சிறப்புத் திருப்புதல் தேர்வு 1 – இயல்
1,2,3
விடைக்குறிப்புகள்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
2) மெத்தவணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ)வணிகக்கப்பல்களும்ஐம்பெருங்காப்பியங்களும் ஆ) பெரும்வணிகமும், பெருங்கலன்களும்
இ) ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும் ஈ) வணிகக்கப்பல்களும்,
அணிகலன்களும்
3) வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் காய்வகை
அ) குலைவகை ஆ)
மணிவகை இ) கொழுந்துவகை
ஈ) இலைவகை
4) கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இத்தொடரில் இடம்பெற்ற தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே
அ) பாடிய; கேட்டவர் ஆ) பாடல்;
பாடிய இ) கேட்டவர்; பாடிய ஈ) பாடல்;
கேட்டவர்
5) ’உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’-
பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்
அ) உருவகம்,எதுகை ஆ) மோனை,எதுகை இ) முரண்,இயைபு ஈ)
உவமை,எதுகை
6) பாடு இமிழ் பனிக்கடல்
பருகி என்னும் முல்லைப்பாட்டுஅடி
உணர்த்தும் அறிவியல் செய்தி
அ)கடல்நீர் ஆவியாகி மேகமாதல் ஆ)கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல்நீர் ஒலித்தல் ஈ) கொந்தளித்தல்.
7) பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
8)பொருந்தும் விடைவரிசையைத்
தேர்ந்தெடுக்க.
அ)கொண்டல் - 1.மேற்கு
ஆ)கோடை - 2.தெற்கு
இ)வாடை - 3.கிழக்கு
ஈ)தென்றல் - 4.வடக்கு
அ) 1,2,3,4 ஆ) 3,1,4,2 இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2
9) பின்வருவனவற்றுள் முறையான
தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை
இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
10) ’சிலம்பு அடைந்திருந்த
பாக்கம் எய்தி’ –என்னும் அடியில் பாக்கம் என்பது
அ) புத்தூர் ஆ) மூதூர் இ) பேரூர் ஈ) சிற்றூர்
11) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை
வேறுபடுத்துவது
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
தென்னன் மகளே! திருக்குறளின்
மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
12) இப்பாடலில் தென்னன் என்பது யாரைக் குறித்தது?
அ) சோழன் ஆ) பாண்டியன் இ) சேரன் ஈ) பல்லவன்
13) மகளே என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) பெயரெச்சத் தொடர் இ)
விளித்தொடர் ஈ)எண்ணும்மை
14) நற்கணக்கே
-பிரித்து எழுதுக
அ) நற்+கணக்கே ஆ) நல்+கணக்கே இ) நல்க்+கணக்கே ஈ)
நல்ல+கணக்கே
15) எதுகை நயத்தைத்
தேர்ந்தெடு
அ) தென்னன்-இன்னறு ஆ)
தென்னன்- மகளே இ)
மன்னும்-சிலம்பே ஈ) முடி-மணி
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)
16) வசன கவிதை என்பது
யாது?
விடை: செய்யுளும் , உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது வசன கவிதை.
17)
விடை: சீவக சிந்தாமணி , வளையாபதி, குண்டலகேசி
18)
'நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் -
மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு
வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள்
விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
விடை: காற்று
உயிருக்கு நாற்று,
தூய காற்று அனைவரின் உரிமை
19)
விருந்தினரை
மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
விடை: வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்
20)
பெற்றோர்
வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை
எழுதுக
விடை: தம்பி,
அழாதே! அம்மா இப்போது வந்து விடுவார், வரும்போது தின்பண்டங்கள் வாங்கி வருவார்
21)’அருமை’ எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
விடை:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:
22) வேங்கை என்பதைத்
தொடர்மொழியாகவும்,பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
விடை:
ü வேம் +
கை என்பது கையைக் குறிக்கும் தொடர்மொழி
ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும் குறித்தது (
பொதுமொழி)
23) தேன், நூல்,
பை, மலர், வா- இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.
விடை: தேன் எடுத்தான் , நூல்
படித்தான், பையில் வைத்தான், மலர்
கொய்தான், அருகில் வா
24) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊரிய
செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
விடை: தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பதி காரமதை
ஊணிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே”
25) 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது.
'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
விடை: சிரித்துச்
சிரித்துப் பேசினார்
26) கீழ்க்காணும் சொற்களின்
கூட்டப்
பெயர்களைக் கண்டுபிடித்து
எழுதுக.
அ. கல், ஆ. ஆடு
விடை: அ. கற்குவியல்
ஆ. ஆட்டு மந்தை
27) தண்ணீர்
குடி,
தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களைவிரித்து எழுதுக; தொடரில் அமைக்க.
விடை:
ü தண்ணீரைக்குடி – அழகன் தண்ணீரைக்குடித்தான்
ü தயிரை உடைய குடம் - தயிரை உடைய குடம் உடைந்தது
28)கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க : 1. Consonant 2. Land Breeze
விடை: 1. மெய்யெழுத்து
2. நிலக்காற்று
பகுதி-3 (மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29)புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.
-இது போல் இளம்பயிர்வகை ஐந்தின்
பெயர்களை எழுதுக.
விடை:
அ) நாற்று- நெல்
நாற்று நட்டேன்.
ஆ)
கன்று-
வாழைக்கன்று வளர்த்தேன்
இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது
ஈ) வடலி-பனைவடலியைப்
பார்த்தேன்.
உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.
30)
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும்
அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும்
புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதை சில இடங்களில் காணமுடிகிறது.காலமாற்றம்,
தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை
எழுதுக.
விடை:
ü
தமிழரின் பண்டைய விருந்தோம்பல் பண்பில்
நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ü
புதிதாக வருபவர் விருந்தினர் என்றநிலை
மாறி நன்கறிந்தவர்களே விருந்தினராகக் கருதப்படுகின்றனர்.
ü
வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு
மாறிவிட்டன.
31) பத்தியைப்
படித்து விடை எழுதுக
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற
நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு,
இல்லறம், பெண்களுக்குரிய
பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில்
அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. ‘இல்லொழுக்கங்
கூறிய’ பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாகஇடம்பெற்றுள்ளது.
முத்துக் குளிக்கும் கொற்கையின்
அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தஇவர்
இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலானவெற்றி வேற்கை
என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்றபட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம்,
லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம் ஆகியனவும் இவர் இயற்றிய
நூல்கள்.
1.
காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் யாது?
விடை : காசிக்காண்டம்
2. முத்துக்குளிக்கும் நகரம் எது?
விடை:
கொற்கை
3. சீவலமாறன் என்பது யாருடைய பட்டப்பெயர்?
விடை: அதிவீரராம
பாண்டியன்
பிரிவு-2 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34
கட்டாய வினா)
32) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
விடை:
ü பழமையான
நறுங்கனி
ü பாண்டியன்
மகள்
ü சிறந்த
நூல்களை உடைய மொழி
ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி
33) கூத்தனைக் கூத்தன்
ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
விடை:
ü நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்
ü ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று
நன்னனின் நாட்டை அடைக.
ü அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று
கூறுங்கள்.
ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்
34) அ) சிறுதாம்பு…. எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக. (அல்லது)
ஆ) விருந்தினனாக…….
எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
விடை:
அ.
சிறுதாம்பு தொடுத்த பசலைக்கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று
உய்த்தர
இன்னேவருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்.
ஆ.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற
இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
பிரிவு-3 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:
செய்க பொருளைச் செறுநர்
செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
விடை:
சீர் |
அசை |
வாய்பாடு |
செய்க |
நேர்+நேர் |
தேமா |
பொருளை |
நிரை+நேர் |
புளிமா |
செறுநர் |
நிரை+நேர் |
புளிமா |
செருக்கறுக்கும் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
எஃகதனிற் |
நேர்+நிரை+நேர் |
கூவிளங்காய் |
கூரிய |
நேர்+நிரை |
கூவிளம் |
தில் |
நேர் |
நாள் |
இத்திருக்குறள் “ நாள்” எனும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது
,36) 'கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' - இத்தாலாட்டுப் பாடலில்
அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
விடை:
'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்
மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்
பாடினேன் தாலாட்டு –வினைமுற்றுத்தொடர்
மாம்பூவே - விளித்தொடர்
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர்
37) தீவக அணியைச்
சான்றுடன் விளக்குக.
விடை:
அணி இலக்கணம்:
தீவகம்- விளக்கு. விளக்கு போல செய்யுளின் ஓரிடத்தில் உள்ள சொல் பல இடங்களுக்கும் சென்று
பொருள் தருவது தீவக அணி
சான்று:
“சேந்தன வேந்தன் திருநெடுங்கண் ,தெவ்வேந்தர்
-------------------------------------”
பொருள்:
அரசனுடைய கண்கள் , பகைவரின் தோள்கள், திசைகள்,
அம்புகள், பறவைகள் ஆகியவை சிவந்தன
அணிப்பொருத்தம்:
” சேந்தன” என்ற சொல்
செய்யுளின் பல இடங்களுக்கும் சென்று பொருள் தந்தது
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38) அ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும்,,பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
விடை:
மனோன்மணியம் சுந்தரனாரின்
வாழ்த்துப்பாடல்:
ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.
ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும் உள்ளது.
ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.
ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம்.
பெருஞ்சித்திரனாரின்
வாழ்த்துப்பாடல்:
ü
அழகான அன்னை மொழி
ü
பழமையான நறுங்கனி
ü
பாண்டியன் மகள்
ü
சிறந்த நூல்களை உடைய மொழி
ü
பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை
வாழ்த்துவோம்.
(அல்லது)
ஆ) முல்லைப்பாட்டு
உணர்த்தும் கார்காலச்செய்திகளை விவரித்து எழுதுக.
விடை:
ü
மேகம் மழையைப் பொழிகிறது
ü
திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது
மேகம்.
ü
கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள்
நற்சொல் கேட்டனர்.
ü
இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.
ü
தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்
39) அ) மாநில
அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசுபெற்ற தோழனை வாழ்த்தி
மடல் எழுதுக.
விடை:
1. வாழ்த்து மடல்
சேலம்,
03-03-2021.
அன்புள்ள நண்பனுக்கு,
நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்
நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
அ அ அ அ அ அ அ .
உறைமேல் முகவரி;
பெறுதல்
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி தெரு,
சேலம்.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில்
வழங்கப்பட்டஉணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரியசான்றுகளுடன்
உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
விடை:
2. புகார் விண்ணப்பம்
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
சேலம் – 636001
ஐயா,
பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் நேற்று
சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும்
இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல்
நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி.
இணைப்பு: இப்படிக்கு,
1. விலை இரசீது – நகல்
தங்கள் உண்மையுள்ள,
2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ.
இடம் : சேலம்
நாள் :
04-03-2021
|
உறை மேல் முகவரி:
40) அ) எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை
2. எறும்புந்தன் கையால் எண் சாண்
3.ஐந்து சால்பு ஊன்றிய தூண்
4.நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
5.ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு
வகுப்பது பரணி
விடை:
செய்யுள் அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ் எண் |
நாற்றிசையும் செல்லாத நாடில்லை |
நான்கு |
ச’ |
எறும்புந்தன் கையால் எண் சாண் |
எட்டு |
அ |
ஐந்து சால்பு ஊன்றிய தூண் |
ஐந்து |
ரு |
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி |
நான்கு,இரண்டு |
ச’ , உ |
ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி |
ஆயிரம் |
க000 |
(அல்லது)
ஆ)மொழிபெயர்க்க:
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard.
I have come here to say a few words about our Tamil culture. Sangam literature
shows that Tamils were best in culture and civilization about two thousand
years ago. Tamils who have defined grammar for language have also defined
grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils
throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though
our culture is very old, it has been updated consistently. We should feel proud
about our culture. Thank you one and all.
விடை:
மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.
41)நூலக உறுப்பினர்
படிவத்தை நிரப்புக.
விடை:
42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
விடை:
அன்பைச் சொல்லும் காட்சி
ஆர்வம் தூண்டும் காட்சி
இன்பம் கூட்டும் காட்சி
ஈகை உணர்த்தும் காட்சி
உள்ளம் மகிழும் காட்சி
ஊக்கம் உட்டும் காட்சி
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43) அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான
தேவைகுறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.
விடை:
தமிழ்ச்சொல்
வளம்:
v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது.
v திராவிட
மொழிகளில் மூத்தது.
v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.
v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும்.
தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை:
v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.
v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.
v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப
தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு
வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
விடை:
விருந்தினரை வரவேற்றல்:
என்னுடைய இல்லத்திற்கு வருகை
தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம் விசாரித்து அவர்
குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன்.
உணவுண்ண அழைப்பு:
உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன்.
வாழை இலையில் விருந்து:
தலைவாழை இலை விருந்து என்பது
தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில் உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும்
உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த
பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்திருந்தேன்.
உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன்.
வெற்றிலை பாக்கு:
உணவு உண்ட உறவினரை ஒரு
பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத்
தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு
தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
வழியனுப்புதல்:
உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன்.
44) அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்
பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
விடை:
கோபல்லபுரத்து மக்கள்
முன்னுரை:
கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம்.
அன்னமய்யாவும், இளைஞனும்:
சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.
இளைஞனின்
பசியைப் போக்கிய அன்னமய்யா:
அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான்.
அன்னமய்யாவின்
மனநிறைவு:
புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.
அன்னமய்யாவின்
பெயர் பொருத்தம்:
இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று
கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள்
நினைத்துக் கொண்டான்.
முடிவுரை:
அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.
(அல்லது)
ஆ) புயலிலே
ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும்
ஒலிக்குறிப்புச் சொற்களும்
புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?
விடை:
முன்னுரை:
கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர்
,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்.
புயல்:
கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது
வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.
தொங்கானின்
நிலை:
அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு
இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.
கரை
காணுதல்:
அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ
ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை
நெருங்கியது.அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து
வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.
சீட்டு
வழங்குதல்:
பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று
பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி
முத்திரை இட்டுத்தந்தார்.
முடிவுரை:
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.
45) அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை - சாலைப்பாதுகாப்பு உயிர்ப்பாதுகாப்பு-சாலை விதிகள்-ஊர்தி ஓட்டுநருக்கான நெறிமுறைகள்-விபத்துகளைத் தவிர்ப்போம்-விழிப்புணர்வைத் தருவோம்-முடிவுரை
விடை:
முன்னுரை:
சாலை பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரச்சினையாக
உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி விவரத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1.10
இலட்சம் மக்ள் விபத்தினால் உயிர் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சி
தரும் செய்தியாகும்.
சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு:
ஆண்டுதோறும் சனவரி
முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது வாகன
ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகிறது. சாலை பாதுகாப்பு என்பது உயிர்
பாதுகாப்பு.
சாலை விதிகள்:
ü போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு
விளக்கு எரிந்தால் நிற்கவும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைச் கடக்கத் தயாராக இருக்கவும். பச்சை
விளக்கு எரிந்தால் செல்லவும் வேண்டும்.
ü தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும்
நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.
ஊர்தி ஓட்டுநருக்கான
நெறிகள்:
ü ஊர்தி ஓட்டுநர் சாலையின் இடது
புறத்திலேயே வாகனங்களைச் செலுத்துதல் வேண்டும்.
ü 'U'
திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக் கூடாது.
ü அனுமதிக்கப் பட்ட இடங்களில் தான்
வாகனங்களைத் திருப்ப வேண்டும்.
விபத்துகளைத்
தவிர்ப்போம், விழிப்புணர்வு
தருவோம்:
வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துதல் கூடாது.
நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது, ஓட்டுநர்
மற்றும் பயணிகள் வார்பட்டை அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வானகத்தை இயக்கக்
கூடாது.
முடிவுரை:
மக்கள் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து,
சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் விலை மதிப்பு மிக்க
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க முடியும்.
(அல்லது)
ஆ) குமரிக்
கடல்முனையையும் வேங்கடமலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்
திருநாட்டிற்குப்
புகழ்தேடித்தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும்
அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம்
சமைத்து, பரணி பாடி,கலம்பகம் கண்டு,
உலாவந்து, அந்தாதி கூறி,கோவை
யாத்து,அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர்
புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாக் கொண்டு
‘சான்றோர் வளர்த்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை
எழுதுக.
விடை:
1. சான்றோர் வளர்த்த தமிழ்
குறிப்புச்சட்டகம் |
முன்னுரை |
தமிழின் தொன்மை |
சான்றோர்களின் தமிழ்ப்பணி |
தமிழின் சிறப்பு |
முடிவுரை |
முன்னுரை:
சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
தமிழின் தொன்மை:
Ø தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார்.
Ø கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி
தமிழ்.
சான்றோர்களின் தமிழ்ப்பணி:
Ø ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச்
செய்தார்.
Ø வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்
Ø தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை
அச்சிட்டு வெளியிட்டார்.
தமிழின் சிறப்புகள்:
Ø தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி.
Ø இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.
Ø தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.
முடிவுரை:
சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.