6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 3 RD WEEK

          6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 20-11-2023 முதல் 24-11-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  மூன்றாம் வாரம்                             

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1. நானிலம் படைத்தவன்

                                             2. கடலோடு விளையாடு

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø தமிழரின் பண்டைய வணிகம் குறித்து அறிதல்

       @ பல்வேறு தொழில்கள் குறித்து அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø மலைப்பகுதிகளில் பயணம் செய்துள்ளீர்களா? என்ற வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து நானிலங்களை அறிமுகம் செய்தல்

4.படித்தல்  :             

  • செய்யுள்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

நானிலம் படைத்தவன்



கடலோடு விளையாடு


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
@  காடுகளில் வாழ்ந்த மனிதன் அக்காடுகளைத் திருத்தி விளைநிலங்களை உருவாக்கினான். பயிர்களை விளைவித்தான். ஊ ர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்தான் . பல்வகைத் தொழில்கள் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொ ண்டான். தொழிலும் வணிகமும் அவன் வாழ்க்கையை உயர்த்தின.
@ மீன்வர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் யாது?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. தமிழன் எதற்கு அஞ்சினான்?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

கடல் சார்ந்த படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்கச்செய்தல்

12.கற்றல் விளைவு:

   Ø 611 - ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

@ 612பல வடிவங்களில் எழுதப்பட்ட  இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்றஇறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை