7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 20-11-2023 முதல் 24-11-2023
மாதம் : நவம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஒரு வேண்டுகோள்
2. கீரைப்பாத்தியும், குதிரையும்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø கலைகளின் இன்றியமையாமையைக் கவிதையின் வாயிலாக அறிதல்
@ இருபொருள் தரும் வகையில் அமைந்த பாடலின் சொல் நயங்களை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø கீரைகள் எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன ? என்ற வினாவைக்கேட்டு, பாடத்தை அறிமுகம் ச்ய்தல்
4.படித்தல் :
செய்யுள்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
ஒரு வேண்டுகோள்
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
நாளிதழ் அல்லது வார இதழ்களில் வெளியான கவிதைகளைத் தொகுத்துவரச் செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 709 - ஒன்றைப் படித்து முழுமையான பொருளை உணர்ந்த அதன் பயன்பாட்டினை கூறுதல்
@ 717- வெவ்வேறு சூழல்களில் மற்றவர்களால் கூறப்பட்ட சொற்களை( முறை சார்ந்த அல்லது தனி முறையிலான கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளின்போது வயதில் பெரியவர்கள் பயன்படுத்திய சொற்கள், தச்சர், குயவ,ர் துணிதுவைப்பவர், முடிதிருத்துவோர் போன்ற தொழிலாளிகளுடன் பெரியவர்கள் உரையாடும்போது கேட்ட சொற்கள்) வேறு சூழல்களில் நாம் விரும்பியவாறு எழுதுதலில் பயன்படுத்துதல்
Ø 714 - படிக்கும் போது வகுப்புத் தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் பாடப் பொருள்களைப் புரிந்து கொள்வதுடன் அகராதிகள் பார்வை நூல்கள் வரைபடங்கள் இணைத்தளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணை கொண்டு பொருண்மையைத் தெளிவாக அறிதல்