9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER 3 RD WEEK

            9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 20-11-2023 முதல் 24-11-2023        

மாதம்        நவம்பர் 

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. சந்தை

                                            2. ஆகுபெயர்

1.கற்றல் நோக்கங்கள்   :

  @ மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø உங்கள் ஊரின் அருகில் சந்தை நடைபெறுகிறதா ?

      Ø மல்லிகை  சூடினாள் - இதில் மல்லிகை என்பது பூவா? செடியா ?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ தலைமுறை தலைமுறையாகப் பொருள்களை விற்பவர் – வாங்குபவர் உறவு வளர்த்த சந்தை வணிகம் அறியப்படவேண்டிய ஒன்ற

@  ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ஆகுபெயர்கள் பதினாறாக வகைப்படு த்தப்பட்டுள்ளன

5.ஆசிரியர் செயல்பாடு              :

     @  சந்தை வெவ்வேறு ஊர்களில் எவ்வாறெல்லாம் நடைபெறும் என்பதை வேறுபடுத்திக் கூறுதல், களப்பயணம் அழைத்துச்செல்லுதல்.

§  அன்றாடப்பேச்சு வழக்கில் ஆகுபெயர் பயன்படும் இடங்களைச் சுட்டி, இலக்கணப்பகுதியை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

சந்தை



ஆகுபெயர்

7.மாணவர் செயல்பாடு:

    Ø சந்தை நிகழ்வுகளைப்பற்றி தனது நண்பர்கள் அல்லது குழுவினருடன் கலந்துரையாடுதல்
   Ø  பேச்சுவழக்கில் இடம்பெறும் ஆகுபெயர்களைத் தொகுத்து வருதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    1. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   1. ஆகுபெயர் என்றால் என்ன ? சான்று தருக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  1. தலைக்கு ஒன்று கொடு- என்பதில் இடம்பெறும் ஆகுபெயரைச் சான்றுடன் விளக்குக.
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       @ 9036 - ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்து உரையாடலாக/கலந்துரையாடலாக வெளிப்படுத்துதல்.

Ø          @ 9037 - மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கையாளுதல்





 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை