
விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண்போலத் தோற்றம் அளிக்கின்றது.
Ø அது
ஏணி கொண்டு ஏறமுடியாத அளவுக்கு உயரத்தைக் கொண்டு இருக்கின்றது.
Ø வைக்கோல்
ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும்
மாடத்தை உடையது.
Ø அம்
மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை
(எல்லை) அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைக்கின்றது.
சிந்தனை வினா
1. கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும்
என நீங்கள்
கருதுகிறீர்கள்?
விடை:
ü
கடல் ஆய்வு செய்பவர்கள்
ü
மீனவர்கள்
ü
கப்பற் படை வீரர்கள்
ü
கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்
கவின்மிகு கப்பல் (பக்க எண்: 7 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
1. இயற்கை வங்கூழ் ஆட்ட - அடிக்கோடிட்ட
சொல்லின் பொருள்
அ) நிலம் ஆ) நீர்
இ) காற்று
ஈ) நெருப்பு
2. மக்கள் -------- ஏறி
வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அ) கடலில் ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்
3. புலால் நாற்றம் உடையதாக அாநானூறு கூறுவது
அ)காற்று ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல்
4. 'பெருங்கடல் இச்சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல்
5, இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது,
அ) இன்றுஆகி ஆ) இன்றிஆகி
இ) இன்றாகி ஈ) இன்றாஆகி
6) எதுகை இடம்பெறாத இணை
அ) இரவு – இயற்கை ஆ) வங்கம் – சங்கம் இ) உலகு -புலவு ஈ) அசைவு - இசைவு
பொருத்துக
விடை:
1. வங்கம்
- கப்பல்
2. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
3. எல் – பகல்
4. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
குறுவினா
1. நாயாலில் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அவதானூறு கூறுகிறது?
விடை: நாவாயின் தோற்றம் உலகம் இடம் பெயர்ந்தது போன்று இருந்ததாக அகநானூறு
கூறுகிறது.
2 நாவாய் ஒட்டிகளுக்குக் காற்று சஈவ்வாறு துணைசெய்கிறது?
விடை: இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்று நாவாயைச்
செலுத்தி நாவாய் ஓட்டிகளுக்குத் துணை செய்கின்றது.
சிறுவினா
கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானுறு எவ்வாறு விளக்குகிறது?
விடை:
ü
உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது தாவாய். அது
புலால் நாற்றும் உடைய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்,
ü
இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீக்கின்ற காற்றானது நாவாயை
அசைத்து செலுத்தும்.
ü
உயர்ந்த தரையை உடைய மணல் நிறைத்த துறைமுகத்தில் கலங்கரை
விளக்கத்தின் ஒலியால் திசை அறித்து நாவாய் ஓட்டுபவன் நாவாயிச் செலுத்துவான,
-என்று கடலில் கப்பல்
செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது.
சிந்தனை வினா:
தரைவழிப்பயணம் கடல்வழிப் பயணல் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?
விடை: இயற்கையின் அழகைக் கண்டு மகிழவும். கடல்வாழ்
உயிரினங்களைப் பர்க்கவும்
கடல் தீவுகளின்
இயற்கைக் காட்சிகாளக கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்த து. எனவே தான் கடல்வழிப் பயணத்தை விரும்புகின்றேன்.
தமிழரின் கப்பற்கலை (பக்க எண்:
12 மதிப்பீடு)
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழரின் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப்
பயன்படுத்தியது -
அ) கலம் ஆ) வங்கம் இ)நாவாய் ஈ) ஓடம்
2 . தொல்காப்பியம் கடற்பயணத்தை. வழக்கம் என்று
கூறுகின்றது.
அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்
3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப்
பயன்படும்.கருவி
அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்டை ஈ) சமுக்கு
கோடிட்ட
இடங்களை நிரப்புக.
1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் --------என அழைக்கப்படும்.
விடை : தொகுதி
2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது
விடை : தங்கூரம்
3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் .------ எனக்குறிக்கப்படும்.
விடை : கண்ணடை
பொருத்துக
விடை:
1. ஏரா - அடிமரம்
2.பருமல் -
குறுக்கு மரம்
3. மீகாமன்
- கப்பலைச் செலுத்துபவர்
4. காந்த ஊசி - திசைகாட்டும் கருவி
தொடர்களில் அமைத்து எழுது.
1. நீரோட்டம் - ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர்.
2.காற்றின் திசை - - கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப
செலுத்துவர்.
3. வானியல் அறிவு - தமிழா வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்.
4.ஏற்றுமதி பண்டைய காலத்தில் கடல்வணிகம் மூலம் ஏற்றுமதி நடைபெற்றது.
குறு வினா
1. தோணி என்னும்
சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
விடை: எடை
குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து தோண்டப்பட்டவை. 'தோணி' எனப்பட்டன.
2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ)பஞ்சு
வைப்பதன் நோக்கம் என்ன?
விடை: மரங்களையும்
பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்
கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை க் கூறுக.
சிறு வினா
1.சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய
ஊர்திகளின் பெயர்களை எழுதுக.
விடை: தோணி , ஓடம் , படகு , மிதவை , தெப்பம் , கலம்
, நாவாய் , புணை , வங்கம்
2.பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றிக் கூறுக.
விடை:
ü
காற்றின் திசை அறிந்து கப்பல்கள் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு
அறிந்துவைத்திருந்தனர்.
ü
கடலில் காற்று வீசும் திசை. நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத்
தமிழர்கள் நன்கு அறிந்து வைத்து, உரிய காலத்தில் உரிய திசையில் கப்பலைச்
செலுத்தினர்.
ü
திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்து திசையை
அறிந்து கப்பலைச் செலுத்தினர்.
ü
சிறந்த வானியல் அறிவை மாலுமிகள் பெற்றிருந்தனர். கோள்களின் நிலையை
வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும்
ü
கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து சரியான காலத்தில் கப்பலைச்
செலுத்தினர்.
3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?
விடை:
v
கப்பல் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாதமரங்களையே
பயன்படுத்தினர்.
v
நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்குத்
v
தேக்கு, வெண் தேக்கு மரங்களைப் பயன்படுத்தினர். சுழி உடைய
மரங்களைத் தவிர்த்தனர்.
v
மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய்
நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்.
v
சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து
கப்பலின்
v
அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்டகாலம்
உழைத்தன. இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மரஆணிகளைப் பயன்படுத்தினர்.
சிந்தனை வினா
1. இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப்
பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.
விடை:
ü
கப்பலில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் நீண்டநாட்கள் பயணம் செய்ய
வேண்டும். அதனால் கால விரையம் ஏற்படும்.
ü
அதிவிரைவுக்குக் கடற்பயணம் பயன்படுவதில்லை. 4 கடல் உயிரினங்கள் மற்றும் புயல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தும். அதிகபொருட்செலவை
ஏற்படுத்தும்,
போன்ற காரணங்களால் இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக்
கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளவில்லை.
ஆழ்கடலின் அடியில் (பக்க எண்:
18 மதிப்பீடு)
'ஆழ்கடலின் அடியில்' கதையைச் சுருக்கி எழுதுக.
கதைமாந்தர் அறிமுகம்:
பியரி - விலங்கியல் பேராசிரியர்
ஃபராகட் - அமெரிக்கா
நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட போர்க் கப்பலின் தலைவர்.
நெட் - ஈட்டி எறிந்து திமிங்கிலங்களை
வேட்டையாடுவதில் வல்லவர்.
கான்சீல் - பியரியின் உதவியாளர்.
முன்னுரை
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ்
வெர்ன். அவர் எழுதிய ‘ஆழ்கடலின் அடியில்' என்ற புதினத்தின்
கதையினைச் சுருக்கிக் காண்போம்.
விலங்கைத் தேடிய பயணம்
கடலில் உலோகத்தால் ஆன உடம்பு கொண்ட ஒரு விலங்கு கடலில்
செல்வோரைத் தாக்கியது. அதனைக் கண்டுபிடித்து அழிக்க பியரி, ஃபராகட்,
நெட், கான்சீல் ஆகியோர் கொண்ட குழு நியூயார்க்
நகரில் இருந்து ஒரு போர்க்கப்பலில் செல்கின்றது. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை
மூன்று மாதங்களாகத் தேடியும் அந்த விலங்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்த விலங்கு
இவர்களின் கப்பலைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகளும், நெட்டின்
ஈட்டியும் அந்த விலங்குகளை எதுவும் செய்ய முடியவில்லை. அது இவர்களைத் தூக்கி
வீசியது.
நீர்மூழ்கிக் கப்பல்
அது விலங்கன்று. நீர் மூழ்கிக் கப்பல் என்பதை அவர்கள்
அறிந்தனர். அவர்களை நீர் மூழ்கிக் கப்பல் வீரர்கள் சிறைபிடித்தனர். அந்த நீர்
மூழ்கிக் கப்பல் பெயர் நாட்டிலஸ் என்றும், அதன் தலைவர் நெமோ
என்பதையும், இக்கப்பலை விந்தையான விலங்கு என்று நம்ப
வைத்ததையும் நேமோ கூறிவிட்டு, இச்செய்தி அறிந்த உங்களை
வெளியில் அனுப்ப முடியாது. எனக்கான இந்தத் தனி உலகத்தில் தான் நீங்களும் இருக்க
வேண்டும் என்றார். அனைவரும் அச்சப்பட்டனர்.
கப்பலின் இயக்கம்
கப்பலுக்குத் தேவையானவை எப்படி உங்களுக்குக் கிடைக்கின்று
என்று பியரி, நெமோவிடம் கேட்டார். அதற்கு அவர் மின்சாரம்
தயாரிக்க தேவையான கருவிகள் உள்ளன, கப்பலில் மிகப்பெரிய
நீர்த்தொட்டி உள்ளது. அதனை நிரப்பும் போது கப்பல் கடல் அடியிலும் நீர் வெளியேறும்
போது மேல் செல்கின்றது. சில நாட்களுக்கு ஒரு முறை கப்பல் மேலே வரும் பொழுது
சுவாசிக்கத் தேவையான காற்றைப் புதுப்பித்துக்கொள்ளும், காற்றுச்
சேகரிக்கும் நிறைய பைகளும் உள்ளன என்றார்.
மணல் திட்டில் சிக்கிய
கப்பல்
ஒரு நாள் மணல் திட்டில் கப்பல்
சிக்கிவிட்டது. தூரத்தில் தெரிந்த தீவில் காய்கறி வாங்கி வர அவர்களை,
நெமோ இசைவளித்தார். அவர்கள் காய்கறிகள் வாங்கி கொண்டு திரும்பும்
போது அத்தீவில் உள்ளவர்கள் துரத்தினார்கள். அவர்கிளிடம் மாட்டாமல் கப்பல் வந்து
சேர்ந்தனர். அக்கப்பலை அவர்கள் முற்றுகையிட்டனர். கடலின் நீர்மட்டம் உயர கப்பல்
மேலே வந்தது. ஆறு நாள் போராட்டத்திற்குப் பிறகு கப்பல் பயணம் தொடர்ந்தது.
கடலுக்கடியில் அவர்கள் செல்லும் போது, முத்துக்குளித்துக்
கொண்டிருந்த இந்தியர் ஒருவரை சுறாவிடம் இருந்து காப்பாற்றினர்.கடலடியின் உன்னத
காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்தனர்.
முடிவுரை
பெரும் கடல் சுழலில் கப்பல் மாட்டிக் கொண்டது. மூவரும்
தூக்கிவீசப்பட்டனர். மயக்கநிலையில் நார்வே நாட்டு மீனவர் குடிசையில் இருந்ததை
விழித்துப் பார்த்தனர். நெமோவும் கப்பலும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
இலக்கியவகைச் சொற்கள் (பக்க
எண்: 21 மதிப்பீடு)
சரியான விடையைத் தேர்ந்தெ டுத்து எழுதுக.
1. எல்லார்க்கும்
எளிதில் பொருள் விளங்கும் சொல் ________.
அ) இயற்சொல்_ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வ டசொல்
2. பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ___________.
அ) இயற்சொல்_ ஆ) திரிசொல் இ)
திசைச்சொல் ஈ) வடசொல்
3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ___________.
அ) மலை யாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு
பொருத்துக.
குறுவினா
1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
விடை: இயற்சொற்கள்
2. இயற்சொல்லின்
நான்கு வகைகள் யாவை ?
விடை: இயற்சொல்
பெ யர், வினை, இடை, உரி ஆகிய நான்கு
வகையிலும் வரும்.
3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
விடை: தற்சமம் வகை வடசொற்கள்
சிறுவினா
1. இலக்கியவகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை
யாவை ?
விடை: இலக்கிய
வகை யில் சொற்களை இயற்சொல் , திரிசொல் ,
திசைச்சொல் , வடசொல் என
நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
விடை:
3. பண்டிகை , கேணி என்பன
எவ்வகைச் சொற்கள்? விளக்குக.
விடை: திசைச்சொற்கள் - தமிழில்
வழக்கில் இருந்தா லும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில்
வழங்கி வருபவை யாகும். இவ்வா று வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெ றும் சொற்கள் திசைச்சொ ற்கள் எனப்படும்.
மொழியை ஆள்வோம்
(பக்க எண்: 22)
கட்டங்களை நிரப்புக
வேர்ச்சொல் |
இறந்தகாலம் |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
நட |
நடந்தான் |
நடக்கின்றான் |
நடப்பான் |
எழுது |
எழுதினான் |
எழுதுகின்றான் |
எழுதுவான் |
ஓடு |
ஓடினான் |
ஓடுகின்றான் |
ஓடுவான் |
சிரி |
சிரித்தான் |
சிரிக்கின்றான் |
சிரிப்பான் |
பிடி |
பிடித்தான் |
பிடிக்கின்றான் |
பிடிப்பான் |
இறங்கு |
இறங்கினான் |
இறங்குகின்றான் |
இறங்குவான் |
பொருத்த மான காலம் அமை யுமாறு திருத்தி எழுதுக.
1. அமுதன் நேற்று
வீட்டுக்கு வருவான்.
விடை: அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்
2. கண்மணி நாளை பாடம்
படித்தாள்.
விடை: கண்மணி நாளை பாடம் படிப்பாள்
3. மாடுகள் இப்பொழுது
புல் மேயும்.
விடை: மாடுகள் இப்பொழுது புல் மேய்கின்றன
4. ஆசிரியர் நாளை
சிறுதேர்வு நடத்தினார் .
விடை: ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்
5. நாங்கள் நேற்று கடற்கரைக்குச்
செல்கிறோம்.
விடை: நாங்கள்
நேற்று கடற்கரைக்குச் சென்றோம்.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
பயணங்கள் பலவகை
முன்னுரை –
பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப் பயணம் – வான்வழிப் பயணம் –
முடிவுரை.
முன்னுரை : பயணம் என்பது
சங்ககாலம் முதல் நிகழ்ந்து வருகின்றது. நடைபயணமாகத் தொடங்கிய பயணத் தோற்றம்
அறிவியல் வளர்ச்சியால் இன்று பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. பயண
நேரம் இன்று மிகவும் சுருங்கிவிட்டது.
பயணத்தின்
தேவை:
மனிதன் தன்னுடைய அடிப்படைத்
தேவைகளுக்காவும், பண்டமாற்று முறைக்காகவும், பொருட்களை வாங்கவும் விற்கவும் சந்தைப்படுத்தவும். தம் உறவினர் மற்றும்
நண்பர்களைத் தொடர்பு கொள்வதற்கும், மருத்துவத் தேவைக்காகவும்
பயணத்தின் தேவை ஏற்பட்டது. பயணத்தின் தன்மைக் கேற்ப தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிவழிப் பயணம் என
வகைப்படுத்தப்பட்டது.
தரை வழிப்பயணம்
:
பழங்காலம் முதல் தரைவழிப்பயணமே
அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நடைபயணமாகவே ஆரம்ப கால கட்டத்தில் பயணம்
மேற்கொள்ளப்பட்டது.மாட்டு வண்டி, குதிரை வண்டியின் மூலம்
நடைபெற்ற தரைவழிப் பயணம், பின்னர் அறிவியல் வளர்ச்சியின்
காரணமாக மிதிவண்டி, மகிழ்வுந்து, பேருந்து,
சரக்குந்து, தொடர்வண்டி ஆகியவை மூலம்
தரைவழிப்பயணம் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. கடல்வழிப்பயணம் :
கப்பல் போன்றவற்றில்
கடல்வழியாகச் செல்லும் பயணம் கடல்வழிப்பயணம் ஆகும். கடலின் அழகைக் கண்டு மகிழவும்,
கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல்
தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. தீவுகள்
மற்றும் வெகு தொலைவு நாடுகளுக்குப் பொருட்களை அனுப்பவும், அயல்
நாடுகளுக்கு வணிகம் செய்யவும் கடல்வழிப்பயணம் பயன்பட்டது. :
வான்
வழிப்பயணம்:
விமானம் உள்ளிட்ட வாகனங்கள்
மூலம் வான்வழியில் பயணம் மேற்கொள்வது வான்வழிப்பயணம் ஆகும்.தரை மற்றும் கப்பல் வழி
பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒருசில
மணி நேரங்களிலேயே செல்லலாம்.அதிவிரைவுக்கு ஏற்றது வான்வழிப் பயணம்.
முடிவுரை:
பயணம் செய்வதில் பாதுகாப்பான முறைகளை அறிந்து பயன்படுவது பயணிகளாகிய நம் கடமையாகும்.பயணத்தில் வீண் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.
மொழியோடு விளையாடு
(பக்க எண்: 23)
குறுக்கெழுத்துப் புதிர்.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான
தமிழ்ச் சொற்களை அறிவோம்.
குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை
நிரப்புக.
1. முக்கனிகளுள் ஒன்று - மா
2. கதிரவன் மறையும் நேரம் - மாலை
3. பெருந்திரளான மக்கள் கூடும்
நிகழ்வு - மாநாடு
4. எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால
அளவு - மாத்திரை
5. அளவில் பெரிய நகரம் – மாநகரம்
இயல்-1 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇