7 TH STD TAMIL TERM- 2 UNIT 2 QUESTION & ANSWER

 

7.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

இரண்டாம் பருவம் இயல் - 2

இன்பத்தமிழ்க் கல்வி (பக்க எண்:28 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது

அ) மயில்  ஆ) குயில்  இ) கிளி   ஈ) அன்னம்

2 பின்வருவனவற்றுள் 'மலை'யைக் குறிக்கும் சொல்

அ) வெற்பு   ஆ) காடு இ) கழனி   ஈ) புவி

3. 'ஏடெடுத்தேன்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஏடெடு + தேன்   ஆ)ஏட்டு + எடுத்தேன் இ) ஏடு + எடுத்தேன்  ஈ) ஏ +டெடுத்தேன்

4.'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) துயின்று + இருந்தார்  ஆ) துயில் இருந்தார்.   இ) துயின்றி + இருந்தார்   ஈ) துயின் + இருந்தார்

5.என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் –

அ) என்றுஉரைக்கும்   ஆ) என்றிரைக்கும்  இ) என்றரைக்கும்   ஈ) என்றுரைக்கும்

பொருத்துக.

விடை:

1. கழனி - வயல்

2. நிகர்  - சமம்

3. பரிதி - கதிரவன்

4. முகில் - மேகம்

குறுவினா

1. பாரதிதாசனின் மனத்தைக் கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?

விடை:  வானம் ,நீரோடை, தாமரை, கதிரவன்,காடு, வயல், தென்றல் , மயில் முதலியன

2. தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?

விடை: துன்பங்கள் நீங்கி , நெஞ்சில் தூய்மை உண்டாகும். வீரம் வரும்.

சிறுவினா

'இன்பத்தமிழ்க் கல்வி' - பாடலின் மையக்கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

விடை: பாரதிதாசன் கவிதை எழுத ஏட்டினை எடுத்தார். வானம் தன்னைக் கவிதையாக எழுதும்படிக் கூறியது. நீரோடை, தாமரை, காடு, வயல், மேகம் ஆகியன அவரைக் கவர்ந்து தங்களைக் கவிதை எழுதும்படி அவரிடம் வேண்டியது.மயில் போன்ற பெண்கள் அன்பைக் கவிதையாக எழுதும்படிக் கூறினர். தென்றல், மயில், அன்னம், கதிரவன். வீரர்கள் ஆகியனவும் அவரிடம் கவிதை எழுத வேண்டின

சிந்தனை வினா

தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத்  தொகுத்து எழுதுக.

விடை:

ü  ளிதில் பொருள் விளங்கி நன்கு பாடப்புரிதல் ஏற்படும்.

ü  பழந்தமிழ் கலை, பண்பாடு, மரபு ஆகியன காக்கப்படும்.

ü  தொன்மையையும் வரலாற்றையும் நன்கு உணரலாம்.

ü  விழுமிய தமிழ்ச்சிந்தனைகளை அறியலாம்.

அழியாச் செல்வம்  (பக்க எண்: 30 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒருவர் தம் குழந்தை களுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____.

அ) வீடு   ஆ) கல்வி   இ) பொருள்   ஈ) அணிகலன்

2. கல்வியைப் போல் _____ செல்வம் வே றில்லை .

அ) விலையில்லாத ஆ) கேடில்லாத   இ) உயர்வில்லாத   ஈ) தவறில்லாத

3. ‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) வாய்த்து + ஈயின்   ஆ) வாய் + தீயின்   இ) வாய்த்து +தீயின்   ஈ) வாய் + ஈயின்

4. ‘கே டில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கே டி + இல்லை  ஆ) கே +இல்லை   இ) கேள்வி + இல்லை  ஈ) கேடு + இல்லை

5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) எவன்ஒருவன்   ஆ) எவன்னொருவன்  இ ) எவனொருவன்   ஈ) ஏன்னொருவன்

குறுவினா

கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

விடை:  கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் பிறரால் கொள்ளப்படாது. கொடுத்தாலும்  குறையாது, அரசரால் கவர முடியாது.

சிறுவினா

கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

விடை: கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது.ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது

சிந்தனை வினா

கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?’ – சிந்தித்து எழுதுக.

விடை:

1. நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.

2. திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது.

3. கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.

   - எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால்கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.

வாழ்விக்கும் கல்வி  (பக்க எண்: 35 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காலத்தின் அருமையை க் கூறும் திருக்குறள் அதிகார ம் ______.

அ) கல்வி   ஆ) காலமறிதல்   இ) வினையறிதல்    ஈ) மடியின்மை

2. கல்வியில்லாத நாடு ________ வீடு.

அ) விளக்கில்லாத  ஆ) பொருளில்லாத  இ) கதவில்லாத  ஈ) வாசலில்லாத

3. ‘பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ________.

அ) திருக்குறளார்   ஆ) திருவள்ளுவர்   இ) பாரதியார்   ஈ) பாரதிதாசன்

4. ‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ ) உயர் + வடைவோம்  ஆ) உயர் + அடைவோம்  இ) உய ர்வு + வடைவோம்   ஈ) உயர்வு + அடைவோம்

5. இவை + எல்லா ம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

அ) இவை எல்லாம் ஆ) இவையெல்லாம்   இ) இதுயெல்லாம்   ஈ) இவயெல்லாம்

சொற்றொடரில் அமை த்து எழுதுக.

1. செல்வம்  - கல்வியே அழியாத செல்வம் ஆகும்.

2. இளமைப்பருவம் – கற்றலுக்கு உகந்த பருவம் இளமைப்பருவம் ஆகும்.

3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்

குறுவினா

1. மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

விடை: எதிர்காலத்தில் பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச்சொல்ல முடியும். ஆனால், மனிதப் பிறவியின் எதிர்காலத்தைக் கூறவே முடியாது. இதுவே மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

2. கல்வி அறிவு இல்லாத வர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?

விடை: கல்வி அறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

3. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

விடை: படிக்க வேண்டிய நூல்களை நன்கு ஆழ்ந்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க  வேண்டும்.

சிறுவினா

1. கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.

விடை: உலகில் எல்லாச் செல்வங்களும் அழிந்துவிடும். இருபது இருபத்தைந்தாண்டுக்கு முன் இங்கு இருந்த ஆலமரம் எங்கே என்றால் புயலில் விழுந்துவிட்டது என்போம்,இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால், மழையால் இடிந்து விட்டது என்பர். 10 ஆண்டுக்கு முன் 2 இலட்சம் ரூபாய் வைத்திருந்தவர். இன்று இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்போம்.

      எல்லாம் அழியும். ஆனால் கல்வி அப்படியன்று. 10 ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்றவர் இன்று 10ம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கல்வி அழியாதது. வள்ளுவரும் "கேடில் விழுச்செல்வம் கல்வி * என்கின்றார்.

2. கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார் ?

விடை: சுல்வி ஓர் ஒளிவிளக்கு, இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி, கல்வி இல்லாதநாடு விளக்கில்லாத வீடு விளக்கில்லாத வீட்டில்யார் குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள்.

சிந்தனை வினா

நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை ?

விடை:

v  உண்மைப் பொருளை விளக்க வேண்டும்.

v  நன்னெறிப் பாதை காட்ட வேண்டும்.

v  அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இருக்க வேண்டும்.

v  எளிமை, தெளிவு ஆகியவை கொண்ட நடையில் இருத்தல் வேண்டும்

                -ஆகியன நல்ல நூலின் இயல்புகளாக நான் கருதுவன ஆகும்.

பள்ளி மறுதிறப்பு  (பக்க எண்: 39 மதிப்பீடு)

மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

     சுப்ரபாரதிமணியன் இயற்றிய 'பள்ளி மறுதிறப்பு* சிறுகதையில் மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கமாகக் காண்போம்.

மதிவாணனும் கவினும்

     மதிவாணனும் கவினும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கோடைவிடுமுறையில் ஒன்றரை மாதம் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றனர். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. வேலைக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர், கவின் தான் மீண்டும் பள்ளிக்குப் போவதில்லை. வாராவாரம் சம்பளம், திரைப்படம் பார்க்க காசு, பரோட்டா, போண்டா, வீட்டில் யாரும் திட்டுவதில்லை. இந்த மகிழ்ச்சி போதும் என்றான். மதிவாணனும் சற்றே குழம்பினான்,

மதிவாணனின் சிந்தனை

     படிக்கின்ற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று மதிவாணன் உள்ளும் கனவுகள் இருந்தன. தொழிலாளியாகவே கடைசி வரைக்கும் இருக்க வேண்டுமா என்பதை நன்கு சிந்தித்தான். எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவரைப் போல உயர வேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தான்.

படிக்காதவரின் நிலை

      பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர். அங்கிருந்த சிறுவர்களிடம், இந்தப் பேருந்து நல்லூர் செல்லுமா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் கேட்டார். சிறுவர்கள் எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர். இது கூடப் படிக்கத் தெரியாதா என்றார் பெரியவர். அதற்கு ஒருவன் ஏன் உங்களுக்குப் படிக்கத் தெரியாத என்று கேட்டு, அனைவரும் சிரித்தனர். மதிவாணன் அவரிடம் நல்லூர் இது போகாது போகும் பேருந்து வரும் போது சொல்கின்றேன் என்றான்.இதையெல்லாம் பார்த்து கல்வி தான் தலைநிமிரச் செய்யும் என்பதை உணர்ந்து, பள்ளியை நோக்கி நடந்தாள் மதிவாணன்.

முடிவுரை :

    "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பதைப் புரிந்து கொண்டு இளமையில் மதிவாணன் கல்வி கற்க விருப்பம் கொண்டான். இன்று கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புக்காக இன்றே கல்வி கற்க வேண்டும்.

ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்  (பக்க எண்: 39 மதிப்பீடு)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.

அ) 40   ஆ) 42    இ) 44    ஈ) 46

2. 'எழுதினான்' என்பது _______.

அ) பெயர்ப் பகுபதம்  ஆ) வினைப் பகுபதம்  இ) பெயர்ப் பகாப்பதம் ஈ) வினைப் பகாப்பதம்

3. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.

அ) நான்கு   ஆ) ஐந்து   இ) ஆறு   ஈ) ஏழு

4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.

அ) பகுதி   ஆ) விகுதி   இ) இடைநிலை   ஈ) சந்தி

பொருத்துக.

விடை:

1. பெயர்ப் பகுபதம் – பெரியார்

2. வினைப் பகுபதம் - வாழ்ந்தான்  

3. இடைப் பகாப்பதம் - மன்  

4. உரிப் பகாப்பதம் - நனி

சரியான பகுபத உறுப்பை எழுதுக.

போவாள் – போ + வ் + ஆள்

போ - பகுதி          

வ் - எதிர்கால இடைநிலை        

ஆள் – பெண்பால் விகுதி  

நடக்கின்றா ன் - நட + க் + கின்று + ஆன்

ந ட - பகுதி

க் - சந்தி

கின்று – நிகழ்கால இடைநிலை

ஆன் – ஆண்பால் விகுதி

பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக.

1. பார்த்தான் – பார்+த்+த்+ஆன்

   பார் – பகுதி , த்- சந்தி , த்- இறந்தகால இடைநிலை , அ- பெயரெச்ச விகுதி

2. பாடுவார் – பாடு+வ்+ஆர்

    பாடு – பகுதி , வ் – எதிர்கால இடைநிலை , ஆர் – பலர்பால் விகுதி

குறுவினா

1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன ?

விடை: ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும்.  எ.கா. பூ

2. பதத்தின் இருவகை கள் யாவை ?

விடை: பகுபதம், பகாப்பதம் என பதம் இருவகைப்படும்.

3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை ?

விடை: பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

          அவையாவன : பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

சிறுவினா

1. விகுதி எவற்றைக் காட்டும்?

விடை: திணை, பால், முற்று , எச்சம்

2. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட் டுடன் விளக்குக.

விடை: பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

           (எ.கா.) வந்தனன் - வா(வ) + த்(ந்) + த் + அன் +அன்

வா - பகுதி, இது '' எனக் குறுகி இருப்பது விகாரம்

த்- சந்தி, இது 'ந்' எனத் திரிந்து இருப்பது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

அன் - சாரியை

அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

3. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை ?

விடை:

பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும். அவையாவன:

1. பெயர்பெயர்ப்பகுபதம்

2. இடப்பெயர்ப்பகுபதம்

3. காலப்பெயர்ப்பகுபதம்

4. சினைப்பெயர்ப்பகுபதம்

5. பண்புப்பெயர்ப்பகுபதம்

6. தொழில்பெயர்ப்பகுபதம்

   சான்று: அவன், அவர் அவர், அவர்கள், அது, அவை, இவன், அவள், இை

மொழியை ஆள்வோம்  (பக்க எண்: 44)

கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களாக வகைப்படுத்துக.

   நல்லூர், வடை, கேட்டல் , முகம், அன்னம், செம்மை , காலை , வருதல் , தோகை ,பாரதிதாசன், பள்ளி, இறக்கை , பெரியது, சோலை , ஐந்து மணி, விளையாட்டு, புதன்

சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

   (அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)

1. உன் பெயர் என்ன?

2. நாம் ஏழாம் வகுப்பு மாணவர்கள்,

3. அவை எப்படி ஓடும்.

4. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.

5. அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பின்வரும் தொடர்களில் மூவிடப்பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக

1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது 

2. இவர்தான் உங்கள் ஆசிரியர்.

3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை.

4. எனக்கு அது வந்ததா என்று தெரியவில்லை.நீயே கூறு 

5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?

தன்மை – எங்கள் , எனக்கு, நானும்

முன்னிலை – நீர் , உங்கள், நீ, உங்களோடு

படர்க்கை – இவர் , அது

கடிதம் எழுதுக

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமை த்துத்தர வே ண்டி நூலக ஆணை யருக்குக் கடிதம் எழுதுக.

நூலகம் அமைத்துத் தர வேண்டி மடல்

அனுப்புநர்

   ச.முகிலன்,

   4,பாரதிநகர்,

   திருத்தணி-1

பெறுநர்

   ஆணையர் அவர்கள்,

   பொதுநூலகத் துறை.

   சென்னை - 600 002.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்.

    வணக்கம், எங்கள் பாரதி நகர் திருத்தணியின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க எங்கள் பகுதியில் நூலகம் இல்லை. அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறியவும் எங்களால் இயலவில்லை. எனவே எங்கள் அறிவுக் கண்களைத் திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றி பல

. இப்படிக்கு தங்கள்

உண்மையுள்ள,

ச.முகிலன்.

 

இடம் : திருத்தணி,

நாள் : 01-10-2023.

உறைமேல் முகவரி

பெறுநர் :

    ஆணையர் அவர்கள்,

   பொதுநூலகத் துறை.

   சென்னை - 600 002.

கீழே உள்ள குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டத்தில் எழுத்துகளை நிரப்புக.

1. காலை யில் பள்ளி மணி ஒலிக்கும்

2. திரைப்படங்களில் விலங்குகள் நடிக்கும் காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

3. கதிரவன் காலையில் கிழக்கே உதிக்கும்

4. நாள்தோறும் செய்தித்தாள் படிக்கும் வழக்கம் இருக்க வேண்டும்.

ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.

1.  புல்லை மேயும்

2. தீ சுடும்.

3. கை பேசும்.

4.  பறக்கும் .

5. பூ  மணம் வீசும்.

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.

(எ.கா.) தா - கொடு

தீ - நெருப்பு

பா- பாடல்

தை - மாதம்

வை- புல்

மை- அஞ்சனம்

பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.

 (ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி)

(எ.கா.) ஆறு

1. ஆறு கால்களை உடையது.

    தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.

2.விளக்கு

   பாடலின் பொருள் விளங்கியது.

   அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர்.

3..படி

   வாயிற் படியில் அமராதே!

   இளமையிலேயே படிக்க வேண்டும்.

4.சொல்

   மூத்தோர் சொல் அமுதம்.

   தஞ்சை சொல்) வளம் மிகுந்தது.

5. கல்

   காய்த்த மரம் கல் அடிபடும்.

   இளமையில் கல்.

6. மாலை

    மாலைநேரத்தில் விளையாட வேண்டும்.

    பூமாலை தொடுத்தாள்.

7.இடி

   இடி மின்னலுடன் மழை பெய்தது.

   மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது.

 இயல்-2 க்கான வினா விடைகளை பதிவிறக்க👇

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை